தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.11

இஸ்ரேல் மீண்டும் காஸா மீது குண்டு வீச்சு ஒன்பது பேர் மரணம்


பாலஸ்தீன – இஸ்ரேல் பேச்சுக்கள் ஒரு புறம் நடைபெறுகிறது. பாலஸ்தீனத்தின் தனிநாட்டுக்கான அங்கீகாரப் பிரேரணை ஐ.நாவின் அங்கீகாரம் பெறும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பதட்டமான நிலையில் இஸ்ரேலிய விமானங்கள் காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள றபா நகரத்தில் குண்டு வீச்சு நடாத்தின. இந்தத் தாக்குதலில் ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இஸ்லாமிய கடும் போக்கு ஜிகாத் அமைப்பினர் ஐந்து பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஜிகாத் உட்பட மொத்தம் ஒன்பது பேர் மரணித்தாக காஸா செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் 20 படையினர் சுட்டுக்கொலை ஆஸாத் ஆவேசம்


சிரியாவில் சர்வாதிகாரி பஸருல்ஆஸாத்தின் படுகொலைப் படைகள் இதுவரை 3000 பொது மக்களை சுட்டுக் கொன்றுவிட்டன. வேறு வழியற்ற நிலையில் இப்போது குடும்ப சர்வாதிகாரியின் படைகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. நேற்று நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 சிரியப்படைகள் படுகொலை செய்யப்பட்டனர், 53 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வு சிரியாவின் போராட்டப்பாதையில்

டெல்லியில், பார்முலா-1 கார்பந்தயம்; தகுதி சுற்றில் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

கார் பந்தயங்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, பார்முலா-1 கார்பந்தயம். பார்முலா-1 வடிவிலான கார்கள் தான், உலக கார் ரேசில் அதிவேகத்தில் செல்லக்கூடியதாக கருதப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 360 கிலோமீட்டர் வரை சீறிப்பாயும். பார்முலா-1 கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 1950-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள்


சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள் : ஆன்லைனில் தூதரகத்தில் பதிவு செய்க!
சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்ற ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த 20ம் தேதி வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் தொங்குபாலம் அறுந்து வீழ்ந்தது : இதுவரை 6 பேரின் சடலம் மீட்பு


அருணாச்சல பிரதேசத்தில் நேற்று மாலை, ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலமொன்று
அறுந்து வீழ்ந்ததில் இதுவரை 6 பேர் பலியாகியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கேமங் மாவட்டத்தில் உள்ள செப்பா நகரையும், நியூசெப்பா

30.10.11

தாலிபான் தாக்குதலில் 13 யு.எஸ். இராணுவத்தினர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான்கள் நேற்று காலை நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் அமெரிக்க படையினர் 13 உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடுமையான பாதுகாப்புடைய நகரமாக கருதப்படும் காபூலில் ஒரு கார் நிறைய குண்டுகளை நிரப்பிக்கொண்டு வந்து இத்தாக்குதலை தாலிபான்கள்

போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் கடாபியின் மகனுடன் தொடர்பு


தற்போது நைஜீரியா வழியாக கூலிப்படைகளின் உதவியுடன் நகர்ந்து கொண்டிருக்கும் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் உடனடியாக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் சரணடைய வேண்டும் என்று ஐசீசீ கேட்டுள்ளது. இடைத்தரகர் மூலமாக இவருடன் தொடர்பு கொண்ட போர்க்குற்ற நீதி விசாரணை அதிகாரிகள் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதையும், சரணடைய வேண்டிய அவசியத்தையும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதேவேளை தலை மறைவாக இருக்கும் கடாபியின்

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க உதவிய இந்தியா : பாகிஸ்தான் புகழாரம்


ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் தெரிவு செய்யப்படுவதற்கு,
இந்தியா பாரிய பங்களிப்பு செலுத்தியதாக பாகிஸ்தான் தூதுவர் அப்துல்லா ஹுஸைன் ஹரூன் நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை நண்பராக பார்ப்பதில் பல நாடுகள் தயக்கம் தெரிவித்த நிலையில், நாம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு இந்தியா எமக்கு ஆதரவு

முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை மகன்-ஆசிக்மீரா திருச்சி துணை மேயர்


தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களே மேயர் ஆகி இருக்கிறார்கள். அனைத்து மாநகராட்சி களிலும் அ.தி.மு.க.வே பெரும் பான்மை பெற்றுள்ளது. எனவே, 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. வினரே துணை மேயர் ஆக முடியும் என்ற நிலை உருவானது.
 மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்

துருக்கியின் வான் நகரை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம் : உணர்ச்சிகரமான படங்கள்


கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கியின், கிழக்கு நகரான, 'வான்' இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுமார் 100 மணித்தியாலங்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த 18 வயது இளைஞன் ஒருவன்  உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 2 வாரங்களே ஆன கைக்குழந்தை

ராணுவம் கடும் எதிர்ப்பு:கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக வாபஸ் இல்லை


புதுடெல்லி:ராணுவத்தின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து  கஷ்மீரில் சில பகுதிகளில்  ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் தற்காலம் இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் உள்பட வடகிழக்கு

உங்கள் பேஸ்புக் புகைப்படங்களை கடும் குளிருக்குள் உறைய வைக்க தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!


பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் புதிய சேவையக மையம் (New Server Farm) சுவீடனின் லொலே
(Lulea) நகரில், அமைக்கப்படவிருக்கிறது.  தனது அதிவேக தொழில்நுட்ப திறனுடன் இயங்கும் சூப்பர் கணனிகளை குளிர்மையாக வைத்திருக்கவே, வடதுருவத்துக்கு அருகாமையில் இப்படி கடுங்குளிரில் உறைந்து போயிருக்கும் சுவீடனை தெரிவு செய்திருக்கிறது. 

29.10.11

ஆர் எஸ் எஸ் - பாஜக வின் அடுத்த நாடகம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்து-திக்விஜய்சிங்


ஊழல் எதிர்ப்பு வேடம்போடும் ஆர் எஸ் எஸ் - பாஜக கட்சியினரின் அடுத்த நகர்வு, 'மூன்றாம் திட்டமாக' அநேகமாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்தே அரங்கேறக்கூடும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார். "நாட்டில் சம்பவித்த பல பயங்கரவாதச் செயல்களின் பின்ணணியில் சங்பரிவாரங்களின் முகம் வெளிப்பட ஆரம்பித்ததும், அதை மறக்கடிக்க வேண்டியே இப்படி ஓர் ஊழல் எதிர்ப்பு நாடகம் ஆடப்படுகிறது" என்றார் திக்விஜய்சிங.

சவுதிக்கு புதிய முடிக்குரிய இளவரசர்

உலகத்தின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவின் அடுத்த முடிக்குரிய இளவரசராக தற்போதைய உள்நாட்டு அமைச்சரும், அரச குடும்ப வாரீசுமான இளவரசர் நயீப் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22ம் திகதி அமெரிக்காவில் புற்று நோய் காரணமாக மரணமடைந்த 86 வயது சவுதி சுல்தானுடைய இடத்தில் 78 வயதுடைய நயீப் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது சவுதி மன்னராக இருக்கும் அப்துல்லா நோய்வாய்ப்பட்டுள்ளார்,

சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்



தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.

இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப்

துபாய்: முதலாளியை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியருக்கு மரணதண்டனை?


துபாய்: சம்பளம் தராத முதலாளியை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியருக்கு மரணதண்டனை?

சுமார் 45,000 திர்ஹம்கள் சம்பள பாக்கி தராத காரணத்தால் தன் முதலாளியை சுத்தியலால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு துபாய்  நீதிமன்றம் முதல் விசாரணை

கடாபி குடும்பம் நேட்டோவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்று போகிறது

நேட்டோ விமானங்கள் லிபியாவில் நடாத்திய தாக்குதல்கள் சர்வதேச போர்க்குற்றங்களுக்கு இணையானவை என்று கடாபி குடும்பம் தெரிவித்துள்ளது. கடாபியின் மரணம் நேட்டோவின் தவறான இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் முன் வைக்க இருப்பதாக கடாபி குடும்பத்தின் சார்பில் வாதாடும் வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் கடாபி கொல்லப்பட்ட முறை ஒளிநாடாவாக வெளி வந்துள்ளது.

ஹசாரே தன் குறிக்கோளிலிருந்து விலகிச் செல்கிறார்! - குழுவிலிருந்து விலகிய ராஜிந்தர் சிங் விமர்சனம்


அன்னா ஹசாரே தன் குறிக்கோளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதாக அவரது குழுவிலிருந்து சமீபத்தில் விலகிய ராஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
வலுவான ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம், போராட்டம் என பரபரப்பு கிளப்பியவர் அன்னா ஹசாரே. இவரது குழுவுக்கு டீம் அன்னா என்று பெயரிட்டுள்ளனர்.

டேனிஸ் படைகள் லிபியாவில் இருந்து ஒரு வாரத்தில் வெளியேறும்

நேட்டோவின் வேண்டுதலை ஏற்று லிபியாவில் குண்டு வீசச் சென்ற டேனிஸ் விமானங்களும், விமானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் டென்மார்க் திரும்பிவிட வேண்டுமென டேனிஸ் படைத்துறை அமைச்சர் நிக் காக்கருப் தெரிவித்தார். முதலாவதாக விமானங்கள் டென்மார்க் நோக்கி பறப்பெடுக்க வேண்டும், அதைத் தொடர்ந்து மற்றயவர்கள் வந்து சேர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

கடாபியை கொன்றவர் தண்டிக்கப்படுவார் சிறீலங்காவுக்கு சவுக்கடி !


கடாபி கொல்லப்பட்ட முறை கண்டிக்கத்தக்க செயல் என்று உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன. தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை தேசிய கொள்கை போலக் கொண்ட சிறீலங்கா அரசு கூட கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தது. இப்போது லிபியாவின் உயர்மட்ட அரச ஆயம்

ஆட்கொல்லி நீரிழிவு நோய்! 7 செகண்டுக்கு ஒருவர் மரணிக்கின்றனர்!!


உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது.

நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம்.

இந்நிலையில் சர்வதேச நீரிழிவு

28.10.11

லிபியாவில் 2012 வரை நேட்டோ படைகள் நிலைகொள்ள வேண்டும்


லிபியப் போர் முடிந்துவிட்டாலும் நேட்டோ படைகள் வரும் 2012ம் ஆண்டு முடியும்வரைதன்னும் லிபியாவில் நிலை கொள்ள வேண்டும் என்று லிபிய மேலதிக அரசின் தலைவர் முஸ்தாபா அப்டில் ஜலீல் நேற்று டோகாவில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து கோரிக்கை விடுத்துள்ளார். தமது நாட்டுக்கான ஆபத்து இன்னமும் குறைந்துவிடவில்லை என்று தெரிவித்த அவர் நேட்டோவைப் போலவே மற்றைய அயல் நாடுகளும் தமக்கு ஆதரவு தரவேண்டுமென

உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே : ரைம்ஸ்


உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே என்று ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் காட்டு மிராண்டித்தனமாகக் கொல்லப்பட்ட லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் சொத்துக்களை லிபிய அரசின் உயர்மட்ட ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தற்போதய கணக்குகளின்படி அவருடைய சொத்து 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவித்துள்ளது.

மோடியின் உண்ணாவிரத தொப்பிக்கதை உண்மையா இல்லையா?


ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்ற பெயரில் நரபலி நாயகன் நரேந்திர மோடி பகல் நாடகம் நடத்தினார். உண்ணாவிரதம் இருப்பதற்கோ, ஊழலை உண்மையிலேயே எதிர்ப்பதற்காக இவர்கள் உண்ணாவிரதம் நடத்தவில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். இவர் கட்சியை சேர்ந்த எடியூரப்பாவே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது இவர்களது மூஞ்சில் கரியை

ராம்லீலா மைதானத்தில் கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை அசைத்த கிரண்பேடிக்கு அசைய முடியாத ஆப்பு


கிரண் பேடி. இந்தியக் காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது, ராமன் மகாசேசே விருதுக்குச் சொந்தக் காரர்.
1980 -ம் வருடம் விதிமுறைகளை மீறி நிறுத்தியதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காரைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றவர்.

செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்


முராதாபாத்:கடந்த ஜூலை மாதம் உ.பி மாநிலம் முராதாபாத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து போலீஸாரால் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம் சிறுவர்கள் நீதி கிடைக்காமல் 4 மாதங்களாக சிறையில் வாடுகின்றனர்.
செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இச்சிறுவர்களுக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை.

உலக சனத்தொகை 7 பில்லியன் ஆகிறது : ஐ.நா அறிவிப்பு


புதுடெல்லி
இன்னமும் சில நாட்களில் அதாவது இந்த அக்.31 ம் திகதிக்குள் உலக
சனத்தொகை 7 பில்லியனை கடந்து விடும் என ஐ.நா புதிய தகவல் ஒன்றை நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. சனத்தொகை பரம்பல் வீதத்தில் இந்த புதிய மைல் கல் இம்மாதம் (அக்.31) நிலைநாட்டப்படலாம் என ஐ.நா கணிப்பிட்டுள்ளது.
உலக சனத்தொகையின் அபரிதமான

உலக கின்னஸ் சாதனை வீடியோக்களை பார்வையிட குரோம் உலாவியின் செயலி.


உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சிகளாக கின்னஸ் உலக சாதனை வீடியோக்களே இன்று வரை இருந்து வருகின்றது.
இதற்கு அவற்றின் மூலம் கிடைக்கும் திரில் அனுபவமே காரணமென்கிறார்கள். திரில் விரும்பும் இரசிகர்களுக்கென கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிடவென கிடைக்கிறது குரோம் உலாவியின் அப்.

கின்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அப்ளிகேஷன் இதுவாகும். குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று நிறுவியதும்

எடியூரப்பா மீது மேலுமொரு ஊழல் குற்றச்சாட்டு


கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, புதிய ஊழல் புகார் எழுந்துள்ளது.
பத்ரா நீர்ப்பாசன திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்க எடியூரப்பா ரூ 13 கோடி லஞ்சம் வாங்கினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பொஸாருக்கு லோக் ஆயுக்தா

இளம் பெண்களுக்கு வலைவிரிக்கும் இணையதளம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!!


இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட்

27.10.11

சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா

ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் சட்டவிரோதமாக குடியிருப்புக்கள் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்.ஃபலஸ்தீன் – இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைக்கு சட்டவிரோத குடியிருப்புக்கள் கட்டுவது தடையாக மாறுகிறது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியா குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை இணை
அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார்.

'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் சவூதி தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?



சவூதி அரபிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாட்டினர் தங்கள் சம்பளத்தை 'அப்படியே' தாயகம் அனுப்புவதில் கட்டுப்பாடு ஏற்படுத்த சவூதி தொழிலாளர் நல அமைச்சகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி வாங்கும் சம்பளத்தில் 'குறிப்பிட்ட சதவிகிதம்' மட்டுமே தாயகம் அனுப்ப அனுமதிக்கப்படும் என்று

அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை


புதுடெல்லி:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகளை குறித்தும், மாநிலத்திலிருந்து காணாமல் போன் ஆயிரக்கணக்கான நபர்களைக்குறித்தும் முழுமையான விசாரணையை நடத்த மத்திய அரசு தயாராகவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

துருக்கி நிலநடுக்கம் : 2 வாரங்களே ஆன கைக்குழந்தை பத்திரமாக மீட்பு (வீடியோ)


துருக்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலநடுக்கத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வாரக்குழந்தை, அவரது தாயார், மற்றும் பாட்டியார் எரிக் நகரின் கட்டிட இடிபாடுகளிலிருந்து 48 மணிநேரத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா


புதுடில்லி: இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிக

ஹுஸைன் காதிரிக்கு மரணத்தண்டனை தீர்ப்பு கூறிய நீதிபதி சவூதியில் அடைக்கலம்


இஸ்லாமாபாத்:பஞ்சாப் மாகாண முன்னாள் ஆளுநர் ஸல்மான் தஸீர் கொலைச்செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாலிக் மும்தாஸ் ஹுஸைன் காதிரிக்கு மரணத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி பர்வேஸ் அலி ஷா சவூதி அரேபியாவில் அடைக்கலம் தேடியுள்ளார்.தண்டனைக்குரிய தீர்ப்பை வழங்கியபிறகு கொலை மிரட்டல் வந்ததையொட்டி நீதிபதியும், அவரது குடும்பத்தினரும் சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்காதீர்கள் : அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கோரிக்கை


இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆஸ்திரேலியா தன் நாட்டு
சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்த அறிவுரைகளை திரும்ப பெறுமாறு, இந்தியா வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி மற்றும், சனநடமாட்டம் அதிமுள்ள இந்திய நகரங்களுக்கு, தன் நாட்டு பயணிகள் சுற்றுலா மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்கும் படி ஆஸ்திரேலியா அறிவுறுத்தியிருந்தது.

"முதல் பிளாஸ்டிக் ஜெட்" விமானம் பறந்தது


போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், 787 ட்ரீம்லைனர், இன்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது.
“உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்” என்று போயிங் நிறுவனத்தால்

இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைது

புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஜெர்சி (30). பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக ஜெர்சி வந்தார்.

2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவலர் அருண்குமார் (28), ஜெர்சி மீது காதல் கொண்டுள்ளார். ஜெர்சியிடம் இதுபற்றி ஜாடைமாடையாக பேசியுள்ளார். பலமுறை அவரை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

26.10.11

தாய்லாந்தில் கடும் வெள்ளம் - 373 பேர் பலி


தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால்
அங்கு போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான டான் முஆங் விமான நிலையத்தீல் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.

வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்-நீதிபதி ராஜேந்திர சச்சார்


புதுடெல்லி:வகுப்பு வாத கலவரங்களை தடுக்கவும், குஜராத் மாதிரி இனப்படுகொலைகளை தடைச்செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ’சமூக கலவரங்களின் புதிய அலைகள்-காரணங்களும், தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.

கடாபியின் பூதவுடல், திறந்த பாலைவனத்தின் இரகசிய இடத்தில் நல்லடக்கம்


லிபிய முன்னாள் அதிபர் மௌமர்

காட்டுமிராண்டிகளின் உலகை தன் மரணத்தால் உணர்த்திய கடாபி..


ஆலைகள் மட்டும் உலகத்தை வெப்பமாக்கவில்லை.. காட்டுமிராண்டி செயல்களும்தான்...
கேணல் கடாபி 42 வருட சர்வாதிகார ஆட்சியின் வடிவம்..
உலகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெரும் பணக்கார சர்வாதிகாரி..

அமெரிக்காவோ, இந்தியாவோ போர் தொடுத்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவு : ஆப்கான் அதிபர்


பாகிஸ்தான் மீது, எந்த நாடாவது போர் தொடுத்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக
களமிறங்குவோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் மீள் அழைக்கப்பட்டு வரும் நிலையிலும், ஆப்கானிஸ்தானின் மீள்

லிபிய இடைக்கால அரசின் மீதான மேற்குலக சந்தேகம்


கடாபியின் மரணம் குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.லிபியா சுதந்திரமடைந்து விட்டதாக அதன் புதிய ஆட்சியாளர்கள் அறிவித்து ஒரு தினந்தான் ஆகியிருக்கும் நிலையில், அங்கு இரண்டு விடயங்கள் மேற்குலகை அவர்கள் மீது சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.
முதலாவது விடயம் மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடைக்கால

துனிஷியா நாட்டு தேர்தலில் இஸ்லாமிய கட்சிக்கு மெஜாரிட்டி


ஆப்பிரிக்காவில் உள்ள துனிஷியாவில் தான் முதன் முதலாக சர்வாதிகாரிகளுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இதைத்தொடர்ந்து தான் எகிப்து, லிபியா, ஏமன், சிரியா ஆகிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டது. இந்த நாட்டில் 23 ஆண்டுகளாக பென் அலி ஆட்சி தான் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த புரட்சியில் இந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இப்போது தான் முதல் முறையாக அங்கு தேர்தல் நடந்தது.

25.10.11

ஹசாரேவின் `ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள்

எங்களை தூக்கிலிடுங்கள் - கிரண்பெடி ஆவேசம்,`என்னுடைய சேமிப்பை ஏழைகள் நலனுக்காக செலவிடுகிறேன். அதுபோல, அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அனைவரும் லோக்பால் மசோதாவுக்காக ஒன்றிணைந்து செயல்படுகிறோம். எங்களுடைய செயல் தவறென்றால் எங்களை தூக்கில் போடலாம்' என கிரண்பெடி தெரிவித்தார்.

ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வருமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே குழுவினர் போராடி வருகின்றனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதைத்

ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!


நல்லவனெப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்’ – கிராமப்புறங்களில் ‘நல்லவர்களைப் போல’ வேடமிடுபவர்களைக் குறித்த சொலவடை இது. நாமும் முன்பே சொன்னோம். நாம் சொன்னதை லேசுபாசாய் சந்தேகித்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் சந்தேகத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இதோ, கடந்த வாரம் ப்ரஷாந்த்

கடாபி உடல் சிற்றா நகரில் அடக்கம்


கடாபியின் கடைசி ஏழு நாட்கள் நகர்வுகளை விளக்கும் இணையப்பக்கமொன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் தனது சகாகக்களுக்கு தொவித்த கடைசி விருப்பங்கள் வெளியாகியுள்ளன. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தனக்கு மரணம் ஏற்பட்டால் தான் பிறந்த சிற்றா நகரிலேயே தனது உடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். மேலும் தான்

லிபியா சுதந்திர நாடாக பிரகடனம்


_56235175_jex_1209444_de27-1
பெங்காசி:42 ஆண்டுகால கத்தாஃபி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சுதந்திர நாடாக லிபியாவை தேசிய மாற்றத்திற்கான கவுன்சில்(என்.டி.சி) பிரகடனப்படுத்தியுள்ளது. லிபியாவில் கத்தாஃபிக்கு எதிரான எழுச்சி உருவான பெங்காசியில் சுதந்திர பிரகடன நிகழ்ச்சி நடந்தது. ’லிபியாவின் நகரங்கள் அதில் உள்ள கிராமங்கள், மலைகள், வான்வெளிகள்

விக்கிலீக்ஸை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது: அசாஞ்ச் அறிவிப்பு


விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும்

ராமாயணம் விவாதம்:டெல்லி பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு


புதுடெல்லி:டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடத்திட்டத்திலிருந்து ராமாயணம் குறித்த உரைநடையை ஹிந்துத்துவா சக்திகளின் நிர்பந்தத்தை தொடர்ந்து நீக்கியதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு எதிரான ஆன்லைன் பிரச்சாரத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த மற்றும் சாராத ஏராளமான பேராசிரியர்கள்,

துபாய் விமானம் அவசரமாக தரை இறங்கியது: 410 பயணிகள் உயிர் தப்பினர்


ஐதராபாத் அருகே உள்ள விமான நிலையத்தில் துபாய் நோக்கி சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து துபாய் நோக்கி நேற்று அதிகாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 26 சிப்பந்திகள்

லிபிய மக்களுக்காக இறுதிவரை போராடுவேன் : கடாபியின் மகன் சூளுரை


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின், மகன்களில் ஒருவரான சயிப்
அல் இஸ்லாம், தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க போவதாக அறிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் அல்ராய் தொலைக்காட்சிக்கு நேற்று விடுத்த ஒலிநாடாவொன்றில் சயிப் அல் இஸ்லாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.