தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.2.11

கறுப்பு பண பட்டியல்: இந்தியாவுக்கு வழங்க ஜெர்மனி, சுவிஸ் அரசுகள் தயார்


தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை இந்தியாவிடம் வழங்க தயார் என்று ஜெர்மனி மற்றும் சுவிஸ் அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளன.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய கறுப்பு பண முதலைகளின் பட்டியலை பெறுவதற்காக, சுவிஸ் நாட்டுடனும், ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் உள்ள லிச்டென்ஸ்டீன் என்ற குட்டி நாட்டுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, லிச்டென்ஸ்டீன் நாட்டில் எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. வரிஏய்ப்பு குற்றத்துக்காக, அந்த பட்டியலில் உள்ள 17 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது. ஆனால், அவற்றின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட மறுத்து விட்டது. இதற்கு அந்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தமே காரணம்.
இந்நிலையில், கறுப்பு பணத்தை வெளிக்கொணர இந்தியாவுக்கு உதவ தயார் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் நிதி அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், `இந்தியா கேட்டுக்கொண்டால், மேலும் பல கறுப்பு பண முதலைகளின் பெயர்களை இந்தியாவுக்கு அளிக்க தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட நாடுகளின் வரித்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் பெயர்களை அளிப்பது வழக்கமானதுதான். ஆனால், அந்த பெயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகிரங்கமாக வெளியிடக்கூடாது' என்றார்.
சுவிஸ் நிதி அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், `இந்தியாவுடனான திருத்தப்பட்ட வரி ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன், இந்தியாவுக்கு தகவல்களை அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அத்தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். கோர்ட்டுகளும், அதிகாரிகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகிரங்கமாக வெளியிடக் கூடாது' என்றார்

0 கருத்துகள்: