தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.11

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை


வாசிங்டன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக அவர்களுடன் சண்டையிட்டு வரும் அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறமுடியாது என்பதால் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முன்வந்து உள்ளது. இதற்காக அந்த இயக்கத்தினருடன் ரகசியமாக நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த தகவலை நியூயார்க்கர் என்ற பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
இதற்கிடையில் தான் அமெரிக்க வெளிநாட்டு மந்திரி கிலாரி ஒரு பேட்டியில், தலிபான்கள் அல்கொய்தாவுடன் தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டு விட்டு வன்முறையை கைவிட்டால் போதும் அவர்களுடன் அரசியல் தீர்வு காண முயலலாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒபாமாவின் அதிகாரிகளுக்கும், தலிபான் போராளிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாகவும், எப்படி தீர்வு காணலாம் என்பதற்கான வழிவகைகளை ஆராயும் விதத்தில் தான் இந்த பேச்சுவார்த்தை இருந்து வருகிறது என்றும் தீர்வை எட்டுவதற்கான விதத்தில் அது இன்னும் நடைபோடவில்லை என்றும் நியூயார்க்கர் பத்திரிகை குறிப்பிட்டு உள்ளது

0 கருத்துகள்: