மனாமா,மார்ச்.15:அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் பஹ்ரைனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த அயல்நாடுகளின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.
வளைகுடா நாடுகளைச் சார்ந்த ராணுவத்தினர் மனாமாவுக்கு வருகைப் புரிந்துள்ளதாக முன்னாள் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரும், நீதிமன்ற ஆலோசகருமான நபீல் அல் ஹாமர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிலையங்கள், மின்சாரம், குடிநீர் விநியோக மையம், வங்கிகள் ஆகிய இடங்களில் வெளிநாட்டுப் படையினர் நிறுத்தப்படுவர்.
நாட்டில் எதிர்ப்பாளர்கள் பிரிவினையைத் தூண்ட முயலும் சூழலில் ராணுவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லா நகரங்களிலும் ராணுவத்தை அனுப்ப வேண்டுமெனவும், ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர்கள்
மன்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக