சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். விமான நிலையத்தில் முக் கிய பிரமுகர்கள் வரும் 4-வது கேட் பகுதியில் ஒரு வாலி பர் அத்துமீறி புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பாதுகாப்பு வீரர்கள் பிடித்தனர். அவன் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது. முன்னுக்கு பின் முர ணாக பேசியதால் அவனை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்
ரவீந்திரன் அ வனை கைது செய்து விசாரணை
நடத்தினார். விசாரணையில் அவனது பெயர் தினேஸ் சோரன் (30) என்பதும் மேற்கு வங்காள மாநிலம் மால்டா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. கட்டிட தொழில் செய்ய சென்னை வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மனநலம் பாதித்தவன்போல் அவன் செயல்படுகிறான்.
உண்மையில் அவன் மனநலம் பாதித்தவனா? அல்லது தீவிரவாதியா? அல்லது விமான நிலையத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்தானா? என்பதை அறிய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவனை பரிசோதனை செய்ய இன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக