தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.4.11

தமிழகம் முழுவதும் 75.2% வீதம் வாக்குப்பதிவு!


தமிழகத்தின் இன்று நடந்து முடிந்துள்ள சட்ட சபை தேர்தலில், மாநிலம் முழுவதுமாக சராசரியாக 75.2% வீத விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணைக்குழு அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தகவல் இல்லை என தெரிவித்துள்ள அவர் பல இடங்களில் மின்னணி எந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியதாகவும், இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கடமையை மறந்துவிடா​தீர்கள் தமிழக தேர்தல் 2011


3476791465_1fbdbe635a
இன்று தமிழ்நாடு,கேரளா,புதுச்சேரி 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாகும். காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மே 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு புதிய ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரியவரும்.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் 2748 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 ஆகும்.

வாக்களிப்பது நமது கடமை தமிழக தேர்தல் 2011

ஏப்ரல் 13, தமிழக சட்டசபை தேர்தல் இன்று புதன்கிழமை (13/04/2011) நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 2773 வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் நடந்தது.

11/04/2011 மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டு போடலாம். வாக்காளர்கள்

பிரான்சில் பெண்கள் பர்தா அணியத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை


பாரீஸ், ஏப். 12- முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிய பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
ஐரோப்பிய நாடான பிரான்சில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடைவிதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மோடியை புகழ்ந்து சேற்றைவாரிப் பூசிக்கொண்ட அன்னா ஹஸாரே: காந்தியவாதிகள் கண்டனம்


hazare_praises_modi2
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்தை பாராட்டிய அன்னா ஹஸாரேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஊழல் புரியும் ஆட்சியாளர்களை விசாரிக்க ‘லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர் ஹஸாரே. இவரது போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்த மத்திய அரசு ‘லோக்பால்’ மசோதாவை

முபாரக் மற்றும் மகன்களுக்கு எதிராக சம்மன்


mubarak&gamel
கெய்ரோ:பதவி விலகிய எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னிமுபாரக் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை அந்நாட்டில் வலுவடைந்துள்ளதைத் தொடர்ந்து முபாரக் மற்றும் அவரது மகன்களை விசாரணைச் செய்வதற்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜனநாயகரீதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் அரசு பணத்தை

தேர்தல் சீர்திருத்தத்திற்கும் போராடுவேன் காந்தியவாதி ஹசாரே சபதம்


“திரும்பத் திரும்ப ஊழல் செய்திடும் அரசு பணியாளர்களுக்கு மரண தண்டனை அளித்திட வேண்டும்; லோக்பால் மசோதா மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை இல்லையென தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லாத நபர் மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெறக் கூடாது. அவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் லோக்பாலோடு மட்டும் நான் நிறைவடைந்துவிட மாட்டேன். தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்திடும் போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளேன்’

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு – அசீமானாந், பாரத் பாய் அப்ரூவர் மனுக்கள் தள்ளுபடி


ajmeer darda blast
அஜ்மீர்:அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியும், சங்க பரிவார ஹிந்துத்துவ தீவிரவாதியுமான அசீமானந்தா மற்றும் அதற்கு துணையாக இருந்த பாரத் பாய் இருவரையும் அப்ரூவராக  ஏற்றுக்கொள்ள அஜ்மீர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையில் இவ்விருவர்களால் கொடுக்கப்பட்ட அப்ரூவர் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எல்.முத்ஆல் மனுவை  ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

நடேசன், புலித்தேவனை உயிருடன் கொளுத்திய பகீர் ஆதாரங்கள்

கொழும்பு 2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது ராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உயிருடன் கொளுத்தப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தின் கடைசி நாளில் இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ்நிலையை தாம் தோற்றுவித்துள்ளதாகவும்,