தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.1.11

உள்நோக்கத்தோடு செயல்படுகிறது பா.ஜ: காஷ்மீர் முதல்வர் கோபம்

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பா.ஜ.,வினர் தேசியக்கொடியை ஏற்றக் கூடாது என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.,வின் இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் கோல்கட்டாவில், "ராஷ்டிரிய ஏக்தா யாத்திரை'யை துவங்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்கள் வழியாக 3,037 கி.மீ., தூரம் பயணம் செய்து, 26ம் தேதி காஷ்மீரை சென்றடையும் யாத்திரைக் குழுவினர், அங்கு லால் சவுக் பகுதியில் ஊர்வலமாகச் சென்று தேசியக் கொடியை ஏற்றுகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில், மீண்டும் காஷ்மீரில் பிரச்னையை உருவாக்க புறப்பட்டுள்ளனர். இங்கு மீண்டும் அமைதியின்மையை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, இதை செய்கின்றனர். காஷ்மீரில் நிலவி வந்த பதட்டமான சூழ்நிலையை, கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தணித்துள்ளோம். அதை குலைக்கும் நடவடிக்கைகளை பா.ஜ.,வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை மறு விசாரணை நடத்த கோர்ட் அனுமதி

மும்பை;ஜன;13-
 
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இந்து சாமியார் அசிமானந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ கோர்ட்டில் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த அனுமதிக்ககோரியது, சிபிஐயின் இந்த கோரிக்கை கோர்ட் ஏற்று கொண்டது.
 
மலேகானில் 2006 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 37 பேர் பலியாயினர் மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கோர்ட் அனுமதி அளித்ததை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது

புற்று நோயை குணப்படுத்தும் ஒட்டக பால் !

துபாய், ஜன 13-
 
அரபு நாட்டு பயோ டெக்னாலஜி நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
 
அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.
 
எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான எலிகளை போல துள்ளி குதித்து ஓடுகிறது.
 
ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து தயாரான இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக உருவாக்குகிறது. இது பாதிக்கப்பட்ட புற்று நோய் செல்களை அளித்து விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.
 
இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படு வது இல்லை. எனவே மனிதர் களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்தி விடலாம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக இப்போது மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
 
இதிலும் வெற்றி ஏற்பட்டால் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும்.   உலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகிறார்கள். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய் அடுத்து புற்று நோயால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன

காஸாவை சரமாரியாகத் தாக்கும் இஸ்ரேலியப் போர்விமானங்கள்

கடந்த செவ்வாய்க்கிழமை (11.1.2011) நள்ளிரவில் காஸா பிராந்திய வான்பரப்பில் சஞ்சரித்த இஸ்ரேலிய எஃப் 16 ரக போர் விமானங்கள் காஸாவின் பல இடங்களில் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இத்தாக்குதல்களினால் உயிரிழப்புக்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என காஸா மருத்துவசேவை ஒருங்கிணைப்பாளர் ஆதம் அபூ ஸல்மியா தெரிவித்துள்ளார்.                                                                                               ரத்த வெறி நாய்கூட்டங்களின் வெறிப்போர்,,,,,,,,( வீடியோ )
எனினும், இஸ்ரேலியப் போர்விமானங்களின் இத் திடீர் தாக்குதலினால் மத்திய காஸா பிரதேசத்தில் அமைந்திருந்த நஸரத் அகதி முகாமின் மேற்குப் பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும், இதே பிரதேசம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் குண்டெறிந்து எரியூட்டப்பட்டதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இனியும் இத்தகைய இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறலாம் எனவும், பொதுமக்கள் அதுதொடர்பில் அவதானமாக இருக்குமாறும் காஸாவின் பாதுகாப்பு வட்டாரங்கள் பலஸ்தீன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

மாவி மரமராவின் மீள்வருகையை எதிர்பார்த்திருக்கும் இஸ்ரேல்

கடந்த மே (2010) மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடும் தாக்குதலுக்குள்ளான துருக்கிய மனிதாபிமான நிவாரண உதவிக் கப்பல் மாவி மர்மராவின் காஸாவுக்கான மீள்வருகையில் தாம் பெரிதும் கரிசனை கொண்டிருப்பதாக இஸ்ரேலிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கிய மனிதாபிமான நிவாரண நிதியம் எதிர்வரும் மே மாதம் காஸா நோக்கிச் செல்வதற்காக மாவி மர்மரா உட்பட நிவாரணப் பொருட்கள் அடங்கிய மற்றும் 12 கப்பல்களை ஏற்பாடுசெய்து வருகின்றது என இஸ்ரேலிய தினசரி மஆரிவ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிவாரணப் பொருட்களை அஷ்டொட் துறைமுகத்தின் வழியே விநியோகிப்பதற்குத் தம்மிடம் கையளிக்குமாறு இஸ்ரேல் கோரியபோது நிவாரணக்குழுவினர் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'தோல்வியைப் புறங்காணச்செய்தல்' என்ற அவர்களின் நோக்கத்தை முறியடிக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. 

ஜெத்தா: புதிய விமானநிலையத்துக்கு அடிக்கல்

ஜெத்தா: 27 பில்லியன் சவூதி ரியால்கள் செலவில் கட்டப்படவிருக்கிற ஜெத்தா விமானநிலையத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
மன்னர் அப்துல் அஸீஸ் விமானநிலையம் என்ற பெயரில் அமையவிருக்கும் இந்த விமான நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, பயணிகள், யாத்ரிகர்கள் போக்குவரத்துக்குப் போதுமானதாக அமையும் என்று சவூதிஅரேபிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், துணைப்பிரதமருமான பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இப்பெரும் திட்டப்பணிக்கு இறைஆதரவை நாடி பிரார்தித்த இளவரசர், அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பை வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார். "மூன்று ஆண்டுகளில் இத்திட்டம் முழுமை பெறும்" என்றார் அவர்.
தற்போதும் ஜெத்தாவில் இயங்கிவரும் "அப்துல் அஸீஸ் விமானநிலையம்" பலவகைகளிலும் பழைமையுடனும் பரப்பளவில் குறுகியும் இருப்பதால், ஹஜ் உள்ளிட்ட உச்சநிலைக் காலங்களில் யாத்ரிகர்களுக்குச் சிரமம் தருவதாக பலதரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வந்திருந்தன என்பது சொல்லப்படவேண்டியது

குவைத்தில் உலகின் மிக நீளமான கொடி !

குவைத் தனது 50-வது தேசிய தினத்தையும், 20-வது சுதந்திர தினத்தையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் உலகிலேயே மிக நீளமான தேசியக்கொடி தயாரித்துள்ளது. இக்கொடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் குவைத்தின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றன. 1990-1991களில் நடந்த வளைகுடாப் போரில் அமெரிக்க கூட்டுப்படையினர் சுமார் 7 மாதங்கள் வரை குவைத்தை ஆக்கிரமித்திருந்த ஈராக் படையினரை வெளியேற்றினர். இதனை குவைத் அரசு சுதந்திர தினமாக ஃபிப்ரவரி 26ஆம் தேதி அனுசரித்து வருகின்றது.
இவ்வருடம் தேசிய தினம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஜனவரி 12ஆம் தேதி முதலே தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஃபிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத்தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டங்களுக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக உலகிலேயே மிக நீளமான தேசியக் கொடி தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கொடி தேசிய தினமான ஃபிப்ரவரி 25 அன்று ஏற்றப்படவிடுக்கின்றது. உலகின் மிக நீளமான கொடி பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 அருணாச்சல் பிரதேசத்தவருக்கு சீனா தனி விசா-விமான நிலையத்தில் இருவரும் நிறுத்தம்

இடாநகர்: காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு தனி விசா தருவதை நிறுத்துவதாக சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வந்தபோது அளித்த உறுதிமொழியை மீறும் வகையில் தற்போது அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு தனி விசா கொடுத்து தனது குசும்பத்தனத்தைக் காட்டியுள்ளது சீனா. அந்த இருவரும் பெய்ஜிங் செல்ல முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

காஷ்மீர் பகுதியிலிருந்து யார் சீனா வர விரும்பினாலும் அவர்களுக்குத் தனி விசா அளித்து குசும்புத்தனம் செய்து வந்தது சீனா. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனாலும் அதைக் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சீன பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வந்தார்.

இதையடுத்து அவரது வருகைக்கு முன்பு அந்த குசும்புத்தனத்தை நிறுத்தி வைத்தது சீனா. ஆனால் தற்போது அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனி விசா கொடுக்க ஆரம்பித்துள்ளது சீனா. அருணாச்சல் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் பூஜான் மாகாணத்தில் ஜனவரி 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சீன பளு தூக்கும் போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு இந்திய பளுதூக்கும் சங்கத் தலைவர் ஆப்ரகாம் டெக்கி மற்றும் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பளுதூக்கும் வீரர் ஆகியோருக்கு சீன பளு தூக்கும் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மென்குவாங் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து இருவரும் பெய்ஜிங் செல்ல விசா கோரி விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு வழக்கமான விசா தராமல் (அதாவது இந்தியர்களுக்கான) தனி தாளில் விசா அளித்தது சீன தூதரகம்.

இந்த விசாவுடன் இருவரும் பெய்ஜிங் செல்ல டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு இருவரது விசாக்களையும் பரிசீலித்த இந்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் விசா சரியில்லை என்று கூறி இருவரையும் திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து சீன தூதரகத்தை அணுகி இருவரும் விசாரித்துள்ளனர். அதற்கு சீன தூதரக அதிகாரிகள் சரியான விசாதான் கொடுத்திருக்கிறோம் என்று கூறினாரம்.

இதுகுறித்து டெக்கி கூறுகையில், எங்களை சீனா அவமதித்து விட்டது. எங்களை மட்டுமல்லாமல் அருணாச்சல் பிரதேச மாநில மக்களையும் சீனா அவமதித்துள்ளது என்றார்.

சீனாவின் இந்த செயல் இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது. வென் ஜியாபோ வந்து பேசி உறுதி மொழி அளித்து விட்டுச் சென்ற போதிலும் தொடர்ந்து சீனா இதுபோல நடந்து வருவது குறிப்பிடத்தக்கது
நன்றி : தட்ஸ் தமிழ்

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் & தினமலர் ஒரு சமூக பார்வை.


குஜராத் மாநிலம் சூரத்தில், "மகர சங்கராந்தி திருவிழா' தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எ ஸ்.எ ஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசுகிறார். இது ஜனவரி 10 தேதி தினமலரில் படத்துடன் வந்த செய்தி. இதுதான் தினமலரின் மத துவேச சிந்தனை. 
இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் இருப்பதும், இவர்கள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் 'தான்' இந்த குண்டு வெடிப்புகள் நடந்தது என்றும் நிருபிக்கபட்டு உள்ள இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை பற்றியோ, அல்லது அவர்களின் ஆணைபடி நடத்தபட்ட குண்டு வெடிப்புகள் பற்றியோ, எந்த செய்தியும் வெளியிடாமல் தினமலர் அமைதி காத்துவருகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாட்டை ஹிந்து மதத்தோடு தொடர்பு படுத்துவது போல் அவர்கள் 'தான்' ஹிந்து மதத்தின் ஒட்டு மொத்த பாதுகாவலர்கள் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்த இந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை ஏதோ ஹிந்து மத சாது போல சித்தரிக்கும் வேலையை செய்து வருகிறது தினமலர் நாளேடு. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவது ஒழிக்க துடங்கி இருக்கும் இந்த நிலையில் தினமலர் அமைதிகாப்பது பத்திரிகை தர்மம் இல்லை. 

அதுபோல் இந்த செய்திகளை வெளியிடாத, இதுபற்றி பேசாத யாரும், எந்த அமைப்பும், எந்த கட்சியும் நடுநிலை தவறியவர்களே. அது மட்டும் அல்லாமல் இவர்கள் இப்படி செயல் படுவதன் மூலம் இந்த பாசிச பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகவே கருதபடுவர். அது மட்டும் அல்லாமல் இவர்களது தேசபக்தியை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு இவர்கள் உள்ளாக்க படுகிறார்கள். ஏன்? என்றால் இப்படி பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் பெரும் சவால் ஆகும். இதை சம்மந்த பட்டவர்கள் உணர்ந்து இது போன்ற செய்திகளை வெளிக்கொண்டு வருவது,அதை எதிர்ப்பது ஒவ்வொரு இந்தியன் மீதும் கடமையாகும். இவர்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தானவர்கள். இவர்கள் செய்யும் மத தீவிரவாதம் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் என்பதனை உணர்ந்து எல்லோரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம். ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சு செடியை பிடுங்கி இந்தியா சிறப்பாக ஒளிர பாடுபடுவோம். மதசார்பின்மை காப்போம். வேற்றுமையில் ஒற்றுமை அதுவே இந்தியா!! என்று பெருமையோடு சொல்லுவோம். இதை செய்யவேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை.

அன்புடன் : ஆசிரியர் சிந்திக்கவும்