இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டேலுக்காக வாங்கப்பட ரூ.6 கோடி பெறுமதியான அதிநவீன பென்ஸ் காரினால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
சுமார் 8 வருடங்களுக்கு பிறகு இந்திய குடியரசு தலைவரின் கார் மாற்றப்பட்டுள்ளது என அரசு தரப்பினால் நியாயம் கற்பிக்கப்படுகின்ற போதிலும், அதற்காக ரூ 6 கோடி செலவில் பிரமாண்டமான கார் தேவைதானா
என விமர்சனம் எழுந்துவருகிறது.பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, இக்கார் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில் 'ரூ 6 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட காரில் இருக்கும் வசதிகளை பார்த்தால் அது ஜனாதிபதிக்கா அல்லது ஃபேட்மானுக்கா என தெரியவில்லை' என கூறியுள்ளார்.
புல்லட் புரூஃப் வசதி, சிறிய தானியங்கி துப்பாக்கிகள், பிளாட் டயர் வசதி, தீயனைப்பு கருவி, காரினுள்ளேயே கூட்டம் நடத்தும் இட வசதி, விஷவாயு சுத்திகரிக்கும் குளிர்சாதன வசதி என சுமார் 500 க்கு மேற்பட்ட மேலதிக இணைப்புக்கள் பொருத்தப்பட்ட இந்த காரில், 517 ஹார்ஸ் பவர் கொட 12 சிலிண்டர் பயோ டார்போ இஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால், எத்தகைய அபாயகரமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியுமாம். கடந்த வருடம் டெல்லியில் நடத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எக்ஸ்போவில் இக்கார் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் இக்கார் கொள்வனவு செய்யப்பட்டு மேலதிக பிட்டிங் வசதிகள் பொருத்தபப்ட்டுள்ளன.
இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், இனி இக்காரில் தான் தனது உத்தியோக யணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.
கடந்த ஜூலை மாதம் இக்கார் கொள்வனவு செய்யப்பட்டு மேலதிக பிட்டிங் வசதிகள் பொருத்தபப்ட்டுள்ளன.
இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், இனி இக்காரில் தான் தனது உத்தியோக யணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக