தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.7.11

குஜராத் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணையை துவக்க அனுமதி

புதுடெல்லி:2008-ஆம் ஆண்டு குஜராத் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை துவக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதியான முறையில் விசாரணை நடைபெறுவதற்கு வழக்கை குஜராத்திற்கு வெளியே நடத்தவேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடிச்செய்த நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணையை துவக்க அனுமதி அளித்துள்ளது.
நீதியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தால் குற்றஞ்சாட்டப்பட்டோர் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என நீதிமன்ற பெஞ்ச் தெரிவித்தது.
விசாரணையை குஜராத்திற்கு வெளியே மாற்றவேண்டும் என்ற மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் விசாரணை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. 2006-ஜூன் மாதம் 26-ஆம் தேதி அஹ்மதாபாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
69 முஸ்லிம்கள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை துவங்கவிருக்கவே, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன்பு இதர பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதை சுட்டிக்காட்டி மும்பையைச்சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல்வாட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சிறையில் அடைக்கப்பட்டவர்கள் குண்டுவெடிப்பின் சதித்திட்டத்தில் பங்கேற்றார்கள் என்பது முதல்நோக்கு(prima facie) உண்மைகளுக்கு பொருந்தாதது எனவும், வழக்கு இட்டுக்கட்டப்பட்டது எனவும் டீஸ்டா தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க ஆளும் மாநிலமான குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நீதியான விசாரணை நடக்காது என சுட்டிக்காட்டி 2009 பெப்ருவரி மாதம் வழக்கு மாநிலத்திலிருந்து வெளியே மாற்றவேண்டும் என இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மனு அளித்திருந்தனர்.

0 கருத்துகள்: