தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.8.11

துபாய்:இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான விருது ஷேக் கலீஃபாவிற்கு


3756206763
அபுதாபி:இவ்வாண்டிற்கான மிகச்சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யானுக்கு துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது கமிட்டி தேர்வுச்செய்துள்ளது.
துபாயில் நடைபெற்றுவரும் 15-வது சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாட்டிற்கும், குடிமக்களுக்கும்,

வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை


imagesCA8AIW85
புதுடெல்லி:சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன் போன்ற அமைப்புகளைப் போலவே வலதுசாரித் தீவிரவாதக் குழுக்களும் ஆபத்து நிறைந்தவையாகும். எனவே வலதுசாரித் தீவிரவாத்துக்கு எதிராகவும் உறுதியுடனும் அச்சப்படாமலும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
“இந்தியன் முஜாகிதீன் தனக்குத் தானே எதிரி’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் புதன்கிழமை அவர் பேசியது:

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்


உலகிலேயே  மிக உயர்ந்த கட்டிடம்  சவுதி அரேபியாவின்  ஜித்தாவில், ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.2008 இல் இதற்கான திட்டப்பணிகள்  தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் இந்த  ஹோட்டல் உருவாக்கப்படவுள்ளது. சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம்.

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாகத் தற்போது துபாய் நகரின் பூர்ஜ் கலிஃபா கட்டிடம்.திகழ்ந்து வருகிறது

பிளாஸ்டிக் மாற்று இருதயம் பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

லண்டன், ஆக. 5-   இங்கிலாந்தை சேர்ந்தவர் மாத்யூ கிரீன் (40). இவர் இருதய நோயினால் மிகவும் அவதிப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லண்டனில் உள்ள பாப்ஓர்த் என்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர் ஸ்டீவன் சூய் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவரது இருதயம் முழுவதும் பாதிப்பு அடைந்து இருந்தது தெரிய வந்தது.

அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்


Worlds-Most-Expensive-House-Antilia
மும்பை:ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.
முகேஷ் அம்பானி வக்ப் நிலத்தை ருபாய் 20 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம்

படிப்பதற்கு அமெரிக்கா லாயக்கில்லை: மூத்த விஞ்ஞானி


கல்வி கற்பதற்கு அமெரிக்கா உகந்த இடமில்லை என்று மூத்த இந்திய விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கத் தான் விரும்புகின்றனர். இந்நிலையில் கல்வி கற்பதற்கு அமெரி்ககா சிறந்த இடமில்லை என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் சி. என். ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராவ் பேசியதாவது,

மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்


imagesCACUIQZ5
மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) விசாரணை நடத்திவரும் இவ்வழக்கில் இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.