தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.11

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!


கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.
உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான

போராட்டத்தில் கலந்துக்கொள்ள ராம்தேவிற்கு ஹசாரே நிபந்தனை


வலுவான லோக்பால் மசோதாவிற்காக காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் அன்னா ஹசாரே துவக்க உள்ளார்.
இந்நிலையில் ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்திருந்தார்.ஏற்கனவே சர்ச்சைக்குரிய நபராக திகழும் ராம்தேவ் தனது போராட்டத்தில் கலந்துக்கொள்வதால் சிக்கல்கள் உருவாகி தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் என கருதிய ஹசாரே, ராம்தேவ் தனது போராட்டத்திலிருந்து கலந்துக்கொள்ளாமல் கழற்றிவிடுவதற்காக தான் நிபந்தனைகளை கடைப்பிடித்தால் போராட்டத்தில் பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.ஆனால்,
அந்த நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

மா.மா.கட்சியினரை கண்டித்து இன்று மாபெரும் கண்டனப் போர் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வெளியிட்டுள்ள அறிக்கை: தமுமுக அதன் அரசியல் வாரிசு ம.ம.கட்சியினரால் உணர்வு வார இதழ் அலுவலகம் சூரையாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதை சென்னை காவல்துறை அகற்றி அதன் சாவியை RDO விடம் ஒப்படைத்துள்ளார்கள்.ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின்

நவீன வசதிகளுடன் அதிவேக பாஸ்போர்ட் மையங்கள்!


தஞ்சை மற்றும் திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு பாஸ்போர்ட் அலுவலகங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. இவை பொதுமக்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க வகை செய்யும்.
பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்கும் வகையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில்

கடாபியை கொல்லும் நோக்கம் நேட்டோவுக்கு உள்ளது - அமெரிக்கா


லிபிய அதிபர் கடாபியைக் கொல்லும் நோக்கம் நேட்டோ படைகளுக்கு உள்ளது என்றும், கடந்த மாதமே நேட்டோ படைகள் அவரை கொல்ல முயற்சி மேற்கொண்டதாக அமெரிக்க கடற்படை அட்மிரல் சாமுவேல் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த மாதம் கடாபியின் மாளிகைகள் தாக்கப்பட்டது அவரைக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று உறுதியாகியுள்ளது.
லிபியாவில் அதிபர் கடாபி

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முகமது ஜான் பதவியேற்பு


தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.    
 
ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்று, சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம் பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார்.

60 வயதை கடந்தவர்கள் மந்திரி பதவி வகிக்க கூடாது: ப.சிதம்பரம் கருத்து


மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-  
 
தற்போதைய இளம் தலைவர்கள் மீது நான் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு உரிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்.
 
மத்திய மந்திரி சபையில் 40 வயது

மும்பை பத்திரிகையாளர் கொலையில் 7 பேர் கைது


மும்பை பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜன் கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் இருந்து வெளியாகும் பத்திரிகை மிட்டே. இந்த பத்திரிகையின் மூத்த நிருபர் ஜோதிர்மாய் தேவ் (வயது 56). ஜே.தேவ் என்று அழைக்கப்படும் அவர் புலனாய்வு நிருபர் ஆவார். கடந்த 11-ந் தேதி மும்பை பாவாய் பகுதியில் மர்ம மனிதர்கள் ஜே.தேவை

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து சிபிஐக்கு விலக்கு ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி


சென்னை, ஜூன் 28: தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐ அமைப்புக்கு விலக்கு அளித்திருப்பது ஏன் என்று விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம், அரசு அலுவலகங்களில் நடைபெறும் பல்வேறு மோசடிகள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு