தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.3.11

யு.ஏ.இ : அல்-அய்னில் விமான விபத்த - நான்கு பேர் மரணம்

அபுதாபி,மார்ச்.1:யு.ஏ.இயில் அல் அய்ன் நகரத்தில் சிறிய விமானம் ஒன்று தகர்ந்து வீழ்ந்ததில் 4 அமெரிக்கர்கள் மரணமடைந்தனர்.

அல் அய்ன் சர்வதேச விமானநிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ரியாத்திற்கு புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யு.ஏ.இ நேரம் 08.07க்கு இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. எட்டு இருக்கைகளைக் கொண்ட இவ்விமானம் அமெரிக்காவின் டெக்ஸாஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ட்ரிப்பிள் எஸ் ஏவியேசனுக்கு சொந்தமானது. இவர்களுக்கு துபாயில் கன்ஸல்டன்சி உள்ளது.

அல்அய்ன் விமான நிலையத்திலிருந்து பறந்து உயர்ந்தபொழுது விமானிக்கு விமானத்தின் கட்டுப்பாடு கைநழுவியது. இதனைத் தொடர்ந்து விமானம் கீழே விழுந்து சில நிமிடங்களில் தீப்பிடித்துள்ளது.

செய்தி:மாத்யமம்


கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு-11 பேருக்கு தூக்கு, 20 பேருக்கு ஆயுள்

அகமதாபாத்.மார்ச்.1:கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு, உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர சேவர்கள் குஜராத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த ரயில் கோத்ரா ரயில்

ஒமானில் 3-வது நாளாக தொடரும் போராட்டம் - 6 பேர் பலி

மஸ்கட்,பிப்.28:தொழில் நகரமான ஸோஹாரில் அரசுக்கெதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நொறுக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசும், கலவரத் தடுப்பு

மலேசியாவில் ஹிந்துத்துவா அமைப்பினர் கைது

கோலாலம்பூர்,பிப்.28:சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய 109 இந்திய வம்சாவழியைச் சார்ந்த ஹிந்துத்துவா அமைப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

எகிப்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பிரிட்டன் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கண்டனம்

கெய்ரோ,பிப்.28:எகிப்தில் மக்கள் புரட்சிக்கு பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் எகிப்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் அல் எரியான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓமனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

மஸ்கட்,:அரபுலகத்தில் ஏற்பட்டு எழுச்சி அலை ஓமனில் பரவத் துவங்கியுள்ளது. தொழிற்பேட்டை நகரமான ஸோஹாரில் ஞாயிற்றுக்கிழமை அரசியல் சீர்திருத்தம்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.

ஸோஹாரில் இரண்டாவது தினமாக போராட்டம் நடைபற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஓமனின் தெற்கு நகரமான ஸலாலாவிலும் மாகாண கவர்னர் அலுவலகம் முன்பு கடந்த