தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.10

2010 இல் இந்தியா கண்ட முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

4- ஆந்திராவை கலவர பூமியாக்கிவிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவை நாடு கடத்த வேண்டும் என்று மறைந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவி்ன் மனைவியும் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவியுமான லட்சுமி பார்வதி கூறினார்.

6- கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.

- சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமர்சிங் விலகினார்.

7 - ஸ்ரீநகரில், ஒரு ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த 23 மணி நேர சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

- உடல் நிலை குன்றி கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் பார்த்தார்.

- ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றது.

9- சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து சஞ்சய் தத் விலகினார்.

12 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது.

17 - ஜோதிபாசுவின் உடல் கொல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

18 - 44 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

20 தெலுங்கானாவில் வெடித்த கலவரத்திற்கு 10 மாவட்டங்கள் முடங்கிப் போயின.

23 - டெல்லியில் தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. பாலா சிறந்த இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.

25 - இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

31 - மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகினி என்பவர் நியூசிலாந்தில் சிலரால் குத்திக் கொல்லப்பட்டார்.

பிப்ரவரி

1 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணத்தை உறுதி செய்யும் ஆவணத்தை இலங்கை அரசு சிபிஐக்கு அனுப்பியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

2- சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து அமர்சிங்கும், ஜெயப்பிரதாவும் இன்று நீக்கப்பட்டனர். இருவரையும் ஊடுறுவல்காரர்கள் என்று அக்கட்சி சாடியது. கட்சிப் பெயரை இருவரும் கெடுத்து விட்டதாகவும் சமாஜ்வாடிக் கட்சி கூறியது.

8- சிறுமி ருசிகா கற்பழிப்பு வழக்கில் சாதாரண அளவிலான தண்டனை பெற்ற மாஜி டிஜிபி ரத்தோரை, இன்று சண்டிகர் கோர்ட் வளாகத்தில் தேசிய வடிவமைப்புக் கழக முதுநிலை மாணவர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

9 - பாஜக தலைவராக நிதின் கத்காரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

12 - சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் திரைப்படம் பெரும் பதட்டம், பரபரப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் திரையிடப்பட்டது.

13 - மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

14- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானாவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

15 - மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ முகாமில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

23 - பெங்களூர் கார்ல்டன் டவர்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் மேலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது உயிரிழந்தனர்.

மார்ச்

4 - உ.பி. மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 71 பேர் உயிரிழந்தனர்.

8 - நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

9 - லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படவில்லை.

ஏப்ரல்

1 - நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

6 - சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடாவில் சிஆர்பிஎப் படையினர் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் உயிரிழந்தனர்.

14 - ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ராக்கெட் திசை மாறி கடலில் போய் விழுந்தது.

17 - பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

18 - ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

23 - ரூ. 2 கோடி லஞ்சப் பணத்துடன் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டார்.

27 - பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக அதிகாரி மாதுரி கைது செய்யப்பட்டார்.

- பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின.

- பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மீது கோபம் கொண்ட பாஜக, ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது.

30 - ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர் பரோட் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மே

2 - கர்நாடக அமைச்சர்கள் பலரும் சர்ச்சைகளில் சிக்கி வருவதால் முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பா விலகக் கோரி அவரது வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் கல்வீசித் தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- ஐபிஎல் கொச்சி விவகாரத்தில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த சசி தரூர், வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.

3- மும்பைத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் கசாப் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தஹிளியானி அறிவித்தார். இணைக் குற்றவாளிகளான இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என கோர்ட் அறிவித்தது. மேலும், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஷகியூர் ரஹ்மான் லக்வி உள்பட 20 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு தெரிவித்தது.

- நான்கு வருடங்களாக தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறினார்.

- நண்பரின் மனைவியை கற்பழிக்க முயன்ற கர்நாடக உணவுத்துறை அமைச்சர் ஹாலப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

5- உண்மை கண்டறியும் சோதனை, மூளை வரைபட சோதனை, நார்கோ அனாலிசிஸ் போன்றவற்றை நடத்துவது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

- கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் இணைந்தார்.

- ஐபிஎல் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய அமைச்சர் சரத் பவாரையும் பிரதிவாதியாக சேர்க்குமாறு பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

- மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் தனி நீதிபதி தஹிளியானி.

- சாமியார் நித்தியானந்தா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு பெங்களூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

- டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாவோயிஸ்ட் ஆதரவு மாணவி விபா என்பவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 - கிருஷ்ணா கோதாவரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிகள் இடையே ஏற்பட்ட மோதலில் முகேசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 நீதிபதிகள் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் 2:1 என்ற விகிதத்தில் முகேசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

8 - நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவும், சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் உடன்பாடு செய்து கொண்டன.

10 - குஜராத் கலவர வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

11 - வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.

12 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.எச். கபாடியா பொறுப்பேற்றார்.

15 -முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்தார்.

- ஊழல் புகார்கள் காரணமாக இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டது.

22 - மங்களூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல உடல்கள் அடையாளமே தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டன. 8 பேர் உயிர் பிழைத்தனர்.

28 - மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் இரு ரயில்கள் மோதி 148 பேர் பலியானார்கள்.

30 - பெங்களூர் வாழும் கலை அமைப்பின் ஆசிரமத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் காயமின்றித் தப்பினார்.

- ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சிபு சோரன் விலகினார்.

ஜூன்

2 - மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

7 - போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் ஆன்டர்சன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கும் மேலும் 6 பேருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சைகளையும், நாட்டு மக்களிடையே கொதிப்பையும் உருவாக்கியது.

24 - பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

28 - இந்தியா, கனடா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜூலை

1 - திருப்பதி கோவிலுக்கு கிருஷ்ண தேவராயர் அன்பளிப்பாக வழங்கிய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக பரபரப்பு ஏற்பட்டது.

3 - தெலுங்கானாவுக்கு எதிராக பேசுபவர்களின் தலையை வெட்டுவேன் என்று ஆவேசமாக பேசிய நடிகை விஜயசாந்தி கைது செய்யப்பட்டார்.

15 - ரூபாய்க்கான புதிய குறியீடு வெளியிடப்பட்டது. தமிழரான உதயக்குமார் இந்த குறியீட்டை வடிவமைத்திருந்தார்.

24 - சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

27 - புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமிக்கப்பட்டார்.

- ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி, முருகன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

- தெலுங்கானா பகுதியில் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன.

- இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால் கேல் ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆகஸ்ட்

6 - ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

10 - காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

11 - ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தது.

15 - ஸ்ரீநகரில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியின்போது முதல்வர் உமர் அப்துல்லா மீது ஷூ வீசப்பட்டது.

17 - கர்நாடக குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரளாவின் அப்துல் நாசர் மதானி கொல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர்

2 - காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7 - ஊழல் வழக்கில் சிக்கிய பி.ஜே. தாமஸ் எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

- ரஷ்யாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில், 66 கிலோ பிரிவில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

11 - ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அர்ஜூன் முண்டா பதவியேற்றார்.

13 - காஷ்மீரில் வெடித்த கலவரத்தில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

- தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

- காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி வைக்க பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

- தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் அறிவிக்கப்பட்டார். பசங்க படம் 3 விருதுகளைப் பெற்றது. சிறந்த பின்னணி இசைக்கான விருது இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்தது.

19 - டெல்லி ஜும்மா மசூதியில் 2 மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

- மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக குத்துச் சண்டைப் போட்டியில், இந்தியாவின் மேரி கோம் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

20 - மத்தியப் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

- காஷ்மீர் சென்னை அனைத்துக் கட்சிக் குழு, பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தது.

21 - காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.

- 2008ம் ஆண்டுக்குப் பின்னர் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 20,000 புள்ளிகளைத் தாண்டியது.

23 - டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடிய வளாகத்தில் அமைந்த பளு தூக்கும் போட்டிக்கான அரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

- அயோத்திநில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்க உச்சநீதிமன்றம் ஒரு வார கால தடை விதித்தது.

24 - ஆமிர்கான் நடித்த பீப்ளி லைவ் படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது.

25 - காஷ்மீர் அமைதிக்காக 8 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

26 - தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 20-20 போட்டித் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. அந்த அணியின் முரளி விஜய்க்கு சிறந்த பேட்ஸ்மேனுக்கான தங்க பேட்டும், பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு சிறந்த பந்து வீச்சாளருக்கான தங்க பந்தும் பரிசாக கிடைத்தது.

29 - இந்திய மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

30 - 60 ஆண்டுகால அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பங்காக பிரித்து இரு பங்கை இந்து அமைப்புகளுக்கும், ஒரு பங்கு முஸ்லீம் அமைப்புக்கும் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

- இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.

அக்டோபர்

3 - பெரும் சர்ச்சைக்களுக்கு மத்தியில் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. தொடக்க விழாவைக் கண்டு உலகமே அதிசயித்தது.

5 - கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.

6 - அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என்று முஸ்லீம் சன்னி வக்பு வாரியம் அறிவித்தது.

- ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் வீரராக ஷேவாக் அறிவிக்கப்பட்டார்.

9 - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேர்வானது இந்தியா. பெரும் வாக்கு வித்தியாசத்தில் அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

11- கர்நாடக சட்டசபையில் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. கர்நாடக ஆட்சியைக் கலைக்கலாம் என்று கூறி சபாநாயகர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

12 - கர்நாடக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் உத்தரவிட்டார். அதை எதியூரப்பா ஏற்றார்.

14 - கர்நாடக சட்டசபையில் நடந்த 2வது நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

- டெல்லி காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்தது.

- டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர், பேட்டிங் தரவரிசையில் சச்சின் முதல் இடத்தைப் பிடித்தார்.

17 - காமன்வெல்த் போட்டி ஊழல்கள் குறித்த விசாரணையை வருமான வரி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடங்கினர்.

18 - தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.

19 - காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

21 - பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

22 - காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான கான்டிராக்டுகள் விடப்பட்ட விதம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

- தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டது.

25 - குதிரை பேரம் நடத்தி மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக தரப்பு விலைக்கு வாங்குவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து 3 அமைச்சர்கள், 4 பாஜக எம்.எல்.ஏக்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

26 - ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டன.

27 - கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணிக்கு பெரும் தோல்வி கிடைத்தது.

29 - கர்நாடக பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

30 - மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழலில் சிக்கிய முதல்வர் அசோக் சவான் சோனியா காந்தியை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

நவம்பர்

2 - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை நீடிக்கப்பட்டது சரியா என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டிரிப்யூனலின் தலைவர் நீதிபதி விக்ரம்ஜித் சென் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

- தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் மக்காயா நிடினி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

4 - மும்பை ஆதர்ஷ் சொசைட்டி வீட்டு ஊழல் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.

6 - 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் இந்தியா வந்தார்.

7 - பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

- விக்கிலீக்ஸ் தனது முதல் பரபரப்பு அமெரிக்க ஆவணங்களை வெளியிட்ட நாள் இது.

9 - ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணம் காட்டி இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை முடக்கின எதிர்க்கட்சிகள். கூட்டத் தொடரின் கடைசி நாளான டிசம்பர் 13ம் தேதி வரை நாடாளுமன்றம் சுத்தமாக இயங்கவில்லை.

10 - மகாராஷ்டிர மாநில புதிய முதல்வராக பிருத்விராஜ் சவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா மற்றும் அமைச்சகத்தின் செயல்பாடுகள் காரணமாக நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்தார். இந்தஅறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல்

சென்னை : அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் தொடர்பாக, இஸ்ரோவின் மூன்று பிரிவுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ), கடந்த 25ம் தேதி ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட் மூலம் ஜிசாட் - 5பி தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட சில வினாடிகளில், ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், ""ராக்கெட்டில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து ராக்கெட்டின் முதல் பகுதிக்கு கட்டளை சிக்னல்களை எடுத்துச் செல்லும் கேபிள் திடீரென அறுந்தது. இதனால், ராக்கெட்டிற்கு கட்டளைகளை அனுப்ப முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால், ராக்கெட் வெடிக்க வைக்கப்பட்டது,'' என்றார். இஸ்ரோ வழக்கமாக வெளியிடும் பத்திரிகை செய்திக்குறிப்பில், தோல்வி குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. "ஜி.எஸ்.எல்.வி., - எப்06/ஜிசாட் - 5பி திட்டம் வெற்றி பெறவில்லை' என, மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ""என்ன நடந்தது, எப்போது நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஏன் நடந்தது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார்.


ராக்கெட்டின் இரண்டாம் பகுதிக்கும், மூன்றாம் பகுதிக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ராக்கெட் தோல்வியடைந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள இஸ்ரோ செய்தித் தொடர்பாளர், "ஓரிரு நாட்களில் தோல்விக்கான காரணத்தை இஸ்ரோ வெளியிடும்' என்றார். இத்திட்டத்தில் இணைந்து செயல்பட்ட இஸ்ரோவின் அங்கங்களான, பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்(ஐ.எஸ்.ஏ.சி.,), திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்(வி.எஸ்.எஸ்.சி.,), ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம் (எஸ்.எச்.ஏ.ஆர்.,) ஆகிய மூன்று பிரிவினரும் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என, கூறப்படுகிறது. செயற்கைக்கோளால் பிரச்னையா, ராக்கெட் வடிவமைப்பு, உற்பத்தியில் பிரச்னையா, ராக்கெட் ஒருங்கிணைப்பில் பிரச்னையா என, விவாதம் நடந்து வருகிறது. செயற்கைக்கோளை உருவாக்கிய ஐ.எஸ்.ஏ.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட வி.எஸ்.எஸ்.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் ஒருங்கிணைக்கப்பட்ட எஸ்.எச்.ஏ.ஆர்.,ல் பிரச்னை ஏற்பட்டதா என, விசாரணை நடந்து வருகிறது.


"விஞ்ஞானிகள் ஆரம்பம் முதலே நம்பிக்கையில்லாமல் இருந்தனர்' என, ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவுவதற்கு ஏற்ற ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்றாம் பகுதியின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென ரஷ்ய விஞ்ஞானிகள் குழு வந்து, மூன்றாம் பகுதியின் திறனை அதிகரிப்பதில் உதவியுள்ளது. தோல்வியில் முடிந்த ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் தான், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் இதுவரை எடுத்துச் சென்ற செயற்கைக்கோள்களில் எடை அதிகமானவை. ஜிசாட் - 5பி-யானது 2,310 கிலோ எடை கொண்டது. இது 2007ல் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட இன்சாட் - 4சி.ஆர்., செயற்கைக்கோளை விட 180 கிலோ, 2003ல் ஏவப்பட்ட எஜுசாட் செயற்கைக்கோளை விட 400 கிலோ, 2001ல் ஏவப்பட்ட ஜிசாட் - 1 செயற்கைக்கோளை விட 800 கிலோ அதிக எடை கொண்டது. அதிக எடையின் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மையே, ராக்கெட்டின் தோல்விக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. "கேபிள் இணைப்புகள் அவ்வளவு எளிதாக அறுந்துபோகாது. கேபிள் இணைப்புகள் அந்த அளவிற்கு திடமாக பொருத்தப்பட்டிருக்கும். ராக்கெட்டே உடைந்தால் மட்டுமே கேபிள் இணைப்புகள் அறுபடும்' என, விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். சோதனை மற்றும் மறுசோதனை மூலமாக மட்டுமே எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்க்க முடியும் என மற்றொரு விஞ்ஞானி தெரிவித்தார்

குவைத் ராணுவ வீரர்கள் தாடி வளர்க்க அனுமதி

துபாய், டிச.30: குவைத் நாட்டின் ராணுவ வீரர்கள் தாடி வளர்க்கலாம் என அந்நாட்டு நாடாளுமன்றம் புதிய சட்டம் நிறைவேற்றியுள்ளது. குவைத் நாட்டின் ராணுவத்தில் ஆண்கள் தாடி வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ராணுவ வீரர்கள் தாடி வளர்ப்பது மீதான தடையை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கடந்த ஜூன் மாதம் தாடி வளர்க்க அனுமதிக்கும் நகல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதிருந்தே இதற்குப் பரவலான ஆதரவு இருந்தது தெரிய வந்தது. எனினும் அடுத்த 30 நாள்களில் இந்தத் தீர்மானத்தை அரசு நிராகரிக்கவும் குவைத் நாட்டு சட்டத்தில் இடமிருக்கிறது.

குவைத் வரலாற்றில் அதன் நாடாளுமன்றத்துக்கு முதல்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களில் மூன்று பெண் உறுப்பினர்கள் இந்த தாடி மசோதாவை ஆதரித்து வாக்களித்தார்கள். நான்காவது உறுப்பினர், நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது

30.12.10

ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது

டெஹ்ரான்,டிச.29:இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாதிற்காக பணியாற்றிய இளைஞர் ஒருவருக்கு ஈரான் மரணத் தண்டனையை நிறைவேற்றியது.

டெஹ்ரானில் எவின் சிறையில்வைத்து அலி அக்பர் ஸியாதத் என்ற மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல வருடங்களாக மொசாதிற்காக பணிபுரிந்த ஸியாதத் முக்கிய விபரங்களை மொசாதிற்கு அளித்துள்ளார். ஈரானை விட்டு வெளியேற முயன்றபொழுது கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டார் ஸியாதத்.

ஈரானின் ராணுவ ரகசியங்களைக் குறித்த செய்திகளை இவர் மொசாதிற்கு அளித்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் என இர்னா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதற்கு கூலியாக மொசாதிடமிருந்து ஸியாதத்திற்கு 60 ஆயிரம் டாலர் பணம் கிடைத்தது என இவர் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

ராணுவ மையங்கள், போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள், ஏவுகணைகள் ஆகியன தொடர்பான விபரங்களை இவர் இஸ்ரேலுக்கு அளித்துள்ளார். ராணுவ ரகசியங்கள் இவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இர்னா தெரிவிக்கவில்லை.

துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வைத்து இவர் மொசாத் ஏஜண்டுகளுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். தேசத்தை காட்டிக்கொடுப்பது ஈரானின் சட்டப்படி மரணத் தண்டனை விதிக்கும் குற்றமாகும்.

மொசாதிற்காக பணியாற்றிய டெலிகாம் பொறியாளர் அலி அஷ்தரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரான் மரணத்தண்டனை விதித்திருந்தது.

ஈரான் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்திய பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆர்கனைசேசன் ஆஃப் ஈரான்(பி.எம்.ஒ.ஐ) உறுப்பினர் அலி ஸரேமிக்கும் நேற்று மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்!

[ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ]

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.

இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?"

இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை.

இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.

FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?.

அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:

ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள்.

அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை.

இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.

இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.

இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.

ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.

►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய் (கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).

►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய் (விளம்பரதாரர், விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே!)

மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1) -19 ரூபாய்

HAIR OIL(500 ML) -95 ரூபாய்

SHAVING CREAM(70G) -86 ரூபாய்

OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்

FACE WASH -229 ரூபாய்

PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்

மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.

(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)

►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.

(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)

► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.

இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:

►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.

►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .

►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.

இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.

►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)

100 x 995 = 99500 ரூபாய்

இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.

3000 x 100 = 300000 ரூபாய்

அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).

இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.

இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.

300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.

லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.

இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.

source: http://thoppithoppi.blogspot.com/2010/12/amway.ஹ்த்ம்ல்

http://www.nidur.info/

திருவண்ணாமலையில் அடித்து விரட்டப்பட்ட நித்யானந்தா


நடிகைரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்ததால் புகழடைந்த செக்ஸ் சாமியார் நித்யானந்தா தனது பிறந்த ஊரான திருவண்ணாமலைக்கு இன்று காலை வந்தார்.

பாலியல், மோசடி வழக்குகளிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள சுவாமி நித்தியானந்தா, அந்த விவகாரத்திற்கு பின் வெளியூர்களுக்கு செல்லாமல் தனது ஆஸ்ரமத்தில் இருந்தபடி பிரசங்கம் நடத்தி வந்தார்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 29 ஆம் தேதி உலகின் எங்கிருந்தாலும் தனது சொந்த ஊரான திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். அதன்படி இன்று திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்தார். அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்குவந்த நித்தியானந்தா 7.50க்கு பூசைகளை முடித்து வெளியேறினார்

நித்தியானந்தா வருகைக்கு சி.பி.எம், ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் தமுஎகச ஆகிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டினர்.இதனால் மிரண்டுபோன நித்யானந்தா கோவிலின் பின்கோபுரம் வழியாக வெளியேறி கிரிவலப்பாதையிலுள்ள் அவரது ஆஸ்ரமத்திற்கு முக்கிய சிஸ்யர்களோடு காரில் புறப்பட்டார்.

செங்கம் சாலை வழியாக சென்றபோது அங்கு மறைந்திருந்த சி.பிஎம்., ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகசவினர் சண்முக பள்ளியருகே கறுப்பு கொடி காட்டினார்கள். அவர்களை கண்டதும் பயந்துபோன நித்தியானந்தா மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த சிஸ்யர்களின் கார்களும் அவலூர் பேட்டை சாலை வழியாக வேலூர் சாலைக்கு சென்று அங்கிருந்து காஞ்சி வழியாக அவரின் ஆஸ்ரமத்திற்குள் போய் சேர்ந்தார். நித்யாவின் பயத்தைக் கண்டு அவரது சீடர்கள், பக்தர்களே அதிர்ந்து போனார்கள்.

நித்யானந்தா கோயிலுக்குள் வந்ததால் புனிதம் கெட்டுவிட்டது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்
.

இந்தியாவில் முதல் கிளை திறந்தது 'கேர்போர்'!

டெல்லி: சில்லறை வணிகத்தில் சர்வதேச அளவில் முக்கிய இடம் வகிக்கும் கேர்போர் நிறுவனம் தனது முதல் கிளையை டெல்லியில் தொடங்கியது.

ஆனால் சில்லறை வர்த்தகமாக இல்லாமல் பணம் கொடுத்து மொத்தமாக வாங்கிச் செல்லும் வகையில் டெல்லி சீலாம்பூர் மெட்ரோ மாலில் பெரிய கிளையாக இதனைத் திறந்துள்ளனர்.

'கேர்போர் வோல்சேல் கேஷ் அண்ட் கேர்ரி' எனும் பெயரில் அமைந்துள்ள இந்த கிளையில் மொத்தம் 10000-க்கும் அதிகமான பொருள்கள் மொத்தமாக விற்கப்படும். இந்தப் பொருள்களை எப்போது கேட்டாலும் கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கும் வசதி இந்தக் கிளையில் உள்ளது. உள்ளூர் கடைக்காரர்கள், வணிக நிறுவனங்கள், பெரிய கேன்டீன்கள் போன்றவற்றுக்கு பொருள்களை மொத்தமாக வாங்குவது இனி ஒர் இடத்தில் சுலபமாக இருக்கும்.

இதுபோன்ற கேஷ் அண்ட் கேர்ரி கிளைகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் அமைக்க மிகவும் விரும்புவதாக கேர்போர் சிஇஓ லார்ஸ் ஒலோப்ஸன் தெரிவித்தார்

28.12.10

மரணத்தின் விளிம்பில் தவிக்கும் காஸா நோயாளிகள்


கடந்த நான்கு வருட காலமாக சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையினால், காஸா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட நோயாளிகள் பெரும் இன்னல்களை அனுபவித்துவருகின்றனர் என காஸா மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், எக்ஸ்ரே கருவிகளுக்குரிய உதிரிப்பாகங்கள் முதலான அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களை அனுமதிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை தடைவிதித்துள்ள காரணத்தினால் சிறுவர், பெண்கள், வயோதிகர் என்ற பாகுபாடின்றி காஸா நோயாளிகள் பெரிதும் துன்புறுவதாகவும், அவசர சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான நோயாளிகள் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2007 ஜூன் முதல் காஸா கரையோரப் பிராந்தியங்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து போதிய மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வழியின்றி காஸா மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகித் துன்புற்றுவருகின்றனர்.

இதேவேளை, 2008 டிஸம்பர் மாதம் காஸா மீதான இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தாக்குதல் இடம்பெற்று சரியாக இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையில், 300 குழந்தைகள் உட்பட 1400 அப்பாவிப் பலஸ்தீனர்களின் உயிர்களைக் காவுகொண்டு, 5000 க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்த துர்ப்பாக்கிய நிகழ்வை நினைவுகூறும் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றன.

காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புத் தாக்குதலின் விளைவாக சுமார் 4000 பலஸ்தீன் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நாட்டின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டன. ஏராளமான குழந்தைகளும் பெண்களும் பல்வேறு உளவியல் பாதிப்புகளுக்கு உட்பட்டு இன்றுவரை துன்புற்றுவருகின்றனர். சுமார் மூன்று வாரகாலம் தொடர்ந்த இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தினால் சுமார் 50,000 பலஸ்தீனர்கள் வீடற்ற அகதிகளாய் முகாம்களில் வசித்துவருகின்றனர்.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா. வாக்குறுதியளித்தபடி முறையான மீள்கட்டுமான முயற்சிகள் இன்னுமே முற்றுப்பெறாத நிலையில், பலஸ்தீன் பொதுமக்களின் நாளாந்த சுமுக வாழ்வையே கேள்விக்குறியாக்கும் வகையில் இன்னுமே ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் தொடரும் இஸ்ரேலிய முற்றுகை குறித்து உலகளாவிய மனிதநேய மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பல தொடர்ந்தும் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றமையும் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள், சேவைகளைத் தொடர்ந்து பகிஷ்கரிப்புச் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்கப் போர்விமானத் தாக்குதல் - 18 பாகிஸ்தானியர் பலி

கடந்த திங்கட்கிழமை (27.12.2010) அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியமான வஸிரிஸ்தானில் ஐ.நா.வின் அனுமதிக்குப் புறம்பாக இடம்பெற்ற அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 18 பாகிஸ்தானியப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இனால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது ஐந்து ஏவுகணைகள் எறியப்பட்டதாகவும், வடக்கு வஸிரிஸ்தானின் மீர் அலி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை இலக்காகக்கொண்டு இத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய வான்வழி ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாலிபான் படையணியினரை இலக்காகக்கொண்டே இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ள போதிலும், இத்தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி தாக்குதல் சம்பவத்தைப் பாகிஸ்தானியப் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் இத்தகைய நியாயமற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் ஏராளமான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாக அவர் கடும் விசனம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை ஸ்ருதி பாண்டே (வயது 6)

அலகாபாத்: உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.

உ.பி. மாநிலம் ஜன்சி நகரைச் சேர்ந்தவர் இந்த குட்டி யோகா ஆசிரியை. 6 வயதே ஆகும் ஸ்ருதி, உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு யோகா சொல்லிக் கொடுத்த மாஸ்டர் ஹரி சேத்தன். இவருக்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.

கடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரமத்தை ஹரி சேத்தன் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை இவ்வளவு இளம் வயதில் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு யோகாவில் கரை கண்டது ஸ்ருதி மட்டும்தான் என்கிறார் ஹரி பெருமையுடன்.

வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என கிட்டத்தட்ட 30 பேர் புடை சூழ வெள்ளை நிற கால்சட்டை, சிவப்பு நிற டி சர்ட் அணிந்து அழகாக யோகா சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ருதி.

இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், நான் சொல்லித் தருவதை மற்றவர்கள் கேட்டு நடப்பது பெருமையாக இருக்கிறது. என்னை விட வயதில் பல மடங்குப் பெரியவர்கள் நான் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும்போது உண்மையாகவே எனக்கு ஆசிரியை என்ற உணர்வு வருகிறது. எனது சகோதரர் யோகா செய்வார்.அதைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் வந்தது. பின்னர் நானாகவே செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதில் சிரமம் இருந்தாதல் என்னை எனது பெற்றோர் யோகா வகுப்புக்கு அனுப்பி கற்கச் செய்தனர் என்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதியின் சகோதரர் ஹர்ஷ் குமாருக்கு இப்போது 11 வயதாகிறது. இவர் ஏற்கனவே 5 வயதில் யோகாவின் 84 நிலைகளையும் கற்று லிம்கா சாதனை படைத்தவர் ஆவார். இருப்பினும் யோகா ஆசிரியராக செயல்படும் எண்ணம் இவரிடம் இல்லை. ஆனால் தனது தங்கையின் திறமையை வெகுவாக பாராட்டுகிறார் ஹர்ஷ்.

கற்க வந்த 6 மாதத்திலேயே சிறப்பான பயிற்சி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஸ்ருதி என்று கூறும் ஹர்ஷ், ஸ்ருதிக்கு இயல்பிலேயே யோகா கை கூடி வந்தது என்றும் பாராட்டுகிறார்.

ஸ்ருதியின் ரசிகர்களில் ஒருவர் ஸ்வாமி பானு. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 90 என்பது குறிப்பிடத்தக்கது.

26.12.10

கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி

ராமநாதபுரம் : விடுமுறையை கழிக்க தீவுக்கு உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது.


ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியபட்டினம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லித்தீவிற்கு சுற்7றுலா செல்ல தயாராகினர்.இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அங்கிருந்த பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐயூபு கான், ரசூல் என்பவர்களுக்கு சொந்தமான படகுகளில் முல்லித்தீவிற்கு கிளம்பினர்.ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன், 15 ஆண்கள் சென்றனர். ஐயூபு கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என, 38 பேர் சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் சென்ற படகு தீவுக்கு முன், ஒரு கி.மீ., தூரத்தில் நிலைதடுமாறி மூழ்கியது. படகை ஓட்டிச் சென்ற ஐயூபு கான், ஹாஷரத்(16) ஆகியோர் நீந்தி, முன்னால் சென்ற படகிற்கு தகவல் தெரிவித்தனர்.


அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். படகு முழுவதும் மூழ்கிய நிலையில், இரு பலகைகள் மட்டுமே சம்பவ இடத்தில் மிதந்தன. சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த அப்துல் குத்தூஸ் மனைவி சலிமா பீவி(48), சலாவுதீன் மனைவி மர்லியா(42), இபுனு மகள் நாதீரா(7), குத்தூஸ் தங்கைகள் பரகத்(37), ஹமீதா நிஷா(38), பெரியபட்டினத்தைச் சேர்ந்த சீனி முகமது மனைவி பிரிதவ் பானு(40), சீனி ஊர்து மனைவி பர்சானா(35), அஜ்மல் கான் மகள் ஹர்ஷதா(15), ஜாஹிர் மகள் மகுபு(16), சதகத்துல்லா மனைவி அலிமுத்து(45), சாகுல் ஹமீது மகள் முஸ்பிலிகா(12), கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த சீனி மகன் கலீல்(11), சீனி முகமது மகன் அப்துல் வஹாப்(12) ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.பெயர் தெரிந்த சீனி முகமது மகள் நஜியா(18), ரஹிமா(13) மற்றும் சிலரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் கைப்பற்றி வீடுகளில் வைத்து பூட்டினர். பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.கலெக்டர் ஹரிஹரன், டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் பெயர் விவரங்கள் உட்பட எந்த தகவலையும் கூற மறுத்து விட்டனர்.


விபத்து நடந்தது எப்படி?பெரியபட்டினம் பகுதியிலிருந்து அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அனுமதியில்லாமல் 2,000 ரூபாயில் மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு நாட்டுப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. முல்லித்தீவு செல்லும் வழி வழக்கமாக 15 அடி ஆழத்தில் இருக்கும்.விபத்து நடந்த பகுதியில் மட்டும் 30 அடி ஆழம் இருக்கும். படகு இப்பகுதியை நெருங்கியதும், லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகு பலவீனமாக இருந்ததாலும், பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்' செய்ய தவறியதாலும் கவிழ்ந்ததுஅதிகாரிகளை புலம்ப வைத்த மக்கள் : அதிகாரிகள் வருவதற்கு முன்னரே உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றை கைப்பற்றிய உறவினர்கள் வீடுகளில் வைத்து பூட்டினர். அதன் பின் வந்த கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தியும், பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு' சம்பந்தப்பட்ட ஜமாத்தார்களிடம் வலியுறுத்தி சென்றனர்.

அதிகாரிகள் பதில் என்ன? கலெக்டர் ஹரிஹரன் குறிப்பிடுகையில், "சம்பவத்திற்கு காரணமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது. தீவுப் பகுதிகளுக்கு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரிப்பர். அடிக்கடி பலரும் தீவுகளுக்கு செல்வதாக கூறுவது தவறானதாகும்' என்றார்.


எஸ்.பி., பிரதீப்குமார் கூறுகையில், "விபத்து நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் நிலை தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்' என்றார்.


விபத்தில் சிக்கிய படகில் சென்ற ஹாஷரத் என்ற சிறுவன் குறிப்பிடுகையில், "எனது அம்மா என் கண் முன்னே மூழ்கி பலியானார். எனக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி தீவுக்குச் சென்றேன். படகு மூழ்கிய மறுநொடியே அனைவரும் மூழ்கினர். சிறுவர்கள் நிறைய பேர் மூழ்கி விட்டனர்' என்றான்.

படம்-நன்றி: தினமலர்

பதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்

புதுடெல்லி டிச: மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை. குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர். குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது. தற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

செய்தி:தேஜ
ஸ்

வலுவான இஸ்லாமிய ஊடகம் தேவை - ஒ.ஐ.சி பொதுச்செயலாளர்

ஜித்தா,டிச.26:இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொள்ள வலுவான ஊடகம் தேவை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (organisation of islamic countries) பொதுச் செயலாளர் பேராசிரியர் இக்மலுத்தீன் இஹ்ஸானோக்லு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிக் ப்ரோட்காஸ்டிங் யூனியனின்(ஐ.பி.யு) பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் இக்மலுத்தீன்.

ஊடக உலகின் வேகமான வளர்ச்சிக்கொப்ப செயல்படுவதற்கு இஸ்லாமிய ஊடகங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன. 2005 ஆம் ஆண்டு சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியில் மக்காவில் நடந்த ஒ.ஐ.சி மாநாட்டில் ஐ.பி.யு போன்ற ஒ.ஐ.சி ஊடகங்களையும், சர்வதேச இஸ்லாமிய செய்தி ஏஜன்சியையும்(ஐ.ஐ.என்.எ) வலுப்படுத்த அழைப்பு விடுத்திருந்தது என இக்மாலுத்தீன் தெரிவித்தார்.

சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் எதார்த்தமாக்கும் விதத்தில் ஐ.பி.யு வை வலுப்படுத்த வேண்டுமென சவூதி அரேபியாவின் கலாச்சார செய்தி தொடர்பு துறை அமைச்சர் அப்துல் அஸீஸ் கோஜா தெரிவித்தார்.

உலக தரம் வாய்ந்த ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க அவர் ஒ.ஐ.சி நாடுகளின் உதவியை கோரினார். ஒ.ஐ.சியின் தலைமையகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஐ.பி.யுவின் புதிய பொதுச் செயலாளராக மலேசியாவின் ஸைனுல் ஆப்தீன் இப்ராஹீம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஜிஎஸ்எல்வி 2வது முறையாக தோல்வி-ராக்கெட் வெடித்துச் சிதறியது


சென்னை: தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரோவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. முதல் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிவடைந்தது.

கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி - டி 3-க்குப் பிறகு, நடந்த ஜிஎஸ்எல்வி முயற்சி இது.

இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்பட்டிருக்கும்.

ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்பட்டது.

12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாரான 5வது செயற்கைக் கோள் ஆகும்.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் முயற்சி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியில் முடிந்திருப்பது இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் நாம் சிறப்பான வெற்றியைப் பெற்றால்தான் நம்மால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை நாமே ஏவும் திட்டத்திற்கும் இது பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் இடம் பெற்றிருந்த ஜிசாட்-5பி செயற்கைக் கோள் ரூ. 125 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு சம்பவம்-முக்கிய துப்பு கிடைத்தது-பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது


ஜெய்ப்பூர்: ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சமப்வத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.

கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது.
இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர்.

கோத்ராவிலிருந்து ஆஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ஆஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்

தீவிரவாதி என அபாண்டம்- டாக்டர் ஹனீஃபிற்கு 10 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க ஆஸி. சம்மதம்

மெல்போர்ன்,டிச.22:ஆஸ்திரேலிய அரசு தன்னை தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டவிரோதமாக சிறையில் அடைத்ததை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த இந்திய டாக்டர் முகம்மது ஹனீப், தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் சமரசமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு 10 லட்சம் டாலர் இழப்பீடுத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது.

பெங்களூரைச் சேர்ந்தவர் முகம்மது ஹனீப். டாக்டரான இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார்.கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பான விசாரணையின்போது, டாக்டர் ஹனீப்பை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் அம்பலமானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அவமானமும், தர்மசங்கடமும் ஏற்பட்டது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஹனீப் நாடு திரும்பி விட்டார். ஆனால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, தவறான வழக்கில் கைது செய்து, தனது வாழ்க்கையையும், வேலையையும் கெடுத்த ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக, அந்த நாட்டின் முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அரசுக்கும், ஹனீப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்தார் ஹனீப். 10 நாள் விடுமுறையில் வந்த ஹனீப், ஆஸ்திரேலிய தரப்புடன் தனது வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளார்.

இதுகுறித்து ஹனீப் கூறுகையில், இந்த உடன்பாடு எனது வேலையை திரும்பப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது கெளரவமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது குறித்து பரிசீலிக்கவுள்ளேன் என்றார்.

ஹனீப்புடன் அவரது மனைவி பிர்தோஸ் மற்றும் 3 வயது மகள் ஹனியா ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு நாடு திரும்பிய ஹனீப் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனீப் தொடர்ந்து கூறுகையில், இந்த பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான குற்றச்சாட்டின் பேரில் நான் கைது செய்யப்பட்டது எனக்கு பெரும் வேதனையான அனுபவத்தைக் கொடுத்தது. இன்று ஏற்பட்டுள்ள உடன்பாடு எனக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தினருடன் இனி நிம்மதியான வாழ்வைத் தொடர்வேன்.

விரைவில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவோம் என்று கருதுகிறேன். அதுகுறித்து பரிசீலிக்கவுள்ளேன். ஏற்கனவே வேலை பார்த்து வந்த கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. இதுகுறித்து எனது குடும்பத்தினருடன் விவாதித்த பின்னரே முடிவெடுப்பேன் என்றார்.

ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால் அவருக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்று மட்டும் தெரிவித்தனர். இருப்பினும் ஹனீப்புக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரிஸ்பேனில் அரசுத் தரப்புடன் கடந்த 2 நாட்களாக இறுதிக் கட்ட நஷ்ட ஈடு பேச்சுவார்த்தையில் ஹனீப்பும் அவரது வக்கீல்களும் ஈடுபட்டிருந்தனர். அது இன்று சமரசமாக முடிந்துள்ளது. இதையடுத்து முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது ஹனீப் தொடர்ந்த வழக்கு கைவிடப்படுகிறது.

மன உளைச்சல், வேலை பறிபோனது, வருமானம் பாதிக்கப்பட்டது, கெளரவம் பாதிக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்காக தற்போது ஹனீப்புக்கு இழப்பீடு தரப்படவுள்ளது. ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றில் இப்படி ஒரு இழப்பீடு விவகாரம் இதுவரை நடந்ததே இல்லை என்று ஹனீப்பின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நீதிபதி டோனி பிட்ஜெரால்ட் முன்னிலையில் இந்த இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
தட்ஸ் தமி
ழ்

பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்

கொல்கத்தா,டிச.23:சாதாரணமான ஒரு பிரச்சனையை காரணமாக வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்துள்ளனர்.

கொல்கத்தாவிற்கு அடுத்துள்ள பீவிஹகோலா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 12 மாணவிகள் ஆர்.எஸ்.எஸ் வெறிக் கும்பலின் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகியுள்ளனர்.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தபொழுதிலும் ஊடகங்கள் இச்செய்தியை மூடி மறைத்துள்ளன. காளி பூஜைக்காக பள்ளிக்கூட சுற்றுப்புற பகுதியை அலங்காரம் செய்ததுத் தொடர்பாக இச்சம்பவத்தின் துவக்கம் அமைந்துள்ளது.

பூஜை கொண்டாட்டங்கள் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பொழுதிலும் பள்ளிக்கூட காம்பவுண்டில் கட்டிய பந்தல் மாற்றப்படவில்லை. மேலும் பள்ளிக்கூட கேட்டில் மூங்கிலால் கட்டப்பட்ட வேலி மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கூட நிர்வாகிகள் பாஞ்ச்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 4 பேரைக் கொண்ட போலீஸ் குழு மூங்கில்களை மாற்றுவதற்கு ஆசிரியர்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் அதற்கு தயாராகவில்லை. பின்னர் அவ்விடத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவிகளின் உதவியுடன் மூங்கில்கள் மாற்றப்பட்டன. ஆனால், நாங்கள் கட்டிய மூங்கில்களை மாற்றிவிட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அங்கு வந்து சம்பவ இடத்திலிருந்த ஆசிரியர்களையும், மாணவிகளையும் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் 12 மாணவிகளை பள்ளிக்கூட குளத்தின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளது இந்த பயங்கரவாத காம வெறிப்பிடித்த கும்பல்.

இதில் ஷப்னம் ஹாத்தூன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காமவெறி இயக்கத்தைச் சார்ந்த தகப்பனும், மகனும் உட்பட 8 பேர் சேர்ந்து வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனை பாதுகாவலர்கள் போலீசாரிடம் புகாராக அளித்துள்ளனர்.

ராஜ்குமார், அவனுடைய மகன் சுஜித் கொல்லா, பினோய் மண்ணா, பொய்கோந்தா ஆகியோரின் தலைமையில்தான் இந்த பயங்கரத்தை
நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இந்தக் கொடூரத்தை தடுக்கவந்த பள்ளி தலைமை ஆசிரியரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தாக்கியுள்ளனர். கடுமையாக காயமுற்ற இவர் தற்பொழுதும் ஹவ்ரா பொது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு இரையான மாணவிகள் பலரும் தற்பொழுது மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுடைய பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

துவக்கத்தில் வழக்கை பதிவுச்செய்ய தயங்கிய போலீசார் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காம வெறிக்கும்பல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர்.

ஜாமீன் பெற இயலாத குற்றம் என்ற பொழுதிலும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் ஜாமீன் கிடைக்க தடையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து தேசிய ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. பல நாட்களுக்கு பிறகு 'கலம்' என்ற வங்காள பத்திரிகைதான் இச்செய்தியை முதலில் வெளிக்கொணர்ந்தது.

தொலைக்காட்சி சேனல்களையும், நாளிதழ்களையும் நேரில் அழைத்து இச்சம்பவம் குறித்து அறிவித்த பொழுதிலும் அவர்கள் இதனை செய்தியாக வெளியிட மறுத்துள்ளனர். இத்தகவலை 'வாரிகா' என்ற பத்திரிகையின் எடிட்டர் அஹ்மத் ஹஸன் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் மதவெறிதான் காரணமென பலரும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தைக் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு மகளிர் உரிமை கமிஷன் தலைவி மாலினி பட்டாச்சார்யா உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

25.12.10

இத்தாலி நாட்டு சுவிஸ், சிலி தூதரகங்களில் குண்டுவெடிப்பு!

இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து, சிலி தூதரகங்களில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில்
இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்மஸ்து விடுமுறையை முன்னிட்டு இவ்விரு தூதரகங்களுக்கும் கிடைக்கப்பெற்ற இரு பொதிகளிலிருந்து இவ் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இது குறித்து சுவிற்சர்லாந்து தூதரக காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில், இப் பார்சல் பேர்னில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இத்தாலியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தனர்.

சுவிஸ் தூதரகம் மீதான தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்தில் சிலி தூதரகத்தில் இதே போல் பார்சல் குண்டு வெடித்துள்ளது. உக்ரேய்ன் தூதரகத்திலிருந்தும், சந்தேகத்துக்குரிய பார்சல் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பு கூறவில்லை.

எனினும், அண்மையில் லண்டனில் மாணவர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளின் பிரதிபலிப்பாக இத்தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் சுவிஸ் தூதரக பணியாளரின் கரங்களில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது

மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை! - ராய்ப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு .

மாவோஜிஸ்ட்டுக்களுக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ராய்ப்பூர் கீழ் நீதிமன்றம்.

குழந்தைகள் நல மருத்துவரான பினாயக் சென் (70) சட்டீஸ்கர் மாநில பழங்குடியின ஏழை மக்களுக்காக மருத்துவ உதவி மையங்களை நடத்திவந்தார்.
அவருடைய சேவைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அவர் கைதாகிய தருணம் அவரது மருத்துவ தொண்டுக்காக கௌரவமான சர்வதேச விருதும் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் நாராயண் சன்யால் என்ற மாவோஜிய சித்தாந்தவாதிக்கும் தலைமறைவாக வாழ்ந்துவந்த மாவோஜிஸ்ட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே செய்திப்பரிமாற்றங்கள் நடைபெற உதவியாக இருந்தவர் என அவர் மீது குற்றச்சாட்டப்பட்டு முன்வைக்கப்பட்டு கைதாகினார்.

தற்போது இக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதை எதிர்த்து மேன்முறையீடு செய்வார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மாவோஜிஸ்ட்டுக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைப்பு அட்டூழியங்கள் செய்திருந்ததாக பினாயக் சென் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

கிருஸ்துவர்கள் ஓட்டுக்காக இந்துக்களுக்குத் துரோகம் இழைத்த ஜெயலலிதா-ராம.கோபாலன் தாக்கு

சென்னை: மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா, பின்னர் கிருஸ்தவர்களின் ஓட்டுக்காக அதைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், முதல்வர் கருணாநிதியும் கிருஸ்தவர்களின் புகழாரத்தில் மயங்கி இந்து தாழ்த்தப்பட்டோர் சலுகையை மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்குவோம் எனப் பேசியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இந்து தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி!.

கிருஸ்தவர்கள் எங்கள் மதத்தில் தீண்டாமை, ஜாதிக் கொடுமை இல்லை என்று கூறித்தான் இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். ஆனால் இந்துக்களின் சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் சலுகை மதம் மாறிய பின்னரும் வேண்டும் என்பது தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ்கின்ற தாழ்த்தப்பட்ட இந்துக்களை மதமாற்ற நடக்கிற சதி!.

ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கிருஸ்தவர்களின் ஓட்டிற்காக அதனைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்தார்.

மதமாற்றத் தடைச் சட்டத்தின் அவசியத்திற்கு ஜெயலலிதா என்னென்ன காரணம் சொன்னாரோ அதுவெல்லாம் இன்றும் தொடர்கிறது!. ஆனால் இந்துக்களின் நலன் பற்றி இவர் எதுவும் பேசவில்லை!

முதல்வர் கருணாநிதியோ தற்போதைய அவரது ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்குக் கல்வி உதவித் தொகை என்ற பெயரில் அரசு நிதியைக் வாரிக் கொடுத்துள்ளார்.

இந்துக்களுக்குக் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு எந்தச் சலுகையையும் கொடுக்கவில்லை!.

அரசின் உதவியால் நடைபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

லயோலா கல்லூரி உள்பட முஸ்லீம், கிருஸ்தவர்களின் 21 கல்லூரிகள் பற்றி சென்ற ஆண்டு வெளியான செய்தியில் விரிவுரையாளர் பதவியில்கூட தாழ்த்தப்பட்டோர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்து முன்னணி அரசியல் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போர்க் குரல் கொடுத்துப் போராடும் இயக்கம். வரும் தேர்தலில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் இத்தகைய செயல்பாட்டை, திட்டங்களை மக்களுக்கு விளக்கி இந்து முன்னணி பிரச்சாரத்தில் இறங்கும்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் சலுகையை மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு வழங்க இவர்கள் முயற்சித்தால், கிருஸ்தவ நிறுவனங்களில் இந்துக்களுக்கும் பங்குகொடுக்க வேண்டும்; கிருஸ்தவ பள்ளி, கல்லூரிகளில் இந்துக்களுக்கும் இட ஒதுக்கீடும், வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடையை எல்லோருக்கும் பிரித்து வழங்கக் கோரியும் இந்துக்கள் சார்பாக இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

23.12.10

கும்பகோணத்தில் 40 பாதிரியார்களுடன் டிஎன்டிஜே நடத்திய நேரடி விவாதம்

கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில்கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறை வட்டத் தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார் கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம் மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர், இதற்கு மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி கேள்விக ளுக்கு பதில் அளித்தார்.

பாதிரியார்கள் பங்கேற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சி

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத் தில் இருந்த நமது மாவட்ட நிர்வாகிகளை கடந்த 13-12-2010 அன்று சந்தித்த ஒரு கிறிஸ்தவ சகோதரர் 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது, இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ஃபாதர் மார்ட்டின் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தஞ்சை சுற்று வட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில் தங்களது அமைப்பு சார்பாக உங்களது மார்க்க அறிஞர் வந்து “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளை நேரில் வைத்தார்.

அதற்கு பதிலளித்த நமது தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நாங்கள் வெறுமனே உரை நிகழ்த்திவிட்டு மட்டும் செல்ல மாட்டோம். இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் மத்தியில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன; எனவே அவற்றை கேள்விகளாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு பாதிரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் பதிலளிக்கவேண்டும்.

அதைப்போன்று உங்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து இருக்கக்கூடிய எத்தகைய குற்றசாட்டுகளையும் கேள்விகளாக நீங்கள் எழுப்பலாம். அதற்கு நாங்கள் பதிலளிப்போம். இந்த நிலைப்பாட் டிற்கு தாங்கள் தயாரா? என்று கேள்வியெ ழுப்ப, தாங்கள் தாராளமாக கேள்விகளை எழுப்பலாம். நாங்களும் கேள்விகளை கேட்கின்றோம், நீங்களும் பதிலளியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக் கப்பட்டது.

மறுக்கப்பட்ட பொன்னாடை வரவேற்பு:

மாநிலத் தலைவரோடு, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இம்தியாஸ், செயலாளர் ராசிக், மற்றும் சுவாமிமலை ஜாஃபர் ஆகி யோர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந் துள்ள தூய மரியன்னை பேராலய வளாகத் தில் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் குழுமியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகவுள்ள ஃபாதர் பீட்டர் பிரான்சிஸ் அவர்கள் முதலில் நமது அழைப்பை ஏற்றுவந்துள்ள பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அவர் அறிவிப்பு செய்தவுடனேயே இது எங்களது மார்க்க நெறிமுறைகளுக்கு எதிரானது, எனவே இத்தகைய பொன்னாடை களை நாங்கள் ஏற்பதில்லை என்று கூறியவுடன் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உரை:

அதைத்தொடர்ந்து, மாநிலத்தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர் கள், உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார்.

உரைக்கு முன்னால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதை பட்டியலிட்டார்.

1. நியாயந்தீர்க்கப்படும் நாளை நம்புதல்
2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்
3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலிருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்
4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்
5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்

இதுபோன்ற நம்பிக்கையில் நாம் ஒன்று பட்டு இருந்தாலும், ஏசுவை நீங்கள் இறைவனுடைய மகன் என்று சொல்கின்றீர்கள், அவரை வணங்குகின்றீர்கள், கடவுள் மூன்று என்று கூறுகின்றீர்கள் இதுபோன்ற பல விஷயங்களில் முரண்பாடுகளும் இருக்கின்றன.

எனவே நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களையும் விதமாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களையும் விதமாக ஒரு முழு அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் மத்தியில் இருக்கும் கருத்து வேறு பாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

எனவே இதுபோன்றதொரு கலந்துரையாடல் காலத்தின் கட்டாயம் என்பதையும் அந்த கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் தனது கருத்தையும் வேண்டு கோலையும் முன்வைத்துவிட்டு தனது உரையை ஆரம்பித்தார்.

உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?

அல்தாஃபி அவர்கள் தனது உரையில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாத செயல்கள் குறைய வேண்டும். நாடு பிடிக்க வேண்டும், அடுத்தவர்களுடைய பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும், அடுத்த நாடுகளுடைய வளத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கிறிஸ்தவ நாடுகள் தங்களது தீவிரவாதத்தை கட்ட விழ்த்து விடுகின்றன.

இந்த தீவிரவாத செயல்கள் ஒழிக்கப்பட்டாலே உலக நாடுகளில் நடைபெற்று வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்கள் அழித்தொழிக்கப்பட்டு உலகத்தில் அமைதி நிலவும். இதை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில், அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள் மற்றவருக்கு ஹராம் (அதா வது தடுக்கப்பட்டது) என்று கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடைமைகள் அனைத்தும் புனித மானவை. அந்த புனிதம் பேணப்பட வேண்டும் என்றும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இந்த நிலைப்பாட்டை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டாலே, இந்த அறிவுரையை ஒவ்வொரு நாடுகளும் கடை பிடித்தாலே உலகத்தில் அமைதி நிலவும் என்று அழுத்தமாக இஸ்லாத்தின் நிலைப் பாட்டை பதிய வைத்தார்.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்:

நிலைமை இவ்வாறிருக்க கிறிஸ்தவ நாடுகளோ தாங்கள் செய்யும் தீவிரவாத செயல்களை மறைத்துவிட்டு, தாங்கள் எந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்துகின்றார்களோ, எந்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்காக அவர்கள் மீது போர் தொடுக்கின்றார்களோ அந்த அப்பாவி நாட்டுமக்கள் இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கினால் தாங்கள் செய்த தீவிரவாத செயலை மறைக்க முஸ்லிம்களின் மீது அந்த பழியைப் போட்டுவிட்டு தங்களை சாந்த சொரூபிகளைப் போன்று உலக மக்களுக்கு காட்டிக் கொள்கின்றனர்.

தங்களது தீவிரவாத முகத்தை மறைப்பதற்காக தங்களை சாந்த சொரூபிகளைப்போல வேடமிட்டு இரண்டு வேடம் போட்டு முஸ்லிம்களின் மீது பழிபோடும் செயலை கிறிஸ்தவ உலகம் தான் செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார்.

மேலும், உலக நாடுகள் மீது அநியாயமாக போர் தொடுக்கும் கிறிஸ்தவ நாடுகளில் யாரும் தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை. அதே நேரத்தில் நாடுபிடிக்க வந்த கொள்ளயர்களை நாட்டைவிட்டு விரட்டும் புனித வேலையை செய்பவர்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்களும் குற்றம் சுமத்தி அபாண் டத்தை வீசுகின்றன என்றும், அதே நேரத்தில் இத்தகைய நிலையை முஸ்லிம்கள் விஷயத்தல் மட்டும்தான் இத்தகையோர் எடுக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், விடுதலைப்புலியினர், போன்றோர் போராட்டக்களத்தில் குதிக் கும்போது அவர்களாக தங்களது மதத்தோடு இணைத்து இந்து தீவிரவாதிகள் என்றோ, அல்லது கிறிஸ்தவ நாடுகள் இத்தகைய ஆக்கிரமிப்பை செய்யும்போது கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்றோ கூறுவதில்லை என்பதையும் வேதனையோடு தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

அதே நேரத்தில் எதிர்த்து போரிடுபவர்களை மட்டும்தான் தீவிரவாதிகள் என்று கூறும் பழக்கம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வியட்நாம், கௌதமாலா போன்ற கிறிஸ்தவ நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போதாவது அவர்களை எதிர்த்து போரிட்ட வியட்நாம், மற்றும் கௌதமாலாவை சேர்ந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் கூறவில்லை என்பதையும் தனது உரையில் பதிய வைத்தார்.

மேலும், நமது இந்திய நாட்டையும் ஆக்கிரமிக்க வந்த கிறிஸ்தவர்களை யாரும், கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அவர் களை எதிர்த்து போரிட்ட இந்துக்கள், மற்றும் முஸ்லிம்களை இந்து தீவிரவாதி என்றோ முஸ்லிம் தீவிரவாதி என்றோ கூறவில்லை என்பதையும் தனது உரையில் சுட்டிக் காட்டி னார்.

ஆக மொத்தத்தில், உலகத்தில் நடக்கும் பெருவாரியான தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ நாடுகளே காரணம் என்றும், அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகில் நடைபெறும் தீவிரவாதத்தில் பெருவாரியானவை குறைந்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார்.

அனல்பறந்த கேள்வி – பதில் நிகழ்ச்சி:

கூடியிருந்த கூட்டமோ கிறிஸ்தவத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்யும் பாதிரியார் களின் கூட்டம். அங்கு இறைவனது மாபெரும் அருளைக் கொண்டு உண்மைக் கருத்துகளை போட்டு உடைத்தால் பாதிரியார்கள் சும்மா இருப்பார்களா என்ன? குழுமியிருந்த பாதிரியார்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் கேள்விக்கணைகள் நம்மை நோக்கி பாய்ந்தன.

அவர்களது அத்தனை கேள்விகளுக்கும் அறிவிப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார். இஸ்லாம் மார்க்கம் குறித்த பாதிரிமார்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அனல் பறந்தது.