தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.5.12

பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா?- வாகன ஓட்டிகள் குமுறல்


பெட்ரோல் விலை நேற்று இரவு அதிரடியாக லி ட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தப்பட்டது மக்களை கடு ம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லிட்டருக்கு ரூ. 1, ரூ. 2 என்று உயர்த்தப்பட்ட நிலை மாறி தற் போது வரலாறு காணாத வகையில் ரூ. 7.50 உய ர்த்தப்பட்டு உள்ளது.சாதாரண நடுத்தர மக்கள் த லையில் விழுந்த இடியாக உள்ளது.

ஒசாமாவை காட்டிக்கொடுத்த டாக்டருக்கு 33 வருட சிறைத்தண்டனை


அல் கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசா மா பின்லேடனை காட்டிக்கொடுத்ததாக நம்பப்படும் டாக்டர் ஷகீல் அஃப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது .அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் சூத்திரதாரி என  நம்பப்படும் ஒசாமா பின்லேடன், அமெரிக்க அ திரடிப்படையினால் (CIA) இனால் கடந்த வருடம் மே 02ம் திகதி பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்ல

ஜப்பானில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டது


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.Sky Tree என பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரம் 634 மீற்றர் உயரமானதாகும்.இக்கோபுரத்தின் 350 மீற்றர் உயரத்திலும், 450 மீற்றர் உயரத்திலும் அவதானிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட Sky Tree இருமடங்கு உயரமானதாகும்,

ஈரான் விஞ்ஞானிகளுடன் அணு சக்தி கழக தலைவர் சந்திப்பு


ஈரானின் அணு சக்தி விஞ்ஞானிகளை சர்வதேச அணு சக்தி கழகத்தின் தலைவர் யுகியா அமனோ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.உள்நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக அணு சக்தி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஈரான் கூறி வருகிறது. அத்துடன் அந்த திட்டங்களை பார்வையிட சர்வதேச குழுவை அனுமதிக்கவும்

திருமணத்தை முறையாக பதிவு செய்யாவிட்டால் அபராதம்: டெல்லி அரசு முடிவு


டெல்லி மாநிலத்தில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான சட்ட திருத்தம் அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுகிறது.திருமணம் நடந்து 60 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யா விட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டம் வகை செய்கிறது.திருமணப் பதிவை கட்டாயமாக்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி மாநில அரசு கோரிக்கை

கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் 7 ஆண்டுகள் கம்பி எண்ணுவது உறுதி: உச்ச நீதிமன்றம்

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உறு திபட தெரிவித்துள்ளது. இதற்குமுன்பு, கற்பழிப்பு வழக்கு ஒன்றில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இரு குற்றவாளி களுக்கு தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தது.இதை எ திர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இ வ்வழக்கு மீதான விசாரணையின் தீர்ப்பை விமர்சித்த உச்சநீதிமன்றம்,

நயாகரா நீர் வீழ்ச்சியிலிருந்து குதித்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா உள்ளது. இதன் உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.நேற்று காலை 10.20 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒருவர், நயாகரா வீழ்ச்சியின் 180 அடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.அவர் கீழே விழுந்ததைப்பார்த்த சுற்றுலாப்பயணிகள் அவரை மீட்க மீட்புப்படையினருக்கு அழைப்பு விடுத்தனர்.இதையடுத்து மீட்புபடையினர் உதவியுடன் அவரை