தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.3.11

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை


புதுடெல்லி:நாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

லிபியா - மேற்குல நாடுகளின் யுத்தத்திற்கு எதிர்ப்பு - பான் கீ மூன் போர்க் குற்றவாளி - விமல் வீரவன்ச


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகம் முன்னபாக, லிபியா மீது  மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நிலமை கை மீறிவிட்டது போரை நிறுத்து சீனா ஆவேசம் !


லிபியாவில் இப்போது நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தி சமாதானப் பேச்சுக்களை ஆரம்பியுங்கள் என்று சீனா பலமாக அலறியுள்ளது. ஐ.நா தீர்மானம் லிபிய விமானங்கள் வானத்தில் பறப்பதை தடை செய்வதை மட்டுமே வலியுறுத்தியுள்ளது. ஆனால் மேலை நாடுகளின் படைகள் அதை பிழையாக கற்பிதம் பண்ணி தரை மீதும் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன. இது தவறான செயல் உடனடியாக இரு தரப்பும் யுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென அலறியுள்ளது. மேலும் சீன வெளிநாட்டு அமைச்சர் யான் யூ கூறும்போது இந்த விவகாரம் மற்றய இடங்களுக்கும் பரவப்போகிறது என்று தாம் அச்சமடைவதாகவும் கூறினார். நிலமைகளை கட்டுக்குள் கொண்டுவர தாம் அடுத்த பக்கத்தால் பேசி வருவதாகவும், லிபியா இறைமை உள்ள நாடு அதன்

லிபியாவின் எண்ணெய் வளத்துக்காகதான் அமெரிக்கா தாக்குதல்: ஈரான் மதத்தலைவர்


டெக்ரான், மார்ச். 23- தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக லிபியா மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா லிபியா விவகாரத்தில் தலையிட்டு உள்ளதற்கு காரணம் லிபியாவின் எண்ணெய் வளம் தான் என்று ஈரான் மதத்தலைவர் அயதுல்லா அலி காமேனி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
புனித நகரான மஷாத்தில் இருந்து காமேனி ரேடியோவில் பேசினார். அப்போது

மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன்: கடாபி அறிவிப்பு


திரிபோலி, லிபியா அதிபர் கடாபி மக்கள் முன் தோன்றி பேசினார். அப்போது உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர, மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன் என்று அறிவித்தார்.
வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் 41 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்படி போராட்டம் நடத்தும் மக்கள் மீது லிபிய ராணுவம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. மக்களை
காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ராணுவம் லிபியா நாட்டில் திரிபோலி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று 4-வது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலை நாட்டுப்படைகள் லிபியா தரையில் இறங்கிவிட்டன



ஐ.நாவின் தீர்மானம் லிபியா மீதான வான் தாக்குதலுக்கு அனுமதி அளித்தாலும் அதைப் புறந்தள்ளி மேலை நாடுகளின் படை வீரர்கள் லிபியாவின் தரையில் இறங்கிவிட்டார்கள். மேற்படி தகவலை டேனிஸ் போரியல் ஆய்வாளர் எஸ்பன் செலிங் லாசன் டேனிஸ் தொலைக்காட்சி சேவை இரண்டிற்கு தெரிவித்துள்ளார். இந்தப் படையினர் தாக்குதல் நடவடிக்கையை செய்வதற்காக களமிறங்கவில்லை. ஆனால் லிபியாவின் போர் நிலமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவே அங்கு போயுள்ளார்கள். தரையில் நிலவும்