தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.11

சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்காதீர்கள் : அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கோரிக்கை


இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆஸ்திரேலியா தன் நாட்டு
சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்த அறிவுரைகளை திரும்ப பெறுமாறு, இந்தியா வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி மற்றும், சனநடமாட்டம் அதிமுள்ள இந்திய நகரங்களுக்கு, தன் நாட்டு பயணிகள் சுற்றுலா மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்கும் படி ஆஸ்திரேலியா அறிவுறுத்தியிருந்தது.

இதேபோன்று அமெரிக்காவும், தனது சுற்றுலா பயணிகளுக்கு எச்சரித்திருந்தது. பண்டிகைகாலங்களில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்பதால், இந்தியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதானத்துடன் இருக்கும் படி ஐந்து நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளே இவ்வாறு தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா தன் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்த குறிப்புக்கள் தேவையற்ற ஒன்று என்றும், இன்றைய பயண சூழல் முற்றிலும் மேம்படுத்தப்பட்டது என்றும் இந்தியா அறிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டுடன் பேசும் இதனை வலியுறுத்தியுள்ளதுடன், ஆஸ்திரேலியா வழங்கியிருந்த இந்த அறிவிப்புக்களை உடனடியாக திரும்ப பெறும் படி கோரியுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள கெவின் ரூட், அந்த எச்சரிக்கை வழமையான ஒரு நடவடிக்கைதான். இந்தியாவுக்கு எதிராக பிரத்தியேகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிடமும், இது தொடர்பிலான கோரிக்கையை எஸ்.எம்.கிருஷ்ணா  முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: