தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.1.11

இந்திய ராணுவமும் & முஸ்லிம்களும்: ஒரு சமூக பார்வை.

கடந்த ஆண்டு(2010) நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த முஸ்லிம்களின் விபரம்:
புதுடெல்லி,ஜன.17:இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதமாவர். ஆனால், இந்தியாவின் ராணுவத்தில் அவர்களின் எண்ணிக்கையோ வெறும் 3 சதவீதம்தான். கடந்த 2010 ஆம் ஆண்டு 187 ஜவான்கள் தங்கள் உயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 6.41 சதவீதம்பேர் முஸ்லிம்களாவர். அவ்வாறெனில் தங்களது சதவீதத்திற்கு அதிகமாகவே உயிர் தியாகம் புரிந்துள்ளனர் முஸ்லிம் ராணுவத்தினர். 12 முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 10 பேர்கள் தரைப் படையில் பணியாற்றியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் கழிந்த பொழுதும் ராணுவத்தில் தேர்வுச் செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வரலாற்றாய்வாளர் டாக்டர் உமர் காலிதி அவர்கள் மிகுந்த ஆய்வுச் செய்து, ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்ட Khaki and Ethnic Violence(காக்கியும், இன வன்முறையும்) என்ற நூலில் இதுக்குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை எடுத்துரைத்தது இந்நூல். இது பாராளுமன்றத்தில் சூடான விவாதத்திற்கும் காரணமானது. 5 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்களின் பிற்போக்குத் தன்மையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சச்சார் கமிஷன் அறிக்கை ராணுவத்திடம் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு என கேள்வி எழுப்பிய பொழுது, மத ரீதியாக எந்த எண்ணிக்கையும் தரமாட்டோம் என ராணுவம் பதிலளித்தது.

ராணுவத்தில் ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான அறிக்கையும் இல்லை. 3 சதவீதம் என்பது பொதுவான ஊகமாகும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை 29 ஆயிரம் இருக்கலாம். ஆனால், இந்த எண்ணிக்கை ஜம்மு கஷ்மீர் காலட்படையில் இடம்பெற்றிருக்கும் 50 சதவீத முஸ்லிம்களை குறைத்தால் இன்னும் மிகக் குறைந்த சதவீதமாகும். இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ராணுவத்தில் அதிக அளவில் சிறுபான்மை மக்களை சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!

மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.  மேலும் அறிய கிலிக் செய்யவும்

அலஹாபாத் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டனம்! – நமது கண்டனத்தை ஜனவரி 27 ல் ….

உத்ரபிரதேச மாநிலத்தில் 17 வயது பெண்னை கடத்தி கற்பழிப்பு செய்தவனை நிரபராதி என தீர்ப்பளித்து அலஹாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அலஹாபத் நீதிமன்றத்தின் இந்த அநியாயத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆதாரமில்லாமல் யூகத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்குவது என்பது சரியாக அமல்படுத்தப்படுவதில்லை என்று தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.
அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த மேல்நோக்கான (பொடுபோக்கான) செயல்  எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீபதிகள் அல்தாஃப் ஆலம் மற்றம் லோதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலஹாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற கண்டனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லும் அளவிற்கு அலஹாபாத்தின் மிகப் பெரும் அநியாயத் தீர்ப்பான பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிராக  லட்சோப லட்சம் மக்களின்  கண்டனங்கள் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 அன்று உலகிற்கு வெளிவரும் .
-அபு நபீலா நன்றிwww.:tntj.net இணையதளம்  இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

ஹரீரியை ஆதரிக்கமாட்டோம்:ஹிஸ்புல்லாஹ்

ஹசன் நஸ்ருல்லாஹ்
பெய்ரூத்,ஜன.18:புதிய அரசை உருவாக்குவதற்கு லெபனானில் தற்காலிக பிரதமராக பதவியிலிருக்கும் ஸஅத் அல் ஹரீரிக்கு ஆதரவளிக்கமாட்டோம் என ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஹரீரியின் அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து முதன் முதலாக ஹிஸ்புல்லாஹ்வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலான அல்மனாரில் உரைநிகழ்த்திய நஸ்ருல்லாஹ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அரசுக்கு ஆதரவை வாபஸ்பெற்ற தமது கட்சியின் நிலைப்பாடு அரசியல் சட்டத்தின்படியும், ஜனநாயக ரீதியிலானதாகும் என நஸ்ருல்லாஹ் கூறினார்.

ஸஅத் ஹரீரியின் தந்தையும் லெபனானின் முன்னாள் பிரதமருமான ரஃபீக் ஹரீரியின் கொலைவழக்குத் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஐ.நாவால் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயம் குறித்த சர்ச்சை லெபனான் அரசை நெருக்கடிக்குள்ளாக்கியது.

கொலைக் குற்றத்தை தீர்ப்பாயம் ஹிஸ்புல்லாஹ்வின் மீது சுமத்தும் எனக் கருதப்படுகிறது. தீர்ப்பாயம் அரசியல் மயமாக்கப்பட்டதால் நாங்கள் அதனை எதிர்க்கிறோம். லெபனான் எங்களது தாய் நாடாகும். அதன் ஸ்திரத்தன்மையிலும், பாதுகாப்பிலும் பிறரைவிட எங்களுக்கு அதிக ஆர்வம் உண்டு என நஸ்ருல்லாஹ் தெரிவித்தார்.

நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட தீர்ப்பாயம் அமெரிக்க, இஸ்ரேல் சதித்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்பது ஹிஸ்புல்லாஹ்வின் குற்றச்சாட்டு.

ரஃபீக் ஹரீரியை கொன்றது இஸ்ரேல் என்பதற்கான தெளிவான ஆதாரங்களை முன்னர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டிருந்தது. தீர்ப்பாயத்தை நிராகரிக்க வேண்டுமென ஹிஸ்புல்லாஹ் கோரியதை ஸஅத் அல் ஹரீரி மறுத்ததுதான் ஹிஸ்புல்லாஹ் ஆதரவை வாபஸ் பெறக் காரணமாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்    நன்றி:பாலைவதூதுஇந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

அஸிமானந்தாவின் மனமாற்றத்திற்கு காரணமான அப்துல் கலீம் ஜாமீனில் விடுதலை

ஹைதராபாத்,ஜன:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு போலீசாரால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கலீமும் ஒருவர்.

மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.

இதனைத் தொடர்ந்து இக்குண்டுவெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளி அஸிமானந்தா கடந்த வருடம் நவம்பர் மாதம் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அஸிமானந்தா ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

எதிர்பாராத விதமாக அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இதே வழக்கில் கைதுச் செய்யப்பட்ட அப்துல் கலீம், அஸிமானந்தாவுக்கு சேவைபுரிய நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்துல் கலீமின் நன்னடத்தை மற்றும் போலி வழக்கில் அவர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை அறிந்துக்கொண்ட அஸிமானந்தா மனம் மாறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்புகளில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) அப்துல் கலீமுக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகையை ஈடாக வைத்து அப்துல் கலீமுக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல்கலீம் மருத்துவக்கல்லூரி மாணவராவார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களாக அவர் தனது படிப்பை தொடர முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் கலீம் போலீசாரால் ஒரு ரகசியமான பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து விடுதலையான அப்துல்கலீம் மீண்டும் செல்ஃபோனை சிறையிலிருந்த ஷேக் அப்துல் காதர் என்பவருக்கு அளித்ததாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த அப்துல் கலீம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "நான் பல மாதங்களாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை என்னுடன் சிறையிலிருந்த ஒருவர் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார். உடனே அவர் என்னை சந்தித்து பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர்தான் அவரைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். அஸிமானந்தா வேறு பெரிய நபர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என நான் கருதுகிறேன். நான் அவரிடம், என்னை போலீசார் கைதுச் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியது மற்றும் இரண்டுமுறை நார்கோடிக் அனாலிசிஸ்(உண்மைக் கண்டறியும் சோதனை) சோதனைக்கு உட்படுத்தியது ஆகியவற்றைத் தெரிவித்தேன். மேலும் நான் அவருக்கு தண்ணீர் பிடித்துக் கொடுப்பது உள்பட சில சேவைகளை புரிந்தேன். மேலும் அவர் சொல்வதை அமைதியாக கேட்டேன். இவையெல்லாம் அவருடைய மனதை தொட்டது. இதனால் அவருக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

செய்தி:twocircles.net  நன்றி:பாலைவணதூது
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

அருணாசலப் பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதியே: சீனா பிடிவாதம்

சீனா சொந்தம் கோண்டாடும் பகுதி
பெய்ஜிங், ஜன. 17: அருணாசரப்பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதிதான். சீனாவின் இந்த கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 அருணாசலப்பிரதேசம் தென் திபெத் என்றும் சீனா கூறியுள்ளது.
 கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு விளையாட்டு வீரர்களுக்கு சீன அரசு தனித் தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை வழங்கியது. இது தொடர்பாக இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.
 இந்த விவகாரம் எழும்பிய சில தினங்களில் அருணாசலப் பிரதேசம் தொடர்பான தமது கொள்கை எப்போதும் போலத்தான்.அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிற முடிவை சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலுவலக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
 கிழக்கு பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி உள்ளிட்ட சீன-இந்திய எல்லை பிரச்னையில் சீனாவின் கொள்கை எப்போதும் ஒன்றுதான். இதை இந்திய தரப்பும் நன்கறியும். இந்த நிலை மாறாது. இந்திய-சீன எல்லையில் உள்ள கிழக்குப்பகுதியில் அருணாசலப்பகுதியும் அடங்கும். எல்லை பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா-சீனா நடத்திவரும் பேச்சுவார்த்தையில் இதுவும் அடங்கி உள்ளது. இதுவரை இருதரப்பும் 14 தடவை பேச்சு நடத்தி எந்த வித தீர்வையும் எட்டவில்லை.
 பியூஜியான் மாகாணத்தில் நடக்கும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த வாரத்தில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 விளையாட்டு வீரர்களுக்கு சீனா, தனி தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை வழங்கியது.
 இந்த செயல் இந்திய தரப்பை ஆத்திரத்தில் ஆழ்த்தியது. தனது எதிர்ப்பை இந்தியா பதிவு செய்தது. இந்நிலையில் தமது நிலையை சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
 விளையாட்டு போட்டியில் பங்கேற்க அருணாசலப் பிரதேச விளையாட்டு வீரர்கள் விமான நிலையம் சென்றபோது அந்த இருவரையும் குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். தனித்தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை சீனா வழங்கியதே இதற்கு காரணம். இவ்வாறு வழங்கப்படும் விசாவை இந்தியா அங்கீகரிக்காது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
 இதனிடையே,எல்லைப் பிரச்னை தீராத நிலையில் இத்தகைய விசா வழங்குவதை அனுமதித்தால்தான் அந்த பகுதி மக்கள் சீனா செல்லமுடியும். இதுதான் நடைமுறை ரீதியில் சாத்தியமானது என்பதால் இந்த ஏற்பாட்டை ஏற்க வேண்டும் என சர்வதேச சீன ஆய்வு நிறுவன ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி