தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.11

சிறு குருவி வடிவில் உளவு இயந்திரம்

பென்டகன்,பிப்.22:பதினாறு சென்டி மீட்டர் அளவுள்ள சிறு குருவி போன்ற உளவு இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெண்டகனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு மில்லியன் டாலர் செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி இயந்திரம் போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம்

மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.

இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும்.

சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி:பாலைவதூது

0 கருத்துகள்: