தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.11

அல்ஜீரியாவிலும் மக்கள் எழுச்சி தீவிரம்

அல்ஜீர்ஸ்,பிப்.13:தடையையும் மீறி நூற்றுக்கணக்கான மக்கள் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அல்ஜீரியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென அவர்கள்வலியுறுத்தினர்.
போராட்டம் நடைபெறும் வேளையில்         மோதல் வெடித்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைதுச் செய்ததாகவும் செய்திகள் கூறுகின்றன

.துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து பல அரபுநாடுகளின் வீதிகளில் ஜனநாயக உரிமைகளைக் கோரி மக்கள் களமிறங்கியுள்ளனர்.

1992 முதல் போராட்டங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ள அல்ஜீரியாவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் அரசு தலைமையில் நடைபெற்று வருகின்றன.

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாட வெள்ளிக்கிழமை வீதிகளில் இறங்கிய மக்களை அல்ஜீரியா போலீஸ் தடுத்தது.

துனீசியாவிலும், எகிப்திலும் ஏற்பட்டுள்ள புரட்சி அல்ஜீரியாவில் ஏற்படுவதை தடுக்கத்தான் அல்ஜீரிய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: