தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.7.12

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சியல்ல -ரவூப் ஹக்கீம்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சி யல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அர வணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அத ன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அம் பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரணவீர திஸா நாயக்கவை ஆதரித்து தெஹியத்தகண்டிய மகாவலி ‘சீ” வலயத்தில் உள்ள

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 32 பேர் பலி


டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிரு ந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 32 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ஆப்கானின் சாக் மாவட்ட ஆளுநர் தலிபான்களால் சுட்டுக் கொலை


ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து 35Km மேற் கே வர்டாக் மாகாணத்தில் அமைந்துள்ள சாக் மாவ ட்டத்தின் ஆளுநர் (Governor)முஹம்மட் இஸ்மால் வாஃபா நேற்று ஞாயிற்றுக் கிழமை இனம் தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளா ர்இவர் தனது அலுவலகத்திற்கு காலை காரில் சென் று கொண்டிருக்கும் போது நடு வீதியில் தலிபான்க ளால் இடைமறிக்கப் பட்டு துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டது. இதில் ஆளுநர் தலத்திலேயே கொல்லப் பட் டதுடன் அவர் மகன்

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்


லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 204 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த மெகா விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். தொடக்க மூன்று நாட்களில் இந்தியாவுக்கு பெரிய

30.7.12

சவூதியில் கிளர்ச்சி: எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு


ரியாத்: கடந்த வெள்ளிக்கிழமை (27/07/2012) சவூதியின் கிழக்கு மாகாணத்தின் காதிஃப் பிராந்திய வீதிகளில் அணிவகுத்துச் சென்ற ஷியா கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்சவூதி உள்ளக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காதிஃப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் டயர்களை எரித்துக் குழப்பம் விளைவித்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் சவூதி அரசினால்

தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட 18 முஸ்லிம்கள் விடுதலை!


அஹ்மதாபாத்:2002 குஜராத் இனப்படுகொலைக்கு பழிவாங்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் போராளி இயக்கங்களுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 18 பேரை உயர்நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது. இவர்கள் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தகால அளவை தண்டனைக்குரிய

பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் ஒலிம்பிக் விஜயத்தை ரத்து செய்தது பிரிட்டன்


பிரிட்டன் குடிவரவுத் திணைக்களம் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையான FIA இன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒலிம்பிக் விஜயத்துக்கான வீசா விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளது.இதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால் இவர்களின் விஜயம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவுடன் சேர்ந்து ஊடுருவக்

இந்தியாவின் பழமை அரை ரூபாய் நாணயமொன்று 1.70 லட்சம் ரூபாய்க்கு விலை போனது


கோவையில் நடந்த கண்காட்சியில் இந்தியாவின் அரை ரூபாய் (அனா) நாணயம் சுமார் ஒன்றரை லட் ச ரூபாய்க்கு மேல் விலை போயுள்ளது.கோவையி ல் வருடாவருடம் நடக்கும் பழம்பொருள் கண்காட் சியில் பழைய நாணயங்கள், பல்வேறு நாடுகளின் பழைய ரூபாய் நோட்டுக்கள், அரியவகைப் பொரு ட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அப்படி இந்த ஆண்டு வைக்கப் பட்ட கண்காட்சியிலும்

ராஜபக்சவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க லண்டன் காவற்துறை மறுத்ததால் பயணம் இரத்து?


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வில் கலந்து திட்டமிட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு  பிரித்தானிய காவற்துறையி னர் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டதாலேயே அவ ர் தனது பயணத்தை இரத்து செய்துவிட்டதாக தெரி விக்கப்படுகிறது.ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ராஜபக்ச திட்டமிட்டிருப் பதாக அவரின் பேச்சாளர் பந்துல ஜயசேக முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் இதை எதிர்த்து லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பா ட்ட

ஒலிம்பிக்கில் பதக்கம் எடுக்காமலே புகழ் பெற்றது இந்திய அணி


இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிரு க்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அதன் ஜனத்தொகைக்கேற்ப பாரிய சாதனைகளை படைக் காவிட்டாலும் முதலாவது அணி வகுப்பில் சரித்திர ம் படைத்துவிட்டது.ஆரம்ப அணி வகுப்பில் ஒவ் வொரு நாட்டு அணியும் தத்தமது தேசிய உடையுடன் அணிவகுத்து வந்தபோது ஆட்டுக்குள் மாடு நுழைந்த து போல பெண்மணி ஒருவர் இந்திய அணிக்குள் நு ழைந்து நடந்து வந்தார்.

28.7.12

பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரை தாக்குவோம். தலிபான்கள் எச்சரிக்கை


"மியான்மருடன் உள்ள தொடர்பை பாகிஸ்தான் அரசு துண்டிக்கா விட்டால், அந்நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவோம்'' என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.மியான்மரில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த, எட்டு லட்சம்

ரஷ்யாவின் முதலாவது இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசை


ரஷ்யாவின் முதல் இஸ்லாமிய டிவி சேனல் ஆக ஸ்டில் தொடங்கும் என்று ரஷ்ய அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கு அல்-ஆர் டிவி என்று பெயர் சூட்ட ப்பட்டுள்ளது.ஐரோப்பிய ரஷ்ய முஸ்லிம்களுக்குக் கான இயக்குனர் டாமிர் தெரிவிக்கையில் இந்த அல் -ஆர் டிவி சேனல் ஆகஸ்டில் தனது ஒளிப்பரப்பை துவங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அல்-ஆ ர் டிவிக்கான நிதி தனிநபர் அன்பளிப்பின் மூலமும், தொழிலதிபர்களின் நிதியின் மூலமும் மற்றும் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் துணையு டன் ஆரம்பிக்கப்படுவதாக

ஈரான் அணுசக்தி மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல்: பின்லாந்து அமைப்பு தகவல்


ஈரான் நாட்டின் அணுசக்தி மைய கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக, பின்லாந்து நாட்டின் "சைபர்' பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.பின்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் "எஃப்- செக்யூர்' நிறுவன, ஆய்வுப் பிரிவுத் தலைவர் மிக்கோ ஹிப்பொனென் கூறியது:கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் எங்களுக்கு வருகிறது. அந்த மின்னஞ்சல்கள், ஈரான் அணுசக்தி மையத்தில் இருந்து

நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு கொலையானார்


நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரானா பகதூர் பம் 61, இவர் நேற்று காத்மாண்டுவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் பைக்குகளில் வந்து காரை வழிமறித்தனர். திடீரென நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த ரானாவை உடனடியாக

பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி அசாம் செல்கிறார்கள்?


அசாம் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர தருண் கோகாய்க்கு   அவசர  உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந் தாலும் கூட கலவரம் கட்டுக்குள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டுநேரில் சென்று பார் வையிட பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிர ஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அசாம் செல்ல விருப்பதாகத் டெல்லித் தகவல்கள் வெளிவந்துள்ள ன.கடந்த ஒருவாரமாக அசாமில் மலைவாழ் மக்க ளுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே

தொலைக் காட்சி மற்றும் ஊடகங்கள் மொழிக் கொலை செய்வதை தடுப்போம் - தமிழர் பண்பாட்டு நடுவம்


தமிழர் பண்பாட்டு நடுவத்தின் அறிக்கை வருமாறு: தமிழை கொலை செய்வது தான் நாகரீகமா? தமிழக தொலைகாட்சிகள், பண்பலைவரிசைகள் தமிழை நித்தம் நித்தம் கொலை செய்கின்றன . தமிழ் மக்கள் பார்க்கும் , கேட்கும் நிகழ்சிகளில் தமிழ் தான் இல்லை. ஒரு வாக்கியம் முழுமையாக தமிழில் இல்லை. குழந்தைகள், இளையோர்களை பங்கெடுக்க செய்து அவர்களை ஆங்கிலம் பேசவைத்து, ஆங்கில

லண்டனில் கேபிள் கார் அறுந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு!


லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளை இணைக்கும் கேபிள் கார் போக்குவரத்துக்காக அ மைக்கப்பட்ட கேபிள் அறுந்து விழுந்ததால், பயணி கள் பாதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஒலிம்பிக் போட்டியைக் காணவரு ம் ரசிகர்கள் தேம்ஸ் நதியின் மீது பயணித்த படி ல ண்டனின் அழகைப் பார்ப்பதற்காக 300 கோடி ரூபாய் செலவில் கேபிள் கார் போக்குவரத்து உருவாக்கப்ப ட்டுள்ளது. தெற்கு லண்

27.7.12

மெளனம் கலைத்தார் சூகி: சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு சட்டம் கொண்டுவர கோரிக்கை!


யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மரில் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட சூழலில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கோரிக்கை விடுத்துள்ளார்.பாராளுமன்றத்தில் முதன்முதலாக நடத்திய உரையில் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான

விபத்தில் பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதி!


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சேலையூரில் இயங்கி வரும் சியோன் மெட்ரிகுலேசன் பள்ளிக்காக குத்தகையின் அடிப்படையில் விடப்பட்ட பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான பேருந்தில் வரதராஜபுரம், பி.டி.சி. குவார்ட்டர்ஸ், 2-வது பிளாக்கில் வசித்து வரும் சேதுமாதவன் என்பவரின் மகள், இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 25.7.2012 அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்திலிருந்த துவாரம் வழியாக கீழே விழுந்ததில் பேருந்தின் பின்

அமெரிக்க இராணுவ தளங்கள் உலகம் முழுதும்..


ஈராக், ஆப்கான் போர்க்களங்களில் இருந்து அமெரி க்கா வெளியேறுவதால் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னம் குறைந்துவிட்டதாகக் கருதமுடியாது.த ற்போது உலகம் முழுவதையும் அமெரிக்கா மிக நவீ ன பாணியில் சுற்றிவளைக்க ஆரம்பித்திருப்பதாக வோஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் வைன் தெரிவித்தார்.இவருடைய கருத்தை மேற் கோள் காட்டி டென்மார்க் பொலிற்றிக்கன் விசேட செய்தி வெளியிட்டுள்ளது.பிரமாண்டமான படை களை எதிரி நாடுகளை நோக்கி நகர்த்துவதைவிட உலகம் முழுவதையும்

ஒபாமா அரசின் முக்கிய பொறுப்பில் சென்னை பல்கலைகழகத்தில் படித்த தமிழ் பெண்மணி.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தலைமையி லான அரசில் புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித் துள்ளார். அதில் ஒருவர் அமெரிக்க இந்தியரான ரா ணி ராமசாமி. இவருக்கு கலைகளுக்கான தேசிய கவுன்சிலில் முக்கிய உறுப்பினர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து ஒபாமா கூறும்போது: தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் நிறைவேற்றும் திறன் கொண்ட தனிநபர்கள்

குவைத் நாட்டுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டம்

குவைத் நாட்டுக்கு 4.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள 60 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஈரான் நாட்டின் தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை த் தற்காத்துக் கொள்வதற்காக குவைத் நாடு இவ்வ கை ஏவுகணைகளை வாங்குகிறது என்றும் இதுகுறி த்து கடந்த 20-ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் செனட் சபையின் அனுமதிக்கு

பழுதடைந்த பேருந்தால் சிறுமி பலி : போக்குவரத்து துறை அதிகாரிகளை ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு


பேருந்து விபத்தில் பலியான சிறுமி சுருதி தொடர்பி ல் சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே விசார ணைக்குஎடுத்துக்கொண்டுள்ளதுடன் இந்த வழக்கி ல் போக்குவரத்து அதிகாரிகள்  நாளை நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தாம்பர த்தில் தனிபார் பேருந்தில் பயணம் செய்து கொண்டி ருந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பேருந்தின் இருக் கை அடியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இச்சிறுமியின் மர ணத்தை அடுத்து

26.7.12

ரமலான் மாதத்தில் மற்ற மதத்தினர் வெளியிடங்களில் சாப்பிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சவுதி அரேபியா


ரமலான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு துவக்கப்பட்டு விட்டது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர்.இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சவுதியில்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் சோதனை ஓட்டம்


சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வசதிகள் சிறப்பாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச அளவில் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டு முனையத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு

மீண்டும் 1000 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு


கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 மாவது ஆண்டுநி றைவு கொண்டாடப் பட்டது.அப்போது அந்தநாளின் நினைவாக 1000 ரூபாய் நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அது அப்போதைக்கு பொதுமக்க ளின் தேவைக்கு கொடுத்துவிட்டு பின்னர் நிறுத்தி வைக்கப் பட்டு இப்போது,மீண்டும் அந்த 1000 ரூபாய் நாணயத்தை பொதுமக்களின் புழக்கத்திற்கு விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாகத் தெரி கிறது.மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த 1000 ரூபாய் நாணயம் 80% வெள்ளி, 20 % காப்பரால் உரு வானது. இந்த நாணயம் ஒன்றின் மதிப்பு 4 ஆயிரத்து 725 ரூபாய் என்று

கிறீன்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் : அதிர்ச்ச் செய்மதி படங்கள் வெளியீடு


கிறீன்லாந்தில் மற்றுமொரு பாரிய பனிப்பிரதேச பட லம் உருகி கடல் நீரில் கரைந்துவிட்டது ஆராய்ச்சி யாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.நாசா வெ ளியிட்ட, 4 நாட்கள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட இரு செய்மதி படங்களில் இவ்வேறுபாடு தெளிவாக தெரிகிறது. மூன்று தசாப்தகாலமாக இப்பகுதியை செய்மதி மூலம் கண்காணித்து வருகின்ற போதும் இப்போது கண்டுள்ள காட்சிகள் முன் எப்போதும்

2 ம் வகுப்பு மாணவி பலியானதால் பேருந்து தீவைப்பு (படங்கள் இணைப்பு)



சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிக மாக அடைத்து வைத்திருந்தனர்.இந்நிலையில் முடிச்சூர் சாலையி ல் வந்தபோது பேருந்து லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள்

25.7.12

நார்வெ நாட்டின் படுகொலைகளின் ஓராண்டு நிறைவு அனுசரிப்பு


நோர்வே நாட்டில் அண்டர்ஸ் பெஃரிங் பிரிவிக் என்னும் நபர் 77 பேரைச் சுட்டுக்கொன்று ஓராண்டு நிறைவுபெறுகிறது.அதனை நினைவு கூருமுகமாக பல அஞ்சலி நிகழ்வுகள்நோர்வே நாட்டில் அண்டர்ஸ் பெஃரிங் பிரிவிக் என்னும் நபர் 77 பேரைச் சுட்டுக்கொன்று ஓராண்டு நிறைவுபெறுகிறது.அதனை நினைவுகூருமுகமாக பல அஞ்சலி

பாகிஸ்தானின் பொதுச் சொத்தாகிறது ஒசாமா பின்லேடன் வாழ்ந்த இடம்.


ஒசாமா பின் லேடன் கொல்லப்படுவதற்கு முன் இறுதியாக வாழ்ந்த இடத்தைப் பொதுச் சொத்தாக அறிவிக்க, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பாகிஸ்தானில் அபோட்டாபாத் பகுதியில் உள்ள காரிசன் எனுமிடத்தில் பதுங்கி வாழ்ந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், அமெரிக்க கடற்படை "சீல்" பிரிவினரால் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் 5 ஆண்டுகள் ஒசாமா

நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கியது ஏன்? : விளக்கம் கோரும் மதுரை நீதிமன்றம்


மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியான ந்தா நியமனத்துக்கு எதிரான வழக்கு மதுரை நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா, மதுரை ஆதீனம் அருண கிரிநாதர்  ஆகியோர் நித்தியானந்தாவின் நியமனத் துக்கு விளக்கம் தரவேண்டும் என்று மதுரை நீதிமன் றம் ஆணையிட்டுள்ளதாகத் தெரிகிறது.மதுரை இ ளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப் பட்டது செல்லாது என்றும், அதற்கு

தென்கொரிய விமான நிலையம் உலகத்தின் முதலிடம்


இந்த ஆண்டுக்கான உலகத்தின் சிறந் த விமான நிலைய அவாட் தென் கொ ரிய விமான நிலையத்திற்கு வழங்கப் பட்டுள்ளதுவருடம் தோறும் உலகத்தி ல் உள்ள சிறந்த விமான நிலையம் எது வென்ற கணிப்பு நடைபெறுவது வழமை எட்டு ததலைப்புக்களில் நடா த்தப்படும் இந்தப் போட்டியில் தென் கொரியாவின் இன்கொன் சர்வதேச விமான நிலையம் ஐந்து விடயங்க ளில் முதலிடம் பெற்று உலகத்தின் சிறந்த விமான நிலையமாக

ஏன் புலிகளைத் தடை செய்யக்கூடாது? விளக்கம் தருக : இந்தியா


சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது?  எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியி ல் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடு வர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுத லைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரி யுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெ ளியாகியுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது : 196 7ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4ஆம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கு ம், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தர வு ஒன்றினை ஏன் பிறப்பி

24.7.12

முச்சதம் அடித்து சாதனை படைத்த ஹாஷிம் ஆம்லா


லண்டன்தென் ஆஃப்ரிக்காவுக்கும் இங்கிலாந்துக் கும் இடையே நடைபெற்று வரும் முதல் ஐநாள் மட் டைப் பந்தாட்டத்தில் தென் ஆஃப்ரிக்காவின்  ஹாஷி ம் அம்லா 311 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத் துள்ளார். தென் ஆஃப்ரிக்க வீரர் எடுத்த அதிகபட்ச ஓ ட்டங்கள் என்ற சாதனையைஇதன்மூலம் அவர் சாதித்துள்ளார். மேலும் 300 ஓட்டங்கள்குவித்த முதல் தென்

இன்று 24.07.2012 சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னை : இன்று  24.07.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்கண் ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளதுதிருவல்லிக்கே ணி பகுதி: காமராஜ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை ஹனுமந்தராயன் கோயில்தெரு, அயோத்தி நகர், சிங்கராச்சாரிமுதல் தெரு, சுங்குவார் தெரு, வெங்கட்ரங்கன் தெரு,

ஈராக் தாக்குதல் 107 பேர் கொலை 161 பேர் படுகாயம்


கடந்த இரண்டு ஆண்டுகால ஈராக் படுகொலை வர லாற்றில் இல்லாத தொடர் குண்டு வெடிப்புக்கள் நே ற்று முதல் இன்றுவரை ஈராக்கில் நடந்தேறியுள்ள ன.மொத்தம் 14 நகரங்களில் 22 தாக்குதல்கள் நடை பெற்றுள்ளன கடந்த 2010 மே மாதத்திற்கு பிறகு ந டைபெற்றுள்ள பாரிய தாக்குதல் இதுவாகும்.ஈராக் தலைநகர் பாக்தாத்தையும், அதைச் சுற்றிய வடபுல ஈராக்கையும் நோக்கி இந்தத் தாக்குதல் வியூகம் வகு க்கப்பட்டிருந்தாக ஏ.எப்.பி

சிரிய படைகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கின்றன


சிரியாவில் நடைபெறும் உள் நாட்டுப் போரில் இரசா யன ஆயுதங்கள் பாவிக்கப்படலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டது தெரிந்ததே.இப்போது கிடைத்து ள்ள தகவல்களின்படி உள்நாட்டு போராளிகளுக்கு எதிராக தாம் இரசாயன ஆயுதங்களை பாவிக்கவில் லை என்றும் வெளி நாடுகளில் இருந்து சிரியாவுக்கு ள் வரும் கூலிப்படைகளுக்கு எதிராகவே பாவிப்பதா க சிரியத்தரப்பு தெரிவித்துள்ளது.மறுபுறம் அரபுலீக் சிரிய அதிபர் ஆஸாட்டை எவ்வளவு சீக்கிரம் பதவி விலகி வெளியேற முடியு

ஆந்திராவில் ராகிங் கொடுமையால் பேசும் திறன் இழந்த மாணவி


ஆந்திராவின் விஜய நகரத்தில் காயத்திரி ஜூனியர் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த சா மிலி எனும் மாணவியை அவரது ஜூனியர் மாணவி கள் ராகிங் செய்திருக்கிறார்கள்.இதனால் அந்த மா ணவி பேசும் திறனை இழந்துள்ளார் என்று மருத்துவ ர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.14 வயதான ஷாமிலி 11ம் வகுப்பு மாணவியாவார். இரவு தனியாக இருக்கு ம் நேரத்தில் அறைக்குள் வந்த சீனியர் மாணவிகள், ஷாமிலியை ராகிங்

22.7.12

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!


புதுடெல்லி:இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று  நடைபெற உள்ளது.இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிஜேபி மற்றும் ஒருசில கட்சிகளின்  ஆதரவோடு முன்னாள் மக்களவை ச

சிரியாவிற்குள் நுழைய இஸ்ரேல் கபடத் திட்டம்

ஈராக் – சிரியா எல்லைப் புறத்தில் உள்ள அப கமால் எல்லைப் புறத்தை போராளிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதை மீட்க சிரிய படைகள் கடும் தாக்கு தல்களை ஆரம்பித்துள்ளன.கடந்த புதன் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்ட பின்னர் யுத்தத்தை எவ் வாறு முன்னெடுக்கலாம் என்ற இரகசிய ஆலோச னைகளில் ஈடுபட்டுள்ள சிரிய படைகள் இதுவரை சரியான முடிவை வெளிக்காட்டவில்லை.சிரியா வின் தலைநகர் டமாஸ்கஸ் மிகவும் பெரிய நகர் சுமார் ஆறு மில்லியன்

உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள்


2012 ஆம் ஆண்டு உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்ற அச்சமும் எதிர்பார்ப்புக்களும் பல வருடங்களு க்கு முன்னமே ஏற்பட்டு விட்டன.உலகம் இயற்கை அழிவுகளை எதிர் நோக்கி மனித இனம் பூமியில் உ யிர்வாழும் சூழல் சிக்கலாகுவதை ஏற்கனவே வெளி யான சில ஹாலிவுட் திரைப் படங்களிலும் சித்தரிக் கப் பட்டுள்ளன.இதற்கு உதாரணமாக 'தி டீப் இம்பாக் ட்' மற்றும் '2012' ஆகிய திரைப்படங்களைக் கூறலா ம். இத்திரைப் படங்களின் கதைப் படி 2012 ஆம் ஆண் டு டிசம்பர் 21 உடன்  மாயன்

ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பிற்க் வீரர்களை அனுப்ப தனியார் நிறுவனம் மறுப்பு. ராணுவம் ஈடுபட முடிவு.


லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, பாதுகாப்பு பணிக்காக, 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்வதாக கூறியிருந்த தனியார் நிறுவனம், போதிய வீரர்களை சப்ளை செய்யாததால், குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.லண்டனில், வரும் 27ம் தேதி, ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இந்த போட்டியை குலைக்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளதால்,

21.7.12

சிரியாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் : சீனா, ரஷ்யா மீண்டும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின


சிரியாவுக்கு எதிராக ஐ.நா சபை கொண்டுவரவிருந்த பொருளாதார தடை தீர்மானத்தை, ரஷ்யா மற்றும் சீ னா மீண்டும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படு த்தி நிராகரித்துள்ளன. சிரிய அதிபர் பசார் அல் அசாத் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதையும், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தாவிடி ல் பொருளாதார தடைகளை அங்கு அமல்படுத்துவ து தொடர்பில் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்ட து. இந்தியா உட்பட 11 நாடுகள்

சவூதி பெண்களுக்கு சிகை அங்காரம் செய்த அழகுக்கலை நிபுணருக்கு தண்டனை


சவூதி அரேபியாவிலுள்ள பெண்களின் வீடுகளுக்கு இரகசியமாக விஜயம் செய் து அவர்களுக்கு கேச அலங்காரம் மற்று ம் ஒப்பனை அலங்காரம் என்பவற்றை மேற்கொண்ட அழகுக்கலை நிபுணர் ஒ ருவருக்கு 200 கசையடிகள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளி த்துள்ளது.பச்சை குத்தும் நிபுணர் என பிரபலம் பெற்ற மேற்படி லெபனானிய நபருக்கு பெண்களுக்கு பச்சை குத்திய குற்றச்சாட்டில்

சிரிய அதிபர் தலைமறைவு இல்லை. புதிய ராணுவ அமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத், ராணுவ அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் நேற்று கலந்து கொண்டார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க, ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், டமாஸ்கஸ் நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு மைய தலைமையகத்தின் மீது, தற்கொலைப் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில், ராணுவ அமைச்சர் தாவூத் ரஜிஹாவும், அதிபர் பஷர் அல் ஆசாத்தின் மைத்துனர் அசெப் ஷாகத்தும்கொல்லப்பட்டனர்.

26 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக சரிவைச் சந்தித்த மைக்ரோசாப்ட் நிறுவனம்.


இணையதள விளம்பர வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சரிவை சந்தித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மைக்‌ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் தங்கள் நிறுவனம் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள்அல்லது 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளது.

அமெரிக்காவில் பேட்மேன் பிரிமியர் ஷோ திரையரங்கில் துப்பாக்கிச்சூடு : 12 பேர் பலி


அமெரிக்காவின் டென்வார் நகரின் சினிமா திரையர ங்கு ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.அ ண்மையில் திரைக்கு வந்த பேட்மேன் நள்ளிரவு காட்சி ஓடிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கி தாரி அருகிலிருந்த கார் பார்க் ஒன்றில் வைத்து, ரிஃ பிள்,

மனிதனை உயிருடன் தின்னும் மீனை கொண்டு வந்தால் ரூ.10,000 பரிசு. சீன அரசு அறிவிப்பு.


மனிதனை தின்னும் மீனை உயிருடனோ சாகடித்தோ பிடித்துக் கொண்டு வந்தால் பரிசு அளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் உள்ளது லியுஜியாங் ஆறு. இங்கு மனிதனை தின்னும் மீன்கள் (பிரானா) இருப்பது தெரிய வந்துளது. தென் அமெரிக்க கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் ஏராளமாக உள்ளன. மனிதனை தின்னும் இந்த வகை மீன்கள், லியுஜியாங் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 2 பேரை கடந்த வாரம் தாக்கி உள்ளது.இந்த மீன்கள், ஆற்றுக்குள் இறங்கும் மனிதர்களின் சதைகளை அப்படியே