அகமதாபாத், அக். 11- குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரம் தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் ஆளுக்கு ஒரு தீர்ப்பை சொல்லியுள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் இல்லாமலேயே உள்ளது. இந்த நீதிபதி பதவிக்கு சமீரபத்தில் ஆளுநர் கம்லா பேனிவால், நீதிபதி ஆர்.ஏ.மேத்தாவை நியமித்தார். இதற்கு பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த
நியமனத்தை ஆளுநர் மேற்கொண்டுள்ளார் என்று அது குற்றம் சாட்டியது. மேலும் இந்த நியமனத்தை எதிர்த்து நரேந்திர மோடி அரசு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை நீதிபதிகள் அகில் குரேஷி மற்றும் சோனியா கோகனி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதிபதி அகில் குரேஷியின் தீர்ப்பில், நீதிபதி மேத்தா நியமனம் செல்லும் எனத் தெரிவித்துள்ளார். நீதிபதி சோனியா கோகனியின் தீர்ப்பில், நியமனம் செல்லாது என்று தெரிவித்துள்ளார். விதிகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதி அகில் குரேஷி தனது தீர்ப்பில் மேலும் கூறுகையில், இந்த வழக்கைப் பொறுத்தவரை, அமைச்சரவையின் எந்தவிதமான யோசனையும், அரசியல் சட்டத்திற்குப் புறம்பானதாகவே அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக