தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.9.10

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

இப்படிக்கு

ரஹ்மதுல்லாஹ்

மாநிலத் துணைத் தலைவர் நன்றி:TNTJ இணையதளம்

பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! – தீர்ப்பின் நகல்!!

பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாபர் மசூதி கமிட்டியிடம், ராமர் கோவில் கமிட்டியிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் வழங்க வேண்டும் என்றும்,

ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும்,

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கியுள்ளனர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து இந்து மகா சபா, நிர்மோலி அகரா மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளனர்.

பாபர் மஸ்ஜித் இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளர்.

மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு ஆங்கிலத்தில்..

Sudhir Agarwal.pdf

Sibghat Ullah Khan.pdf

Dharam Veer Sharma-1.pdf

Dharam Veer Sharma-1.pdf

குறிப்பு: இது தீர்ப்பு என்ன உள்ளது என்பது பற்றிய செய்தி மட்டுமே . தீர்ப்பு பற்றிய நமது நிலைபாடோ அல்லது அது பற்றிய விளக்மோ அல்ல! நன்றி: TNTJ இணையதளம்

இது இறுதித் தீர்ப்பு அல்ல..த.மு.மு.க.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் முதல் நிலை தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி இரண்டு பகுதிகளில் ஒன்றை கோயிலுக்கும், இன்னொன்றை நிர்மோஹி அகாரா அறக்கட்டளைக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சில மூத்த வழக்குரைஞர்கள் இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது போல் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகாமல் பஞ்சாயத்து செய்யும் முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டிருக்கிறார்கள்.

1949க்குப் பிறகு முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்கவே முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதி-ருந்து அந்த இடம் முஸ்-ம்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது.

இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற உ.பி. வக்ஃபு வாரியத்தின் முடிவை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைபெற அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்று பாபர் மசூதி தீர்ப்பு; இணையதளத்திலும் காணலாம்

பாபர்மசூதி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்க இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என லக்னோ உயர்நீதிமன்ற அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்ப்பின் நகல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளத்திலும் இன்று வெளியிடப்படும் என்று தெரிகின்றது. இணையதள முகவரி:www.allahabadhighcourt.com

இன்று அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு தயார் நிலையில் மத்திய படைகள்


டெல்லி: இன்று அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி தேசமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்ட அனைத்து மாநில நிலைமைகளையும் உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. நாடு முழுவதும் 16 இடங்களில் மத்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையின் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.

அயோத்தி நில விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.

இதனால் நாடு முழுவதும் அச்சமான சூழ்நிலை நிலவுவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வன்முறைகள் மூளாமல் தடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு [^] அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக நிலைமையை கண்காணிக்க டெல்லியில் உள்துறை அமைக்கம் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது. அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை உள்துறை அமைச்சர் [^] ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த இடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்து இன்டலிஜென்ஸ் பீரோ கொடுத்துள்ள உளவுத் தகவல்களின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மிகவும் பிரச்சனை மிகுந்த இடங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பப்பட்டுவிட்டன. கலவரம் நடக்கலாம் என்று கருதப்படும் இடங்களுக்கு மிக அருகில் இந்தப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மோதல் ஏற்பட்டால், இந்தப் படைகள் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று சேரும் வகையில் வசதிகளை செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி, அகமதாபாத், கோவை, டார்ஜிலிங் உள்ளிட்ட நாட்டின் 16 இடங்களி்ல் மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட மத்திய துணை ராணுவ படைகள் தவிர, தேசிய பாதுகாப்பு படை, கமாண்டோ படை, அதிவிரைவு படை, ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையும் தயாராக உள்ளது.

எங்காவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக அந்தப் படையினர் சம்பவ இடததை அடைய விமானப் படைக்குச் சொந்தமான ஐ.எல்.-76 மற்றும் ஏ.என்.-32 ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

29.9.10

பாப்ரி மஸ்ஜித்:20 விஷயங்களில் தீர்ப்பு

லக்னோ,செப்,29:சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய விவகாரத்தில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் தீர்ப்பளிக்கப் போகிறது. 28 கட்சிதாரர்கள் உட்படும் 5 வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது.

நாளை அளிக்கும் தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்கள் இவையாகும்:
1.தகர்க்கப்பட்ட கட்டிடம் முஸ்லிம்களின் மஸ்ஜிதா?
2.அந்த கட்டிடம் எப்பொழுது நிர்மாணிக்கப்பட்டது
3.ஹிந்து கோயிலை இடித்துவிட்டா அந்தக் கட்டிடம் கட்டப்பட்டது?
4.முஸ்லிம்கள் தொன்றுதொட்டே இங்கு தொழுகை நடத்தி வருகின்றார்களா?
5.சர்ச்சைக்குரிய கட்டிடம் நிரந்தரமாகவும், தெள்ளந்தெளிவாகவும்
முஸ்லிம்களின் கைவசமிருந்ததா?
6.1949 ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களின் கைவசமாக அந்த கட்டிடம் இருந்ததா?
7.கட்டிடத்தின் மீது ஹிந்துக்கள் உரிமைக் கோரியது மிகவும் காலந்தாழ்ந்து உருவானதா?
8.முஸ்லிம்களுடைய நிரந்தரமான, தெள்ளந்தெளிவான உடமை உரிமையை தகர்த்துவிட்டா ஹிந்துக்கள் அவ்விடத்தில் வழிபாட்டுரிமையை பெற்றனர்?
9.இந்த இடம் ஹிந்துக்களின் நம்பிக்கையின்படி ராமன் பிறந்த இடமா?
10.ராமனுடைய பிறந்த இடம் என்ற நிலையில் ஹிந்துக்கள் புராதனக் காலம் முதல் இங்கு வழிபாடு நடத்துகின்றனரா?
11.கட்டிடத்தில் காணப்படும் சிலையும் இதர ஹிந்துமத
வழிபாட்டுப் பொருட்களும் 1949 டிசம்பர் 22 ஆம் தேதி ரகசியமாக அங்கு வைக்கப்பட்டது என்ற வாதம் சரியா?
12.தகர்க்கப்பட்ட கட்டிடத்தோடு இணைந்துள்ள ராம்சம்பூத்ரா, பண்டாரம், சீதா ரஸோயி ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படும் நிர்மாணங்கள் உண்மையில் என்ன? அவை கட்டிடத்தின் ஒருபகுதியா?
13.கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி புராதனமானதா?
14.சிலைகள் இருக்குமிடத்தில் முஸ்லிம்களின் மஸ்ஜித் கட்ட அனுமதியில்லை என்ற இஸ்லாமிய சட்டத் திட்டத்தின்படி இது மஸ்ஜிதாக இருக்க முடியாது என்ற வாதம் சரியா?
15.ஹிந்துக்களுக்கு மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்ட இடமா சர்ச்சைக்குரிய பகுதி?
16.இடிக்கப்பட்ட பிறகு இது ஒரு முஸ்லிம் வழிப்பாட்டுத் தலமா?
17.சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் என்றால் தொடர்ந்து வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாமா?
18.இடத்தின் உரிமை எந்த கட்சிதாரருக்கு?
19.இதர முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளிலிருந்து வித்தியாசமாக சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் மினாராக்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததால் அது ஒரு முஸ்லிம் மஸ்ஜித் என்ற வாதம் சரியா?
20.இடத்தின் உரிமை கிடைக்காத கட்சிதாரருக்கு எவ்வித வணக்க வழிபாட்டிற்குரிய வசதிகளை செய்துக் கொடுப்பது?

மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் இலக்கமிட்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்காது. ஆனால் மேற்குறிப்பிட்ட விஷயங்களை அடக்கிய பொதுவான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கும்.

வரலாற்று ரீதியான, நம்பிக்கை ரீதியான தர்க்க விவகாரத்தில் விஞ்ஞானப் பூர்வமான தொல்பொருள் ஆய்வு நடத்திய பிறகு கூறப்படும் இத்தீர்ப்பு வரலாற்றில் அபூர்வமானதாகும்.

செய்தி:மாத்யமம்

சமாதான காலக்கட்டத்தில் நடந்தது 6541 மதக் கலவரங்கள்

புதுடெல்லி,செப்.29:பாப்ரி மஸ்ஜிதுடன் தொடர்புடைய மதக் கலவரங்களுக்குப் பிறகு பொதுவாகவே அமைதியான காலக்கட்டமாக கருதப்பட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே 6541 கலவரங்கள் நடைப்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கலவரங்களில் 2234 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21,460 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

2001 முதல் 2009 வரையிலான காலக்கட்டங்களில்தான் இவ்வளவு கலவரங்களும் நடந்தேறியுள்ளன. இதில் மிக அதிகமாக 2008 ஆம் ஆண்டு கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. 943 கலவரங்களாகும் அவை.

ஆனால் அதிகம்பேர் கொல்லப்பட்டது குஜராத் இனப் படுகொலையின் போதுதான். 1130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், 2500 பேர் மட்டும் குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகயிருக்கும்.

மதக் கலவரங்களை அரசு அலட்சியமாக கருதிவிட்டு குண்டுவெடிப்புகளில் அதிகம் கவனம் செலுத்தும் வேளையில் குண்டுவெடிப்புகளை விட கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2001 ஆம் ஆண்டிற்கு பிறகு 28 பெரிய குண்டுவெடிப்புகள் நடந்தன. அதில் கொல்லப்பட்டவர்கள் 990 பேர். 2791 பேருக்கு காயமேற்பட்டது.

அதேவேளையில், வருடத்திற்கு சராசரியாக 600 மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை தீவிரமான 90 களில் மதக் கலவரங்கள் சாதாரணமாக நடைப்பெற்றாலும் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு பொதுவாகவே சமாதானமான காலக்கட்டமாக கருதப்படுகிறது. ஆனால் இது உண்மைக்கு புறம்பானது என்பதை உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெளிவாக்குகின்றன.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 4375 ஆகும். ஆனால், இது பத்தாயிரத்தைத் தாண்டும் என சில அமைப்புகள் கூறுகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

28.9.10

அயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-நாளை அல்லது மறுநாள் தீர்ப்பு வெளியாகும்

அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னெள பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.

ஆனால், இதை எதிர்த்து திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பை ஒத்தி வைக்குமாறும், பிரச்சனையை பேசித் தீர்க்க உத்தரவிடுமாறும் கோரினார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பளிக்க லக்னெள நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்த மனு மீதான விசாரணை [^] இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு [^] விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் [^]உத்தரவிட்டிருந்தது.

இதன்படி மத்திய அரசு உள்பட அனைத்துத் தரப்பினரும் இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரின. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கோரியது.

தீர்ப்பை வெளியிடுமாறு மத்திய அரசு கோரிக்கை:

இன்றைய விசாரணையின்போது தீர்ப்பைக் கூறலாமா, சிறிது அவகாசம் தரலாமா என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வாஹனாவதியிடம் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கேட்டது.

அப்போது 60 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர் கூறிவிட்டார். மேலும் அவர் கூறுகையில், பிரச்சனையை பேசித் தீர்த்து சுமூக உடன்பாட்டை எட்ட முடியும், அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றால் அதை மத்திய அரசு மனம் திறந்து வரவேற்கும்.

அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக நிலையற்றதன்மை நிலவுவதை அரசு விரும்பவில்லை. அதே போல நாட்டின் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நிலையற்ற தன்மை நிலவுவது சரியல்ல. இதனால் தீர்ப்பை வெளியிட்டு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதே சரி.

மேலும் அயோத்தி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதி முடிவடைகிறது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை. அதை முடிவு செய்ய வேண்டியது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் என்றார் வாஹனாவதி.

இதையடுத்து பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தி்ல தனது தீ்ர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என்று அறிவித்து திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் லக்னெள உயர் நீதிமன்ற கிளை நாளையோ அல்லது நாளை மறுநாளோ தீர்ப்பளிக்கலாம் என்று தெரிகிறது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே அக்டோபர் 1ம் தேதிக்கு முன்னதாக நாளையோ அல்லது நாளை மறுதினமோ தீர்ப்பை லக்னொ நீதிமன்றம் வெளியிடலாம்

25.9.10

பாபர் மசூதி குறித்து பாசிச ஹிந்துத்துவா இல. கணேசனின் கருத்துக்கு மறுப்பு

பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பாபர் மஸ்ஜித் குறித்து தமது வழக்கமான சங்பரிவார சிந்தனையை 'உரத்த சிந்தனை' என்ற பெயரில் ஒரு நாளிதழில் உளறியுள்ளார் திரு. இல.கணேசன். அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ள சில முக்கியமான விஷயங்கள் இங்கே அலசப்படுகிறது.

1)"இந்த பா.ஜ.க. என்றால் என்ன?, ஆர்.எஸ்.எஸ். என்றால்? என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே'' என்கிறார் இல. கணேசன்.

பதில்: ஆர்.எஸ்.எஸ். குறித்தும்- பாஜக குறித்தும், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும், பாஜக காரர்களுக்கும் பாடம் நடத்தும் அளவுக்கு முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ். ஆக, ஜன சங்கமாக, பாஜகவாக, வி.ஹெஜ்.பி.யாக, பஜ்ரங் தள் இவ்வாறு இன்னும் பல்வேறு பெயர்களில் ஒரே இந்துத்துவா சிந்தனையோடு வலம்வரும் நீங்கள் யார்..? உங்கள் கொள்கை என்ன என்பதை முஸ்லிம்கள தெளிவாகவே விளங்கியுள்ளோம். மேலும், காந்தி கொலை தொடங்கி, குஜராத் கொலைக்களம் வரை உங்கள் 'கொள்கையின்' செய்திகள் நித்தமும் செய்திகளாக மலர்வதையும் அறிந்தும் வைத்துள்ளோம்.

2) "இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.

பதில்: இது இன்றைக்குத்தான் இல. கணேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததாக்கும்..? முஸ்லிம்களை எதோ வெற்றுக் கிரகவாசிகள் போல், இவரது சகாக்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று பல்வேறு காலகட்டத்தில் முழங்கியபோது இல. கணேசன் அவர்கள எங்கே போயிருந்தார்..?

3) "ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர்.

பதில்: "அப்பாடா! இப்பவாவது முஸ்லிம்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக போரிட்டார்கள் என ஒப்புக் கொண்டீர்களே அதுவரைக்கும் சந்தோசம்.

4) ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும். ன்கிறார் இல.கணேசன்

ஒருநாளும் தொழுகை நடைபெறவில்லை என்று இல.கணேசன் அவர்கள் கூறுவது ஒரு பருக்கை சோற்றில் ஒரு யானையை மறைப்பதற்கு சமமானதாகும். உங்களால் கள்ளத்தனமாக சிலை வைக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவுத் தொழுகை வரை அங்கே தொழுகை நடந்தது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விஷயம். மேலும் மசூதிக்க்கான கட்டட அமைப்பும் இல்லையாம்! இதற்கு முன்னால் இவர்தான் சொன்னார். நான் அங்கு போயிருக்கிறேன் வெளியிலிருந்து பார்த்தால் மசூதி போன்று தெரியும் என்று. இப்போது அவரே முரண்படுகிறார். மேலும், ஒரு மசூதி அமையக்கூடாத இடத்தில் பாபர்மஸ்ஜித் அமைந்துவிட்டதாக வருந்துகிறார். முஸ்லிம்களை பொருத்தவரை தொழுவதற்கு தடுக்கப்பட்ட இடங்கள் எதிலும் எந்த காலத்திலும் பள்ளிவாசல் எழுப்பப்படுவதில்லை. அதில் பாபர் மஸ்ஜிதும் விதிவிலக்கல்ல.

5) இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.என்கிறார் இல.கணேசன்.

பதில்: இனி எவரும் பாபர் மசூதி கட்டமுடியாது; மன்மோகன் சிங் கட்டினால், அது மன்மோகன்சிங் மசூதி என்றே அழைக்கப்படும் என்று அங்கலாய்க்கிறார் இல. கணேசன்.
இல. கணேசன் அவர்களே! முஸ்லிம்கள் அந்த இடத்தில் கட்டவிருப்பது பாபருக்கு மசூதியல்ல. அல்லாஹ்விற்கு, அதாவது அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு மசூதி.பாபருக்கு நாங்கள் மசூதி கட்டபோகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

6) "பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். என்கிறார் இல.கணேசன்.

பதில்: உங்க சங்கபரிவார் கூட்டம்தான் சொல்கிறது சுதந்திரத்திற்கு முன் அகண்டபாரதம் இருந்தது அதனால் அகண்ட பாரதம் அமைப்போம் என்று. அந்த அகண்ட பாரதத்தில், ஆப்கானிஸ்தான் இருந்தது என்று. அப்படியாயின் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் பிறந்த பாபர் அன்னியர் என்றால், கைபர்-போலன் கனவாய் வழியாக வந்த உங்களுடைய முன்னோர்கள் யார்..? என்று நாங்கள் கேட்கவில்லை. வரலாறு கேட்கிறது.

7) பாபர் இரண்டாவது முறை தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டிய பாபர் மசூதிக் கட்டடம்.இது அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது என்கிறார் கணேசன்.

பதில்: பாபர் போரில் பெற்ற வெற்றியை கொண்டாட அவர் எழுப்பியது நினைவுத் தூண் அல்ல அகற்றுவதற்கு. அவர் அமைத்தது பள்ளிவாசல். பள்ளிவாசலை அடிமைச்சின்னம் என்று வர்ணித்து தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் இல. கணேசன். சரி! பாபரால் அமைக்கப்பட்டது அடிமைச்சின்னம் என்றால் இன்றைக்கு முகலாயர்களின் கட்டட கலைக்கு சான்று பகரும் எண்ணற்ற கலைநயமிக்க கட்டடங்கள் உள்ளனவே. அதுபற்றி இல.கணேசனின் நிலை என்ன..? மேலும் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள், பாலங்கள், அணைகள், உள்ளிட்ட அத்துனையையும் அனுபவிக்கும் இல. கணேசன் அதுபற்றிய என்ன நிலையில் இருக்கிறார்..?

8) ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை. என்கிறார் இல. கணேசன்.

பதில்: இல. கணேசன் அவர்களே! எங்கேனும் முகலாயர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட எந்த முஸ்லிம்களுக்காவது சிலை இருந்தால் அதை அகற்றி,நீங்கள் அருங்காட்சியத்தில் வைக்கவேண்டாம். மாறாக நடுத்தெருவில் அடித்து நொறுக்குங்கள். ஒரு முஸ்லிமும் தடுக்கமாட்டோம்.

9) சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது பின்னர் இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.

பதில்: மீண்டும் ஒரு சோமநாதபுரமாக பாபர் மஸ்ஜித் இடத்தை மாற்ற, உங்களுக்கு ஆசி வழங்க இப்போது காந்தியும் இல்லை. செய்து முடிக்க நீங்கள் வல்லபாய் படேலும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் அன்றுபோல் இன்று ஏமாளிகளாகவும் இல்லை. இந்தியாவில் கடைசி முஸ்லிம் உயிர் இருக்கும்வரை பாபர் மஸ்ஜித் இடத்தில் நீங்கள் சோமநாதபுர கனவுகான விடமாட்டான் "இன்ஷா அல்லாஹ்".

10) மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்கிறார் இல. கணேசன்.

பதில்: இதை சொல்வதற்கு முன்னால் உங்களை கொஞ்சம் கண்ணாடியில் பார்த்திருக்கக் கூடாதா..? மதத்தின் பெயரால் எல்லைமீறி, மஸ்ஜிதை இடித்தது யார்..? ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தியது யார்..? நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் யார்..? வன்முறையை அரசியலாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி பதவி சுகத்தை அனுபவித்தது யார்..? அவ்வளவு ஏன்..? சம்மந்தப்பட்ட இந்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏகோபித்த குரலில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்; அமைதிகாப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்க, நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும் அது எங்களை கட்டுப்படுத்தாது; நாங்கள் கோயில் கட்டியே தீருவோம் எனக் கொக்கரிப்பது யார்..? எல்லாம் செய்து விட்டு 'தேசபக்தி' முகமூடியை போர்த்திக் கொள்வதில் சங்பரிவாருக்கு நிகர் சங் பரிவார்தான். "எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே......? இந்திய நாட்டிலே..!

பாபர்மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு; தள்ளிவைக்கப்படுவது தீர்ப்புமட்டும்தானா...?

வயலிலே விதை விதைத்து, விதை முளைக்க வானம் பார்த்து காத்து நின்ற விவசாயி, பருவமழை பொழியும் நாள்கடந்து விட்டாலும் திடீரென மேக மூட்டம் தென்பட, மழைபொழியும்; வயல் பசுமையாகும்; அதோடு நம்முடைய வாழ்வும் பசுமையாகும் என்று மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில், கருமேகத்தை காற்று எங்கோ ஓட்டிச்செல்ல, இடி விழுந்ததை போல
இதயம் நொறுங்கிய விவசாயியைப் போன்று,

அறுபது ஆண்டு கால இழுவைக்குப்பின் இதோ சட்டத்தின் கதவு எங்களுக்காக திறக்கவிருக்கிறது. அதில் நீதியின் குரலும் எதிரொலிக்கும். அதையொட்டி, எங்களின் இறைவனை தொழும் இடமான பாபரி மஸ்ஜிதில் எங்களின் 'அல்லாஹு அக்பர்' எனும் குரலோசையும் விண்ணை முட்டும் என நம்பிக்கையோடு காத்திருந்த முஸ்லிம்களுக்கு, நாளை வழங்கப்படுவதாக இருந்த பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஒரு வகை ஏமாற்றமே.

அறுபது ஆண்டுகாலம் பொருத்த நீங்கள், ஆறு நாட்கள் பொறுக்க மாட்டீர்களா..? எனக் கேட்பதும் எமது காதில் விழுகிறது. அறுபது ஆண்டுகாலம் நடந்தது விசாரணை. அது தள்ளிப் போவதில் கூட ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் தீர்ப்பு தள்ளிப் போவதில்தான் ஒரு சதியோ என சாமான்யர்களின் மனம் கலங்குகிறது.

காரணம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில் பாபர்மஸ்ஜித் தீர்ப்பு வெளியானால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா என்று கவலைப் படவேண்டியது மத்திய அரசு. அத்தகைய மத்திய அரசே, தீர்ப்பை எதிர்கொள்ள, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க பல்லாயிரம் கோடிகளுக்கு பயங்கரமான நவீன ஆயுதமான லத்தி[!] எல்லாம் வாங்கி தயார் நிலையில் இருக்கும் போது,

யாரோ ஒரு ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர், காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் தீர்ப்பு வந்தால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனுவை ஏற்க மறுத்தது அலகாபாத் உயர்நீதி நீதிமன்றம். அதோடு, மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்ட திரிபாதியின் அதே மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும், பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு இடைக்கால தடைவிதிப்பதும் எங்கோ இடிக்கிறதே என்பதுதான் அறியா பொதுஜனங்களின் புலம்பலாக உள்ளது.

எது எப்படியோ, தீர்ப்பை தள்ளிவைத்தால் அதுகூட பரவாயில்லை. ஆனால் நீதியை தள்ளி வைத்து விடாதீர்கள் என்பதுதான் இந்தியாவின் மதசார்பின்மையையும், சட்டத்தையும் மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வேண்டுகோளாகும்.

எங்கள் இறைவா! நாங்கள் யாருக்கும் அநீதியிழைக்காமலும், யாராலும் அநீதியிழைக்கப் படாமலும் காத்தருள்வாயாக!

19.9.10

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!








1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்துவிட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.

ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.

இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.

இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.

கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.

இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.

இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.

‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.

”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?

‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.

இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.

குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.

கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்

பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.

‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?

இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?

அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.

அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.

கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.

மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.

துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.

இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.

உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.

பாபர் கோவிலை இடிப்பவரா?

இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.

ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.

பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,

”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?

பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.

பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.

பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.

பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.

கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.

அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.

வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்

”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.

1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.

1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.

எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

கஷ்மீரில் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு சட்டத்தை தயக்கமின்றி வாபஸ் பெற வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன்

புதுடெல்லி,செப்.19:ஜம்மு-கஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

கஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திருமாவளவனும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- "ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நமது மக்களே என்று கூறினார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் மக்களிடையே உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். ஜம்மு-கஷ்மீர் மாநில மக்களின் மனநிலை என்ன என்பதை இந்திய அரசு அறிந்துள்ளதா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய அரசுக்கும் ஜம்மு-கஷ்மீர் குடிமக்களுக்கும் இடையே உள்ள முதன்மையான முரண்பாடு இதுதான்.

அந்த மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது எனும் கோணத்திலிருந்து தான் இந்தப் பிரச்சனையை இந்திய அரசு அணுக வேண்டும். அவ்வாறு இதனை அணுகாவிட்டால் இப்பிரச்சினைக்கு நிலையான தொரு தீர்வை நம்மால் காணவே முடியாது.

ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களின் கோரிக்கையை மத்திய அரசு உரிய வகையில் பரிசீலிக்க வேண்டும். எனவே, ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் பொது அமைதியை நிலை நாட்டவும் இதைத் தவிர வேறு வழியே இல்லை." இவ்வாறு அவர் பேசினார்

பாப்ரி மஸ்ஜித்:காங்கிரசுக்கு கடைசி வாய்ப்பு

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது.இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.

வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.

அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.

மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.

வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.

நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.

பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.

தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.

விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.

உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை உள்ளது.

பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.

ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.

இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.

தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.

17.9.10

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு; கலவரம் உண்டாக்க ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் சதி.

அயோத்தியில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை வரும் 24ம் தேதிக்குப் பதில் வேறு தேதியில் அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பு வெளியானால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உள்ளது. டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பை இப்போது வெளியிடுவது சரியல்ல. அதை காலதாமதமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் ஹிந்து தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு,அதை தொடர்ந்து ஹிந்து தீவிரவாதிகள் ஏற்படுத்திய மதக் கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலியானதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் நரசிம்ம ராவ், மசூதிக்கு உரிய இடத்தில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார்.

இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட லக்னெள நீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து வரும் 24ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள மாட்டோம் என்று ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என்பதால் தேசம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை அறிவிக்கவுள்ள 3 நீதிபதிகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களது கார்களுக்கு முன்னும், பின்னும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் வாகனம் செல்கின்றன.
நீதிபதிகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று அலகாபாத் நீதிமன்றம் பாதுகாப்புப் படை வீரர்களின் முற்றுகையில் இருக்கும்.

அலகாபாத்தில் ஹிந்து தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலை செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தீர்ப்பு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் எங்கெங்கு போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை ஒரு எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மீரட் நகரில் அதிகபட்ச கலவரம் உண்டாகலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாக இன்னும் 9 நாட்களே இருப்பதால் நாளை முதல் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கானவர்கள் கைதாகும் பட்சத்தில் சிறைகளில் இட பற்றாக்குறை ஏற்படும் என்பதால் உத்தரபிரதேசம் முழுவதும் போலீசார் தற்காலிக சிறைகளை உருவாக்கி வருகின்றனர். இந் நிலையில் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது

14.9.10

கூத்தாநல்லூர்-ல் ஹிந்து முன்னணி கலவர முயற்சி

கூத்தாநல்லூர்-ல் நேற்று ( 11-09-2010 ) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி-யினர் மரக்கடை, கம்பர் தெரு மற்றும் அதங்குடி போன்ற பகுதி-களில் விநாயகர் ஊர்வலம் எடுப்பது வழக்கம், கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு முத்துபேட்டை-யை சேர்ந்த கருப்பு ( எ ) முருகாநந்தன் அதங்குடியில் துவக்கி வைத்தான். அப்போதே கூத்தாநல்லூர்-ல் RSS என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் கால் நமதூரை சுற்றி பதிக்க படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் ஊர்வலத்தில் வெளியூரை சேர்ந்த நபர்களையும் காண முடிந்தது. கடந்த வருடங்களில் அவர்களின் ஊர்வலம் ஊருக்கு வெளியில் இருந்தது. மரக்கடை பள்ளி வாசலிலும், மேல் கொண்டாழி நூர் பள்ளியிலும் போலீஸ் பாதுகாப்பும் போட பட்டிருக்கும்.

நேற்று-ம் வழக்கம் போல விநாயகர் ஊர்வலம் நமதூரில் நடந்தது, மரக்கடையில் வைக்க பட்டிருந்த விநாயகர் சிலை-யுடன் மரக்கடை M.S.செல்லப்பா, லெட்சுமாங்குடி A.சொற்கோ, S.ஐயப்பன் தலைமையில் ஹிந்து முன்னணியினர் ஊர்வலம் எடுத்து சென்றனர் போலீஸ் பாதுகாப்புடன். வழக்கம் போல செல்ல கூடிய வழியில் செல்லாமல் புதிதாக, வளமைக்கு மாறாக முஸ்லிம்கள் வாழும் பகுதியான கூத்தாநல்லூர்-க்கு தாரை தப்பட்டையுடன் விநாயகர் ஊர்வலத்தை கொண்டு வந்து மேல கடை தெருவில் உள்ள மேல பள்ளிவாசலின் முன்பு முஸ்லிம்கள் மக்ரிப் தொழும் நேரத்தில் முஸ்லிம் மக்கள் மனது புண் படும் விதமாக கோஷங்களையும் எழுப்பியும், தொழுகின்ற நேரத்தில் பள்ளிவாசல் முன்பு தாரை தப்பட்டை அடித்து ஊர்வலத்தை கொண்டு சென்றுள்ளனர். உடனே L.M.அஸ்ரப் அவர்கள் போலீஸ்-க்கு போன் செய்து இதை தடுக்குமாறு கூறினார்.

இதை அறிந்த கூத்தாநல்லூர் முஸ்லிம் இளைஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களான பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக சகோதரர்கள் களத்தில் குதித்தனர். சற்று நேரத்தில் பொதக்குடி, பூதமங்கலம் வரை செய்தி பரவி அங்குள்ள இளைஞர்களும் கூத்தாநல்லூர்-க்கு விரைந்து வந்தனர். அனுமதி அளிக்க படாத வழியில் ஊர்வலத்தை எடுத்து சென்ற ஹிந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராகவும் இதை தடுக்க தவறிய கூத்தாநல்லூர் காவல் துறை ஆய்வாளர் நடராஜ்-ஐ கண்டித்தும் 150-க்கு மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை ஆய்வாளர் நடராஜ் அவர்கள் " நான் புதிதாக பணியில் சேர்ந்ததால் எனக்கு ஊர்வல பாதை தெரியாது,என நமதூர் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பை ஏற்க்க மறுத்த நமதூர் இளைஞர்கள் திருவாரூர் SP மற்றும் தாசில்தார் நேரில் வரும் படி முறையிட்டனர்.

முத்துபேட்டை-க்கு பாதுகாப்பு பணிக்க சென்றிருந்த திருவாரூர் SP P.மூர்த்தி அவர்கள் நேரில் வந்து நமதூர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக சம்பந்தபட்ட கூத்தாநல்லூர் ஆய்வாளர் நடராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் இனிமேல் இந்த வழியில் விநாயகர் ஊர்வலம் வராமல் பார்த்துகொள்கிறோம் என்றும் SP P.மூர்த்தி மற்றும் தாசில்தார்-ரிடம் எழுதி வாங்கிய பிறகு சாலை மறியல் வாபஸ் செய்ய பட்டது.

அல்லாஹ்-வின் மாபெரும் கருணையால் நமதூர் எந்த ஒரு மத பிரச்சனை-யும் இன்றி இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர், இதை பொருத்து கொள்ள முடியாத ஹிந்துதுவா சக்திகள் நமதூர் மட்டும் இன்றி இந்திய அளவில் முஸ்லிம்களை அழிப்பதையே குறிகோளாக கொண்டுள்ளனர், விநாயகர் சதுர்த்தி என்ற ஒன்று தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவிலே இல்லாத ஒரு பண்டிகை, RSS என்ற இயக்கம் இதை உருவாகியதின் முக்கிய நோக்கமே கலவரம் செய்ய தான், விநாயகர் ஊர்வலத்தில் அமைதியாக செல்லாமல் முஸ்லிம் மக்கள் மனம் புண் படும் படியாக " 10 பைசா முறுக்கு, பள்ளிவாசல நொறுக்கு" " துலுக்கனை வெட்டு, துலுகச்சியை கட்டு" போன்ற ஆபாசமான கோஷம் எழுப்புவதும், பள்ளிவாசல் மீது கல் எரிவதுமே, முஸ்லிம்கள் ஊர்வலத்தின் எதிரே வந்தால் அடிபதுமே கொள்கையாக கொண்டுள்ளனர்.

இதை கேட்டவுடன் உடனே ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டு நீதி கேட்ட நமதூர் முஸ்லிம் இளைஞர்-களையும், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக சகோதர்களையும் பாராட்டுகிறோம். இதை நாம் கண்டிக்க தவறினால் இன்று மேலபள்ளி வரை வந்தவர்கள் ஊரின் மைய பகுதிக்கே வந்து பிரச்சனை செய்வார்கள், நமதூரை பொறுத்தவரை ஹிந்து முன்னணியினர் யாரும் வெளிபடையாகவே இல்லை, பசு தோல் போர்த்திய புலியாகவே இருக்கிறார்கள். காங்கிரஸ், DMK, ADMK போன்ற அரசியல் கட்சியில் இருந்து கொண்டு செயல் படுகின்றனர். இவர்களிடம் நாம் விழிபுனர்வாக இருக்க வேண்டும்.

KNR ஜமாஅத் இதை உடனே கண்டிக்க வேண்டும், ஊர்வலம் கொண்டு வந்தவர்களின் மேல் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் . நாம் அனைவரும் இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நின்று இவர்களை வெற்றி கொள்வோம் இன்ஷா அல்லாஹ்

13.9.10

விநாயகர் சதூர்த்தி விழாவல்ல பார்ப்பனீயத்தின் குறியீடு



சென்னை யில் 734 இடங்கள் உள்பட தமிழகம்  முழுவதும் 14,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் 14,000 இடங்களில் சுமார் 16,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அடுத்த 10 நாட்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதற்றமான இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
தமிழகத்துக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
விநாயகர் சிலைகள் ஊர்வல நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடப்பதற்கு அனைத்து பாகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இம்மானுவேல்சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்து விட்டது. அந்த நிகழ்ச்சியையொட்டி தென் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.
சென்னை நகரில் அதிகபட்சமாக தியாகரா யநகர் பகுதியில் தான் 160 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.
**************************************************************
மராட்டியம் போன்ற ஓரிரு வடமாநிலங்களில் மட்டும் கொண்டாடப்பட்டுவந்த வினாயக விழா சில பத்தாண்டுகளாய் தமிழகத்தில் காலூன்றி விரிவிக்கப்பட்டு வருவதன் சான்றுதான் இச்செய்தி. சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களை அச்சத்தில் தள்ளி, அவர்களை எதிரிகளாய் சித்தரித்து அதன் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் தீண்டத்தகாதவனாய், அடிமையாய் வைத்திருந்த மக்களை இந்து எனும் அடிப்படையில் ஒன்றிணைப்பதற்கான பார்பனீயச் சதியின் வடிவம்தான் இந்த விநாயகன் விழா. இது கொண்டாட்டமல்ல, சாதியக் கொடுமைகளை வெட்டியெறிய‌ நினைக்கும் யாரும் புறக்கணிக்க வேண்டிய ஒன்று.

அயோத்தி தீர்ப்பு மதவெறித்தீயை தணிக்குமா? தூண்டுமா?



அயோத்தி விவகார வழக்கில் வரும் 24ம் தேதி வழங்கப்படும் தீர்ப்பை நாட்டில் அனைத்து தரப்பினரும் பதற்றத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.
மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந் நிலையில் அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், சர்ச்சைக்குரிய இடத்தில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகள் மற்றும் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே சர்ச்சைக்குரிய நிலம் இருக்க வேண்டும் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட லக்னெள பெஞ்ச் தீர்ப்பளிக்கும் வரை இந்த நிலைமையே நீடிக்க வேண்டும் என்றும் 1994ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் லக்னெள பெஞ்ச் தான் விசாரித்து வருகிறது.
1538ம் ஆண்டில் மசூதியை கட்டும் முன்பு அங்கு கோவில் இருந்ததா?, பாபர் மசூதி கமிட்டிக்கு 1961ம் ஆண்டில் வழக்குத் தொடர உரிமை உள்ளதா? போன்ற அம்சங்கள் குறித்து விசாரணையின் போது ஆராயப்பட்டன.
கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், வரும் 24ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மசூதியை இடித்தபோது உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் முதல்வராக இருந்த கல்யாண் சிங் கூறுகையில், ஒருவேளை இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், ராமர் கோவிலை கட்டுவதற்கு வசதியாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ராமர் மீது நம்பிக்கை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாபர் மசூதி நடவடிக்கை  கமிட்டி சார்பாக வழக்கு தொடர்ந்த முகமது காசிம் அன்சாரி கூறுகையில், தீர்ப்பு பாதகமாக வந்தால் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்று முஸ்லிம் சட்ட வாரியமும் பாபர் மசூதி கமிட்டியும் கேட்டுக் கொள்கிறது. தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.
இந் நிலையில் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என்பதால் தேசம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு  ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியிலும் கடும் பாதுகாப்பு:
இந் நிலையில் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் 63,000 மத்திய போலீஸ் படை தேவை என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மற்ற மாநிலங்களுக்கும் காஷ்மீர் மாநிலத்திலும், வடகிழக்கு பகுதியிலும் மற்றும் சர்வதேச எல்லையிலும் ஏற்கனவே ஏராளமான அளவில் மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும் மத்திய போலீஸ் படைகளை அனுப்ப வேண்டியுள்ளதால் ஒரு மாநிலத்துக்கு மட்டும் 63,000 போலீஸாரை அனுப்ப முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.
அயோத்தி பாதுகாப்புக்காக 5,000 மத்திய ரிசர்வ் படை போலீசார் அனுப்பப்படுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
**********************************************************
தீர்ப்பு எந்த விதத்தில் இருந்தாலும் இருவருமே அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பிரச்சையை தீர்த்துவைக்கும் நோக்கில் தீர்ப்பு அமையப்போவதில்லை, நீர்த்துப்போகச் செய்யும் முனைப்பிலேயே தீர்ப்பு இருக்கும். இது ஆரூடமல்ல. ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்ய தொல்லியல் துறையின் அறிக்கையை கேட்கும் நீதிமன்றங்களின் நினைப்பிலிருந்து தீர்ப்பு மட்டும் விலகி நிற்குமா என்ன?
ஆகஸ்ட் 15, 1947ல் இருந்த‌படியே வணக்கத்தலங்கள் மதிக்கப்படும் என்று அரசியல் சாசனம் இருக்கிறது. கோவிலை இடித்துத்தான் பள்ளி கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பார்ப்பனிய சதித்திட்டத்தின்படி படிப்படியாக வணக்கம் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்துத்தகர்க்கப்பட்டது.
பார்ப்பன பாஸிச சதிகளை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்து என தம்மை நம்பிக்கொள்வோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஒன்றிணைந்து இந்த பார்ப்பனிய, அதிகாரவர்க்க கூட்டை முறியடிக்க முடியாது. வர்க்க அடிப்படையில் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வதன் மூலம் மட்டுமே சரியான தீர்ப்பையும், தீர்வையும் பெறமுடியும்

12.9.10

ஆர் எஸ் எஸ் ன் உண்மையான தீவிரவாத முகத்தை வெளிக்கொணர வேண்டும் : பிரணாப் முகர்ஜி !

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர் எஸ் எஸ்ஸின் உண்மையான தீவிரவாத முகத்தை வெளிக்கொண்டு வருவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று அவர் AICC மூலமாக அளித்துள்ள அறிக்கையில், “சமீப கால விசாரணைகள், ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் தொடர்பு அமைப்புகளின் தீவிரவாத தொடர்பை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.” என்றும் “அதன் தொண்டர்கள் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணைகளின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது” என்றும் கூறியுள்ளார். ஏ என் ஐ செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ்ஸின் முக்கிய மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்,அஜ்மீர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்களது அரசியல் சண்டையில் உண்மை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

-செய்தி தமிழாக்கம் அல்மதராஸி

11.9.10

லைலத்துல் கத்ரின் புண்ணியந்தேடி மஸ்ஜிதுல் ஹரமில் 30 லட்சம் முஸ்லிம்கள்

மக்கா,செப்.8:ஆயிரம் மாதங்களை விட புண்ணியமான ரமலானின் லைலத்துல் கத்ர் இரவின் பலனை அடைவதற்காக நபி(ஸல்...)அவர்கள் அவ்விரவை தேட கட்டளையிட்ட ரமலானின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றான 27 ஆம் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் 30 லட்சம் முஸ்லிம்கள் வருகை புரிந்திரிந்தனர்.
தராவீஹ்,கியாமுல் லைல் (இரவுத்தொழுகை) ஆகிய வணக்கங்களுக்காக உம்ராவிற்கு வந்த முஸ்லிம்களின்பெரும் எண்ணிக்கையினால் ஹரமின் உள்புறம் மூச்சுத் திணறியது.

மஸ்ஜிதுல் ஹரமிற்கு வருகைத் தந்த முஸ்லிம்களை வரவேற்க சவூதி அரசு எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4500 போலீஸ்காரர்களும், மஸ்ஜிதுல் ஹரமையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பாதுகாக்க பத்தாயிரம் தொழிலாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

புண்ணிய யாஸ்திரிகர்களுக்கு குடிநீருக்காக 20 ஆயிரம் வாட்டர் கூலர்களும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன. பெரும் மக்கள்திரள் மஸ்ஜிதுல் ஹரமில் கூடியபொழுதும் எவ்வித போக்குவரத்து இடைஞ்சலோ விபத்துக்களோ பதிவுச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்காவிலுள்ள அனைத்து ஹோட்டல்களும், அபார்ட்மெண்டுகளும் புண்ணிய யாஸ்திரீகர்களால் நிரம்பி வழிந்தன. மஸ்ஜிதின்உள்புறத்தில் இடமில்லாததால் முஸல்லாக்கள் (தொழுகை விரிப்புகள்) வாங்குபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில்அதிகரித்திருந்தது. முஸல்லாக்களின் தேவை அதிகமானதால் அதன் விலையும் 15 ரியாலிலிருந்து 20 ரியாலாக உயர்ந்தது.

மதீனாவில் மஸ்ஜிதுல் நபவியிலும் தராவீஹ்,கியாமுல் லைல் தொழுகைகளுக்காக பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதில் பெரும்பாலும் தொழிலாளர்களும், வெளிநாடுகளை சார்ந்த புண்ணிய யாத்ரீகர்களுமாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கரூரில் 4 சர்ச்சுகள் மீது தாக்குதல் -இந்து முன்னணி மீது புகார்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நான்கு சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் புகளூர் பெந்தகொஸ்தே சபை, சிஎஸ்ஐ திருச்சபை, பைபாஸ் சாலை ஆர்.சி. சர்ச், இசிஐ சர்ச் ஆகியவற்றின் முன் பகுதியில் இருந்த சிலைகள், உண்டியல்கள், கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளை ஒரு கும்பல்
தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

அதேபோல,வேலாயுதம்பாளையம் எம்ஜிஆர் நகரில் உள்ள ஏஜி சர்ச்சின் முன்பகுதியில் மலம் போய் அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்