தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.5.12

ஒசாமாவை காட்டிக்கொடுத்த டாக்டருக்கு 33 வருட சிறைத்தண்டனை


அல் கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசா மா பின்லேடனை காட்டிக்கொடுத்ததாக நம்பப்படும் டாக்டர் ஷகீல் அஃப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது .அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் சூத்திரதாரி என  நம்பப்படும் ஒசாமா பின்லேடன், அமெரிக்க அ திரடிப்படையினால் (CIA) இனால் கடந்த வருடம் மே 02ம் திகதி பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்ல
ப்பட்டார்.பாகிஸ்தானில் மறைந்திருக்கும் போதுஅவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டரான ஷகீல் அப்ரிடி என்பவர் அமெரிக்க உளவுத்துறையான CIA இற்கு அளித்த தகவலின் பிரகாரமே ஒசாமா பின்லேடன் கண்டு பிடிக்கப் பட்டதாக உத்தியோக பூர்வமான செய்திகள் வெளிவந்திருந்தன.  மேலும் இறந்தவர் பின்லேடன் தானா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த டாக்டரே CIA இற்கு பின்லேடனின் DNA மாதிரியை கொடுத்து உதவினார் என அமெரிக்க பாதுகாப்பு பிரிவின் செயலாளர் லியோன் பனேட்டா ஜனவரியில் கூறியிருந்தார்.

பின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் ஷகீல் அப்ரிடி தற்போது பாகிஸ்தான் சிறையில் வாடுகின்றார். இவர் மீது போலி தடுப்பூசி நிகழ்ச்சி நடத்தியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததாக பாகிஸ்தான் அரச அதிகார்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்: