தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.6.11

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது


இந்தியாவில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக, சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள மேற்கு மாவட்டம் ஒன்றின் பழங்குடியினர் கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பை இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பி.கே. சின்ஹா துவக்கி வைத்தார்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு காங்கிரஸ் செய்த தவறு தான் காரணம்:திக் விஜய்சிங்


உத்தரபிரதேச மாநிலத்தில் 1992 ம் ஆண்டு பாபரி மஜ்ஜித் இடிப்பை தடுக்கத் தவறியது அப்போது பஹுஜன் சமாஜ் வாடியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் தவறு என அக்க்கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங்க் கூறியுள்ளார்.
“காங்கிரஸ் கட்சி செய்த இரண்டு மிகப் பெரிய தவறுகள் ஒன்று பாபரி மஜ்ஜிதை இடிக்க விட்டது மற்றொன்று பஹுஜன் சமாஜ் வாடி கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்தது”

அரசுக்கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு சீட் தர மறுப்பு!


ஓசூர்: தமிழகத்தில், தெலுங்கு, கன்னடம், உருது சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடங்கள் பயின்ற சிறுபான்மையினருக்கு அரசுக்கல்லூரிகளில் சேர இருக்கை மறுக்கப்படுதாக மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ப்ளஸ் 2 வகுப்பில், தமிழுக்கு பதில், முதல் பாடமாக உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடம் படித்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர, சீட் மறுக்கப்படுவதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!

தர்மஸ்தலாவில் சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

ஞ்சுநாதர் இப்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். கருநாடகத்தின் தர்மஸ்தலாவில் அமர்ந்து கொண்டு தானுண்டு தனது தருமப் பரிபாலனம் உண்டு என்று சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது  பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைசாயும் போதெல்லாம் 

இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத், ஜூன். 30  -   இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இராணுவ ரீதியாக பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு. இராணுவ

ஆப்கான் நட்சத்திர ஹோட்டலில் தலிபான்கள் அதிரடி தாக்குதல் - நேட்டோவுடன் கடும் சமர் (வீடியோ)


மும்பை தாக்குதலை போன்று, ஆப்கான் தலைநர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 10 ஆப்கானிய மக்கள் கொல்லபப்ட்டுள்ளனர். (வீடியோ )

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் கலக்கம்


சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வை ஒரு புரட்டு, புரட்டிப்போட்டது போல், அதன் கூட்டணி கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சித் தலைமைக்கு எதிரான குரல் எழுந்துள்ளதால், தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன்