தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.2.11

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி,பிப்.27:லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் வந்துள்ளனர்.

லிபியாவிலிருந்து தங்களது நாட்டவரை காக்கும் பணியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரம்


பெர்லின், பிப். 26 லிபியாவில் அதிபர் மம்மர் கடாஃபிக்கு ஆதரவான ராணுவ வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை சுட்டுத்தள்ளுவதால் அந்நாடு போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. இதனால் தங்களது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மீட்புப் பணியை ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளும் கைகோத்து மேற்கொண்டுள்ளன

சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது

மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA)

13 கர்ப்பிணிகள் உயிரைப் பறித்த கெட்டுப்போன குளுக்கோஸ் :ராஜஸ்தானில் நடந்தது விபரீதம்

ஜோத்பூர்,பிப்.27:ராஜஸ்தானில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளுக்கு, சத்துக்காக குளுக்கோஸ் மருந்தை ஏற்றியபோது, அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாரணையில், கெட்டுப் போன குளுக்கோஸ் திரவத்தை ஊசி மூலம் அவர்களுக்கு ஏற்றியது தெரியவந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்

துணிந்து வழக்கை சந்திப்பேன்: பாகிஸ்தானில் கைதான யு.எஸ்.அதிகாரி


நான் இருவரை சுட்டுக்கொன்ற விஷயத்தில் துணிந்து வழக்கை எதிர்கொள்வேன் என்று பாகிஸ்தானில் கைதான அமெரிக்க அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
முறைப்படி வழக்கை எதிர்கொள்வதற்கு அரசுரீதியான அதிகாரம் தனக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் ரேமண்ட் டேவிஸ் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு நலன் கருதி சிறைக்குள்ளேயே அவரிடம் நீதி விசாரணை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சாமட் ஆஜரானார். தமது தரப்பில் வாதாட ரேமண்ட் டேவிஸ் இன்னும் வழக்கறிஞரை அமர்த்தாததால் அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
வெள்ளிக்கிழமை விசாரணையின் போது ரேமண்டுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரம் குறித்த ஆவணம் அவரிடம் அளிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் தகவல்கள் அனைத்தும் உருது மொழியில் இருந்ததால் அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். தனக்கு உருது மொழி தெரியாது என்றும், ஆங்கிலத்தில் உள்ள ஆவணத்தை தருமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆயுதம் ஏந்திய இருவரும் தன்னிடம் வழிப்பறி செயலில் ஈடுபட முயன்றனர். அதனால் தற்காப்புக்காக அவர்களை தான் சுட வேண்டியதாயிற்று என்றும் நீதிபதியிடம் ரேமண்ட் தெரிவித்தார். இதை அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்தார்.
ரேமண்ட் வேண்டுமென்றே இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும், அவருக்கும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் ரேமண்ட். இதைத்தொடர்ந்து அடுத்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி யூசுப். அடுத்த விசாரணைக்குள் தமது தரப்பில் ஆஜராக வழக்கறிஞரை அமர்த்த வேண்டும் என்றும் ரேமண்டை கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் ஆயுதத்துடன் வந்த இருவரை ரேமண்ட் டேவிஸ் சுட்டுக்கொன்றார். இதையடுத்து அவரை ஜனவரி 27-ம் தேதி பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். ரேமண்ட் டேவிஸ் அமெரிக்க உளவுத்துறையின் ஏஜென்ட் என்றும், அவருக்கு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறது என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இதை அமெரிக்கா மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவைக் கருத்தில் கொண்டு ரேமண்டை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா பலமுறை வேண்டுகோள்விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.
நன்றி: தமிழ்கூடல்