தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.2.11

கம்போடியா-தாய்லாந்து எல்லையில் கடும் போர்


போனேபென், பிப்.7   தாய்லாந்து-கம்போடியா எல்லையில், இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தினர். கம்போடியாவில் போனேபென் மாகாணத்தில் 11-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பிராஹ் வைகீர் எனும் கோயில் உள்ளது. இந்த கோயிலை கைப்பற்றுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வியாழன்று தாய்லாந்து ராணுவத்தினர் திடீரென கம்போடியா எல்லையான போனோபென் பகுதியில் நுழைந்து கோயிலை பிடிக்க முயற்சித்தனர். இதற்கு கம்போடியா ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்பிலும் பீரங்கி தாக்குதல் நடந்தது. இதில்20 கிமீ.சுற்றளவு கொண்ட கிராமத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் அக்கிராமத்தினைவிட்டு வெளியேறியுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் ஜின்கூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி இக்கோயிலை ஐ.நா. உலக கலாச்சார சின்னமாக அறிவித்தது. கம்போடியாவில் எல்லைப்பகுதியில் உள்ள அண்டைநாடான தாய்லாந்து இக்கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வந்தது. எல்லையில் கோயில் அருகேயுள்ள 1.8 சதூர மைல்கள் (4.6 சதுர கி.மீ இடத்தினை தாய்லாந்து உரிமை கோரி வருகிறது. இதற்கு கம்போடியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் கம்போடியா- தாய்லாந்து எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இருநாடுகளின் ஆதிக்க போட்டியால் கலாச்சாரமிக்க கோயிலுக்கு சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கம்போடியா பிரதமர் ஹூன்சென், எல்லைப்பிரச்னை குறித்து ஐ.நா.பாதுகாப்புச்சபை தாய்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்: