குவைத் தனது 50-வது தேசிய தினத்தையும், 20-வது சுதந்திர தினத்தையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் உலகிலேயே மிக நீளமான தேசியக்கொடி தயாரித்துள்ளது. இக்கொடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் குவைத்தின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றன. 1990-1991களில் நடந்த வளைகுடாப் போரில் அமெரிக்க கூட்டுப்படையினர் சுமார் 7 மாதங்கள் வரை குவைத்தை ஆக்கிரமித்திருந்த ஈராக் படையினரை வெளியேற்றினர். இதனை குவைத் அரசு சுதந்திர தினமாக ஃபிப்ரவரி 26ஆம் தேதி அனுசரித்து வருகின்றது.
இவ்வருடம் தேசிய தினம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஜனவரி 12ஆம் தேதி முதலே தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஃபிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத்தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டங்களுக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக உலகிலேயே மிக நீளமான தேசியக் கொடி தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கொடி தேசிய தினமான ஃபிப்ரவரி 25 அன்று ஏற்றப்படவிடுக்கின்றது. உலகின் மிக நீளமான கொடி பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக