தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.11

மும்பை பத்திரிகையாளர் கொலையில் 7 பேர் கைது


மும்பை பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜன் கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் இருந்து வெளியாகும் பத்திரிகை மிட்டே. இந்த பத்திரிகையின் மூத்த நிருபர் ஜோதிர்மாய் தேவ் (வயது 56). ஜே.தேவ் என்று அழைக்கப்படும் அவர் புலனாய்வு நிருபர் ஆவார். கடந்த 11-ந் தேதி மும்பை பாவாய் பகுதியில் மர்ம மனிதர்கள் ஜே.தேவை
துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவரது உடலில் 5 குண்டுகள் பாய்ந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கம் மராட்டிய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால் இதை முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவுகான் ஏற்க மறுத்தார். மாநில போலீசாரே விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பான விசாரணை அறிக்கையை 6-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.   
 
இந்த நிலையில் ஜே.தேவ் கொலை தொடர்பாக மும்பை போலீசார் 7 பேரை கைது செய்து உள்ளனர். 16 நாட்களுக்கு பிறகு இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை உள்துறை மந்திரி ஆர்.ஆர். பாட்டீல் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 
 
பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தேவ் கொலை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து 3 பேரும், சோலாப்பூரில் இருந்து ஒருவரும், மும்பையில் இருந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 7 பேரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறப்பாக துப்பு துலக்கிய மும்பை கிரைம் பிராஞ்ச் குழுவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.   
 
பிடிபட்ட 7 பேரும் இன்று கிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 4-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜே.தேவ் கொலையில் பிடிபட்ட 7 பேரும் சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்: