தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.11

அருண் சோரிக்கு சி.பி.ஐ சம்மன்

புதுடெல்லி,பிப்:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்டிப்படைத்து வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.கவையும் தொற்றிக்கொண்டது.

வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொடர்பு அமைச்சராக பதவி வகித்த அருண் சோரிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
விசாரணை நடத்துவதற்கு வருகிற 21-ஆம்தேதி டெல்லியில் சி.பி.ஐ தலைமையகத்தில் ஆஜராக அருண்சோரிக்கு
சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முபாரக் வீழ்ந்தார், இப்போது அலி அப்துல்லாவின் முறை!? : யேமனின் தொடங்கும் புதிய வன்முறைகள்


எகிப்தில் அரச எதிர்ப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றிபெற்றதைஅடுத்து, அந்நாட்டை பின் பற்றி யேமன் நாட்டிலும் அரச எதிர்ப்பு அதிகரித்துள்ளது.தலைநகர் சானாவில் அதிபர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நடத்திச்சென்ற ஊர்வலத்தின் மீது அரச

இம்பாக்ட் பக்கம் - காதலர் தினம் எப்படி வந்தது?

இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அந்நியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றை முஸ்லிம்கள் தற்காலத்தில் அதிகமாகச் செய்கிறார்கள். அந்தச் செயல்களில் ஈடுபடுகின்ற பலருக்கு தாங்கள் செய்வது சரியா, தவறா என்பது தெரியாது.

ஆம்! அவர்கள் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் அடையாளங்கள் அவிசுவாசத்தின் அடையாளங்கள். அவர்கள் கடன் வாங்கும் கருத்துகள், சிந்தனைகள் யாவும் மூடநம்பிக்கையிலிருந்து பிரவாகமெடுத்தது. இவைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு நேரெதிரானவை

நினைவலைகளி​ல் ஷாஹித் ஆஸ்மி

ஷாஹித் ஆஸ்மி - மனித நேயமிக்க துணிச்சலான வழக்கறிஞர். அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும் அவர்களுக்காக வாதாடியவர்.தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை துணிவுடன் எடுத்து நடத்தி விடுதலையைப் பெற்றுத் தந்தவர். நீதிக்காக போராடிய அந்த இளைஞரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அக்கிரமக்காரர்களின் கைக்கூலிகள் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தனர்

எகிப்து மக்கள் எழுச்சியில் இஃவான்களின் பங்கு என்ன?

பிப்.13:தஹ்ரீர் சதுக்கத்தை மையமாக வைத்து கடந்த 18 தினங்களாக நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அமைதியான முறையில் நிர்வகித்தது யார்? என்ற கேள்விக்கு பதிலாக அனைவரும் சுட்டிக் காட்டுவது எகிப்தின் பிரதான எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் இயக்கமாகும்.மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெறுவதற்கு இணையதளமும், அல்ஜஸீராவும் முக்கிய பங்கு வகித்த பொழுதிலும் வலுவான தலைமையில்லாமல் இந்த மக்கள் புரட்சி வெற்றிப் பெறவியலாது என்பதைத்தான் இஃவான்களின் பங்களிப்பு நமக்கு உணர்த்துகிறது

அல்ஜீரியாவிலும் மக்கள் எழுச்சி தீவிரம்

அல்ஜீர்ஸ்,பிப்.13:தடையையும் மீறி நூற்றுக்கணக்கான மக்கள் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அல்ஜீரியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென அவர்கள்வலியுறுத்தினர்.
போராட்டம் நடைபெறும் வேளையில்         மோதல் வெடித்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைதுச் செய்ததாகவும் செய்திகள் கூறுகின்றன