தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.7.11

தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா!

மத்திய ஜவுளித் துறை அமைச்சரும் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தம்முடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2G ஊழல் வழக்கில் ஏர்செல்  நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ்  நிறுவனத்துக்கு விற்க ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டினார்  எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில் சிபிஐ தயாநிதி மாறனை விசாரிக்க சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.

நானோ கார் வழங்கி கவ்ரவித்த பள்ளி நிர்வாகம்


மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கி கவ்ரவித்தது. 3ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில

உ.பி.,யில் லஞ்சம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் பிரசவம்!


லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி பெண்ணை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அந்த பெண், சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பரிதாப சம்பவம், உ.பி.,யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம் கன்னூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷில். இவரது மனைவி மம்தா,

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மேஜையில் 17 கருணை மனுக்கள்


டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மேஜையில் 17 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்கள்.

சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட விவரத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் அளித்த பதில் வருமாறு,

சாமியார்கள் சொத்து, கோவில் புதையல் மக்களுக்கே! கி.வீரமணி!


இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாயிபாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

"நர" பலிக்கு சிறுவன் பலி, கோயிலை சூறையாடிய பொதுமக்கள் !


ஜூலை. தூத்துக்குடி ஜோதிபாசுநகரை சேர்ந்தவர் வேல்ராஜ். மளிகை கடை வைத்துள்ளார். அங்குள்ள கருமாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் குணா என்ற குணசேகர் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம்வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வழக்கம் போல் டீயூசனுக்கு செல்வதாக கூறி சென்றான். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் கைதாகலாம் ?


மதுரை அருகே உத்தங்குடி நாகர் ஆலயத்தைச்சேர்ந்த பூசாரி சுப்பிரமணிய அய்யர் முதல்வரின் தனிபிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். அப்புகாரில், ‘’உத்தங்குடி நாகர் ஆலயத்திற்கு சொந்தமான தர்ம சாஸ்தன டிரஸ்ட்டுக்கு நாகேந்திர அய்யர் என்பவர் 1936ம் ஆண்டு 23 ஏக்கர் நிலத்தை வழக்கினார்.
அப்போது இந்த நிலத்தை யாருக்கும் விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்கலாம் என்று போலியாக ஆவணம் தயார் செய்யப்பட்டது.
அதன் பிறகு கோவையை சேர்ந்த லாட்டரி