தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.11

கோத்ரா ரெயில் எரிப்பு:63 பேர் விடுதலை, 31 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

அஹமதாபாத்,பிப்.22:2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் 31 பேர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: 65 பேர் பலி


ஆக்லாந்து, பிப். 22- நியூசிலாந்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 65 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் சில தேவாலயங்கள் சேதம் அடைந்தன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த பூகம்பம் பெரும் சேதத்தை விளைவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை


வாசிங்டன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக அவர்களுடன் சண்டையிட்டு வரும் அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறமுடியாது என்பதால் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முன்வந்து உள்ளது. இதற்காக அந்த இயக்கத்தினருடன் ரகசியமாக நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த தகவலை நியூயார்க்கர் என்ற பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

பின் அலியை ஒப்படையுங்கள் - சவூதியிடம் துனீஷியா கோரிக்கை

துனீஸ்,பிப்.21:மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்துள்ள துனீசிய நாட்டு முன்னாள் ஏகாதிபத்தியவாதியான ஜைனுல் ஆபிதீன் பின் அலியை தங்களிடம் ஒப்படைக்குமாறு சவூதியிடம் துனீசியா கோரியுள்ளது.

முன்னாள் அதிபர் பின் அலியின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளிருப்பதாக துனீசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் - ஜனதா தளத்தில் இணைந்த பஜ்ரங்தள் தலைவர் பேட்டி

பெங்களூர்,பிப்.21:கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள்ளின் முன்னாள் கண்வீனர் மஹேந்திர குமாரும் ஆதரவாளர்களும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இணைந்தனர்.

ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் மஹேந்திர குமாருக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசுவாமி

சிறு குருவி வடிவில் உளவு இயந்திரம்

பென்டகன்,பிப்.22:பதினாறு சென்டி மீட்டர் அளவுள்ள சிறு குருவி போன்ற உளவு இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெண்டகனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு மில்லியன் டாலர் செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி இயந்திரம் போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம்

கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டுவிட்டன ஜெ


கலைஞர் டிவி தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முதல்வர் கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ரூ 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.