எதிர்வரும் அக்.12ம் திகதி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், சேனல் 4 வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் திரையிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச மன்னிப்பு சபை, International Crises Group, மனித உரிமை கண்காணிப்பகம் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், இது குறித்து கலந்துரையாடல்கள்
மேற்கொள்வதற்கு சேனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெலம் மெக்ரோ, கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஒன்றிணைந்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்க்குற்ற வீடியோக்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பிலான ஆவணத்தொகுப்பு முதன்முறையாக வெளியிடப்படுவதாகவும், இதற்கு வி.புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய வலையமைப்புக்கள் மூன்று மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக