தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.7.11

குஜராத் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணையை துவக்க அனுமதி

புதுடெல்லி:2008-ஆம் ஆண்டு குஜராத் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை துவக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதியான முறையில் விசாரணை நடைபெறுவதற்கு வழக்கை குஜராத்திற்கு வெளியே நடத்தவேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடிச்செய்த நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணையை துவக்க அனுமதி அளித்துள்ளது.

சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்திய அமிதாப் மீது வழக்கு!


 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக் காட்சியில் குரோர்பதி 4 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

இதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரங்களில், இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட சுபாஷ் சந்திர போஸை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாக முகேஷ் சர்மா என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.

லிபியா எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரான்சு


france weapons
பாரிஸ்:முஅம்மர் கத்தாஃபியின் செல்வாக்கு மிகுந்த பகுதியான திரிபோலியில் அரசு எதிர்ப்பாளர்களுக்கு பிரான்சு ஆயுதங்களை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை, ரைஃபிள் ஆகியன ஜபல் நஃபூஸா பகுதியில் பிரான்சு சப்ளை செய்வதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி லெ ஃபிகரோ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமலேயே பிரான்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?


காஞ்சிபுரம்,  திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.

"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது.

சோனியாவுடன் லாலு சந்திப்பு.. மீண்டும் அமைச்சராகிறார்?

டெல்லி: ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகலாம் என்று கூறப்படும் நிலையில், லாலு மற்றும் அஜீத் சிங் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க சோனியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்ட்ராபெரியும் அதன் மருத்துவக்குணமும்!!

வாஷிங்டன்:  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு. 

அதாவது, ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.