
கொச்சி:டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபரான கேரளாவைச் சார்ந்த டி.எஸ்.பாலன்(வயது 55) என்பவரை தேசிய புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.
பாலன் வளையல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். டெல்லி குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தவர் இவர் என கருதப்படுகிறது.






