தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.3.11

திமுக கூட்டணி கட்சிகளும் அதன் தொகுதிகளும்!!

சென்னை:திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளான கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் மாவட்ட வாரியாக:

திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணி, பூந்தமல்லி (தனி), ஆவடி = சென்னை மாவட்டம்:

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு உலக நாடுகள் உதவி


டோக்கியோ, பூகம்பம் மற்றும் சுனாமியால் நிலைகுலைந்த ஜப்பானுக்கு உலக நாடுகள் உதவி அளிக்க முன்வந்து உள்ளன.
ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம், மற்றும் சுனாமி ஆகியவை ஒருசேர தாக்கின. 33 அடி உயரத்துக்கு எழுந்த ஆழிப்பேரலையால் சென்டாய் நகரமே அடியோடு அழிந்தது. கட்டிடங்களையும், ஓடும் ரயில்களையும் இந்த ஆழிப்பேரலை புரட்டி போட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

எகிப்து:ஜனநாயகம் மலருமா? 19-ஆம் தேதி விருப்பவாக்கெடுப்பு

கெய்ரோ,அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை தடைவிதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை நீக்குவதற்கு எகிப்தின் ராணுவ அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அரசியல் சட்ட சீர்திருத்தம் குறித்து நடக்கவிருக்கும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பைத் தொடர்ந்து இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.

அரசியல் எதிரிகளை 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த முபாரக்கிற்கு உதவிய சட்டமாகும் இது. இந்த தீர்மானம் பாராளுமன்ற, அதிபர் தேர்தல்கள நேர்மையாக நடக்க உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

போராட்டம்:பஹ்ரைன் அயல்நாடுகளின் உதவியை தேடுகிறது

மனாமா,மார்ச்.15:அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் பஹ்ரைனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த அயல்நாடுகளின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.

வளைகுடா நாடுகளைச் சார்ந்த ராணுவத்தினர் மனாமாவுக்கு வருகைப் புரிந்துள்ளதாக முன்னாள் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரும், நீதிமன்ற ஆலோசகருமான நபீல் அல் ஹாமர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிலையங்கள், மின்சாரம், குடிநீர் விநியோக மையம், வங்கிகள் ஆகிய இடங்களில் வெளிநாட்டுப் படையினர் நிறுத்தப்படுவர்.

ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில்ஜோஷி கொல்லப்பட்டார். இவருடைய கொலை வழக்கை விசாரிக்கிறோம்