தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.2.11

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முசரப் மீது ஷூ வீச்சு


லண்டன் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசரப் மீது லண்டனில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் ஷூவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முசரப் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது லண்டனில் இருக்கும் முசரப், கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் எனும் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் இக்கட்சியின் பொதுக்கூட்டம் லண்டனில் உள்ள வால்தாமஸ்டவ் மாவட்டத்தில் நடந்தது. இதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட முசரப் பேச துவங்கினார் அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் ஒரு வாலிபர் திடீரென தனதுகாலில் இருந்து ஷூவை கழற்றி மேடைமீது வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஷூ முசரப் மீது விழவில்லை, மேடையின் முன்பகுதியில் விழுந்தது. உடனடியாக பாதுகாவலர்கள் வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்ததாக ஜியோ செய்தி சேனல் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். எனினும் கைது செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.

குவைத்தில் அரசுக்கெதிராக போராட்டம் நடத்த அழைப்பு

குவைத்.பிப்.7:அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்த குவைத்தில் இளைஞர்களின் அமைப்பொன்று அழைப்பு விடுத்துள்ளது.

ஃபிஃப்த் ஃபென்ஸ்(Fifth Fence) என்ற அமைப்புதான் அரசை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ட்விட்டர் சமூக இணை நெட்வர்க்கில் இதுக்குறித்த செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்திற்கு வெளியே நாளை(செவ்வாய்கிழமை) 11 மணிக்கு இப்பேரணி நடைபெறுவதாக அந்த செய்தி கூறுகிறது.

போலீஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்கு ஆளான இளைஞர் ஒருவர் மரணித்ததுக் குறித்து செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் ஷேக் ஜாபிர் காலித் அல் ஸபாஹ் கேள்விக் கணைகளை சந்திக்கவிருக்கும் சூழலில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளது.

ஆறுவாரத்திற்கு பிறகு பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் இறந்ததுத் தொடர்பான விசாரணையை தாமதித்த அரசு ஜனநாயக விரோத நடவடிக்கையை பின்பற்றுவதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

35 வயதான முஹம்மது கஸ்ஸாய் அல் முதைரியின் உடல் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி போலீஸ் ஸ்டேசனில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுத்தொடர்பான வழக்கை விசாரித்த பாராளுமன்ற கமிட்டி முஹம்மது கஸ்ஸாய் 6 நாட்களாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்தது. இதுத்தொடர்பாக 16 போலீஸார் கைதுச் செய்யப்பட்டனர்.

குவைத் ஆளும் அரசைச் சார்ந்த ஷேக் ஜாபர் இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராஜினாமாச் செய்தபொழுதிலும், அவரை பதவியில் தொடர குவைத் கேபினட் கேட்டுக்கொண்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


புரட்சி:அச்சத்தின் பிடியில் ஃபலஸ்தீன் அதிபர் அப்பாஸ்


பிப்.6:ஃபலஸ்தீனில் அப்பாஸ் தலைமையிலான அரசு எகிப்தில் ஏற்பட்டுள்ள நாடுதழுவிய மக்கள் புரட்சி ஃபலஸ்தீனுக்கும் பரவி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக ஃபலஸ்தீனிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபலஸ்தீன் அதிபர் அப்பாஸ் தனது ஃபதாஹ் இயக்கத்துடனும், ஃபலஸ்தீன பாதுகாப்பு அமைப்புகளுடனும் பல தொடரான ஆலோசனை கூட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் சலாம் பயாத் எகிப்தின் தாக்கங்கள் ஃபலஸ்தீனில் ஏற்படுமா என்று ஆலோசித்து வருவதாகவும் லண்டனை தளமாக கொண்டியங்கும் அல் ஹயாத் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விரைவாக ஃபலஸ்தீனில் ஒரு புரட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதார, உள்நாட்டு பாதுகாப்பு , உள்நாட்டு அரசியல் சமநிலை போன்றவற்றை மாற்றிவிடும் என்று ஃபலஸ்தீனிய அதிகாரிகள் அச்சம் கொண்டிருப்பதாக மேலும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஏற்படும் ஒரு எழுச்சி ஹமாஸ் அமைப்பு மேற்கு கரை பிரதேசத்துக்கு மீண்டும் வருவதற்கான கதவை திறந்து விடும் என்றும் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான மோதல்களை முறியடித்து விடுமாறு கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைதிற்கு பயந்து சுவிஸ் பயணத்தை ரத்துச்செய்​த ஜார்ஜ் w புஷ்


பெர்ன்,பிப்.7:அடுத்தவாரம் திட்டமிட்டிருந்த சுவிஸ் சுற்றுப் பயணத்தில் கைதுச் செய்யப்படுவோம் என பயந்து பயணத்தை ரத்துச் செய்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்.

வருகிற 12-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருகும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பங்கேற்கமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் ஷேர்ஸர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கைதுச்செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சி ஜார்ஜ் புஷ் தனது சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இடதுசாரிகளின் போராட்டம்தான் காரணம் என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து கைதுச் செய்யப்பட்டவர்களை கொடூரமாக சித்திரவதைச் செய்ததற்காக புஷ்ஷின் மீது வழக்கு பதிவுச்செய்ய தீர்மானித்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் நடத்தவிருக்கும் புஷ்ஷை கைதுச் செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜெனீவா நீதிமன்றத்தில் புஷ்ஷின் மீது சித்திரவதைக் குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் ஜார்ஜ் புஷ் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஒரு ஜோடி ஷூக்களுடன் வரவேண்டுமென மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ்ஷின் மீது ஈராக்கின் தலைநகர் பாக்தாதில் வைத்து ஷூவை வீசிய முன்ததர் அல் ஸெய்தியின் தீரச்செயலை நினைவுக்கூறும் விதமாகத்தான் இந்நடவடிக்கை என அவ்வமைப்புகள் கூறியிருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஈரானில் கைதுச் செய்யப்பட்ட அமெரிக்கரிகளின் மீதான விசாரணை துவங்கியது


டெஹ்ரான்,பிப்.7:அத்துமீறி ஈரானுக்குள் நுழைந்து உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி கைதுச் செய்யப்பட்ட அமெரிக்கர்களின் மீதான விசாரணை ஈரான் நீதிமன்றத்தில் துவங்கியது.

ஷாரா ஷோர்ட், ஷேன் பார், ஜோஸ் ஃபட்டல் ஆகியோர் ஈரான்-ஈராக் எல்லையில் வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டனர்.

ஈரானில் அமெரிக்காவின் பிரதிநிதியான லிவியா லியு அகோஸ்டி உட்பட எவரையும் நீதிமன்ற விசாரணை அறையில் அனுமதிக்கவில்லை. உடல்நல பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு ஷாரா ஷோர்ட் என்ற பெண்ணிற்கு கடந்த செப்டம்பரில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. அவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ளார்.நவம்பரில் விசாரணை துவங்கும் என முன்னர் அறிவித்திருந்த பொழுதிலும் அப்பெண்மணி ஆஜராகவில்லை என்பதால் விசாரணை தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதர இரண்டு பேரை இன்று ஈரானின் புரட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

DiggGoogle Bookmarksreddit

சங்க்பரிவா​ர் மற்றும் காங்கிரஸின் போராட்டத்தால் விடுதலைச் செய்யப்பட்ட 'சிமி' உறுப்பினர்​கள் மீண்டும் கைது

புதுடெல்லி,பிப்.7:குடியரசு தினத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்ட 5 'சிமி' இயக்க உறுப்பினர்களை வி.ஹெச்.பி-யின் போராட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் கைதுச் செய்துள்ளது மத்தியபிரதேச மாநில போலீஸ்.

33 மாத சிறைவாசத்திற்கு பிறகு இவர்களை விடுதலைச் செய்ய சிபாரிசுச் செய்த சிறைத்துறையின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் சிறை துணை சூப்பிரண்ட் ஆகியோருக்கெதிராக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறையிலிருந்து விடுதலையான 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் கைதுச் செய்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் சவ்ராடியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் காவி முகம்'சிமி' உறுப்பினர்கள் விடுதலைச் செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய பிரதேச மாநில விசுவஹிந்து பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் போராட்டம் நடத்தின. ஆனால், மதசார்பற்ற வேடம் புனையும் காங்கிரஸ் கட்சியும் 'சிமி' உறுப்பினர்களின் விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தியது அக்கட்சியின் போலி மதசார்பற்ற வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

சங்க்பரிவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு உஜ்ஜயினில் வைத்து போலீசார் கைதுச் செய்தனர்.

தேசவிரோத இலக்கியங்களை கைவசம் வைத்திருந்ததாகவும், ரகசியக் கூட்டம் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டி 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஜாதில் பர்வஜ், அயாஸ் ரியாஸ் அஹ்மத், அக்பர் அஃப்ஸல் கான், மெஹ்ருத்தீன் ஷேக், இர்ஷாத் அலி ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர். ஐந்து வருட சிறைத்தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் வி.ஹெச்.பி உறுப்பினரான பாலகிருஷ்ண கேதார், ஸோனு ஷேக்வாத் ஆகியோர்தான் அரசுதரப்பின் முக்கிய சாட்சிகள். விசாரணையின் போது எதிர்தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு பதிலளித்த முக்கிய சாட்சிகளில் ஒருவரான பாலகிருஷ்ண கேதார் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்குவது தொடர்பான கூட்டத்தை 'சிமி' உறுப்பினர்கள் நடத்தியதை தான் காணவில்லை என தெரிவித்தார். ஆனாலும், நீதிமன்றம் 'சிமி' உறுப்பினர்களுக்கு அநியாயமாக தண்டனை வழங்கியது.

சிறை வாழ்க்கையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தின்போது கைதிகளை விடுதலைச் செய்வது வழக்கமாகும். அதனடிப்படையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதற்கெதிராகத்தான் வி.ஹெச்.பி உள்பட சங்க்பரிவார பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றுகோடி ரூபாய் பணத்தை சிறைத்துறை அமைச்சர் உள்பட பல லஞ்சமாக பெற்றுக்கொண்டு 'சிமி' உறுப்பினர்களை விடுதலைச் செய்ததாக போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜையின் கச்சோட் சப்-ஜெயில் துணை ஜெயிலர் சஞ்சீவ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறைத்துறை பொறுப்பை வகிக்கும் முதன்மை செயலாளர் சுதேஷ்குமார், சிறை டி.ஜி.பி வி.கெ.பவார் ஆகியோரை அத்துறைச் சார்ந்த பொறுப்பிலிருந்து மாற்றியது மத்தியபிரதேச பா.ஜ.க அரசு.

இதற்கிடையே, தேசத்துரோக குற்றம் சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரை பணம் வாங்கிவிட்டு விடுதலைச் செய்ததாக குற்றஞ்சாட்டை எழுப்பி, இச்சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், சிறைத்துறை அமைச்சர் ஜகதீஷ் தேவரை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டுமென மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

பெரும் சதி இதில் நடந்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கெ.கெ.மிஷ்ரா கூறுகிறார். இச்சம்பவத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு சி.பி.ஐ விசாரணைக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சிபாரிசுச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டு அதிகாரிகளின் மீது குற்றத்தை சுமத்தியதிலிருந்து அரசின் இரட்டை வேடம் தெளிவானதாக அவர் கூறுகிறார்.

அப்பாவிகளை விடுதலைச் செய்ததற்காக கூப்பாடு போடும் காங்கிரஸ்தான் மத்தியிலும் ஆட்சி செய்கிறது. ஆனால், நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் வெட்ட வெளிச்சமான போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது அக்கட்சி தலைமையிலான அரசு.

நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


கஷ்மீர் குறித்த ஆவணப் படத்திற்கு இந்திய சென்சாரில் போராட்டம்


பிப்.6:அஷ்வின் குமார் இயக்கிய கால்பந்து விளையாட்டு பற்றிய இந்திய ஆவணப் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவதில் போராட்டம் நடந்து வருகிறது.

கஷ்மீரில் பிறந்த பாஷ்ராத் என்கிற திறமையான கால்பந்து வீரர், பிரேசிலில் கால்பந்து பயிற்சி எடுக்க முயற்சி செய்யும் போது தான் கஷ்மீரி என்பதால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லும் படம்.

இந்த இயக்குனர் இதற்கு முன் இயக்கிய 'லிட்டில் டெரரிஸ்ட்' என்கிற குறும்படம் 2004 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு பரிசீலனை செய்யப்பட்டது. இவர் ரோடு டு லடாக்(2003), தெ பாரெஸ்ட்(2008), டேஸ்டு இன் டூன் (2010) போன்ற படங்களை இயக்கியவர். ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்பட்ட இவரது 'லிட்டில் டெரரிஸ்ட்' உலகெங்கும் நூற்றி மூன்று திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இப்போது இவர் இயக்கி இருக்கும் 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' (Inshaallah football) என்று பெயரிடப்படுள்ள இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற புசான் சர்வதேசிய திரைப்பட விழா' (Pusan International Film Festival) மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற 'துபாய் சர்வதேச திரைப்பட விழா' (Dubai International Film Festival) ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது.

ஆனால் இந்தியாவில் வெளியிட இந்திய சென்சார் போர்டை அனுகியபோது முதலில் இந்த படத்தை தடை செய்ததாகவும் அதன் பின் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தின் இயக்குனர் அஷ்வின் குமார் டிசம்பர் 23, 2010 அன்று தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த படத்தை இந்திய சென்சார் போர்டு தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இருந்தும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை மறுத்து ஷர்மிளா தாகூர் மறுநாள் 'தி ஹிந்து' நாளிதழில் பேட்டி அளித்து இருந்தார். இரு முறை நிராகரிக்கப்பட்டு பிறகு இந்த படத்திற்கு இறுதியில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

கால்பந்து ரசிகர்களுக்கு என்று எடுக்கப்பட்ட திரைப்படமான 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' படத்தில் சித்தரவதை செய்வதை விவரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்று 'அவுட்லுக்' செய்தி வெளியிட்டு இருக்கிறது.

'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பத்தை மறுத்து இந்திய சென்சார் போர்டிற்கு பெரிய நெடிய கடிதம் ஒன்றை இயக்குனர் அஷ்வின் எழுதி 'ஃபேஸ்புக்' மூலம் வெளியிட்டு இருந்தார். அதில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதால் பெரும்பாலான திரையரங்குகள், தொலைக்காட்சி சானல்கள், டி.டி.ஹெட்ச் போன்றவற்றால் நிராகரிக்கப்படுவதை குறிப்பிட்டு மறுபரிசீலனை செய்து 'U/A' சான்றிதழ் வழங்க முயற்சித்து இருந்தார்.

டெஹல்கா இதழ் பேட்டியின் போது இதை ஷர்மிளா தாகூரிடம் கேட்ட போது அந்த காட்சி நீக்கப்பட்டால் அந்த படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கலாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இதற்கு அஷ்வின் குமார் "இது கற்பனை கதை அல்ல, கஷ்மீரிகளின் வாழ்கையில் தினமும் நடக்கும் உண்மை கதையை உலகம் அறிவதற்காகவே எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
source:ஊடகம்

கம்போடியா-தாய்லாந்து எல்லையில் கடும் போர்


போனேபென், பிப்.7   தாய்லாந்து-கம்போடியா எல்லையில், இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தினர். கம்போடியாவில் போனேபென் மாகாணத்தில் 11-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பிராஹ் வைகீர் எனும் கோயில் உள்ளது. இந்த கோயிலை கைப்பற்றுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வியாழன்று தாய்லாந்து ராணுவத்தினர் திடீரென கம்போடியா எல்லையான போனோபென் பகுதியில் நுழைந்து கோயிலை பிடிக்க முயற்சித்தனர். இதற்கு கம்போடியா ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்பிலும் பீரங்கி தாக்குதல் நடந்தது. இதில்20 கிமீ.சுற்றளவு கொண்ட கிராமத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் அக்கிராமத்தினைவிட்டு வெளியேறியுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் ஜின்கூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி இக்கோயிலை ஐ.நா. உலக கலாச்சார சின்னமாக அறிவித்தது. கம்போடியாவில் எல்லைப்பகுதியில் உள்ள அண்டைநாடான தாய்லாந்து இக்கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வந்தது. எல்லையில் கோயில் அருகேயுள்ள 1.8 சதூர மைல்கள் (4.6 சதுர கி.மீ இடத்தினை தாய்லாந்து உரிமை கோரி வருகிறது. இதற்கு கம்போடியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் கம்போடியா- தாய்லாந்து எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இருநாடுகளின் ஆதிக்க போட்டியால் கலாச்சாரமிக்க கோயிலுக்கு சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கம்போடியா பிரதமர் ஹூன்சென், எல்லைப்பிரச்னை குறித்து ஐ.நா.பாதுகாப்புச்சபை தாய்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.