வலுவான லோக்பால் மசாதாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அன்னாஹசாரேவின் நடவடிக்கைகள், பா.ஜ.க வுக்கு ஆதரவு அளிப்பதாக அமைந்துள்ளது என, ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காவல்துறை முன்னாள் அதிகாரி கிரண்பேடி மற்றும் சமூக சேவகர் மேதா பட்கர் இன்னும் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். விரைவில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக ஹசாரே அறிவித்தார்.
இந்நிலையில் அரியான மாநிலம் ஹிசாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஹசாரே குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்தப் போராட்டம் ஹசாரே குழுவின் மத்தியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
ஹசாரேவின் போராட்டத்தின் நோக்கம் தடம் மாறி காங்கிரஸ் கட்சியை மட்டுமே எதிர்ப்பது என்ற கொள்கையில் சென்று கொண்டிருப்பதாக குழுவின் ஒரு தரப்பினர் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.
மேலும் ஹசாரே குழுவில் முக்கிய இடம் பிடித்திருந்த பிரசாந்த் பூஷன் தற்போது ஓரம் கட்டப்படுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் முடிவே இறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேதாபட்கர் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவலை ஊழலற்ற இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த அஸ்வதி முரளிதரன் மறுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக