தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.2.11

TNTJ வின் கண்டனத்தை தொடர்ந்து பாடல் வரியை நீக்கியது விஜய் டிவி


விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும், ”மகான்” என்ற தொடரில் இடம்பெறும் பாடலில் முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடல் வரி இடம்பெறுவதாக தெரியவந்ததை தொடர்ந்து விஜய் டிவி நிறுவனத்தாருக்கு டி.என்.டி.ஜே கடந்த 07.02.11 அன்று கண்டன கடிதம் எழுதியதியதோடு நேரில் சென்று உடனடியாக அந்த கண்டனத்திற்குரிய வரிகளை நீக்குமாறு டி.என்.டி.ஜே நேரில் வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து அந்த கண்டனத்திற்குரிய வரியை 09.02.11 அன்று முதல் நீக்கிவிடுவதாக விஜய் டிவி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தற்போது விஜய் டிவி கூறியது போன்று அந்த பாடல் வரி மற்றும் காட்சியை நீக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இழிவுபடுத்தும் வண்ணம் உள்ள பாடல் வரி மற்றும் காட்சி
பாடல் வரி மற்றும் காட்சி நீக்கப்பட்ட வீடியோ
செய்திகள்:http//www.tntj.net

40 கோடி ரூபாய் செலவில் கேரளாவில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட மஸ்ஜித்

கோழிக்கோடு,பிப்.10:கேரளாவில் காந்தபுரத்தைச் சார்ந்த இஸ்லாமிய அறிஞர் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலைமையிலான ஆன்மீக மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் அமைப்பு மர்கஸ்.

இவ்வமைப்பு சார்பாக கோழிக்கோடு மாவட்டத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள காரந்தூரில் 40 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மஸ்ஜித் கட்டப்படவுள்ளது. இம்மஸ்ஜிதில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்கலாம் என மர்கஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மஸ்ஜித் கட்டுவது தொடர்பாக பேட்டியளித்துள்ள திருச்சூரைச் சார்ந்த ஆர்க்கிடெக்ட் ரியாஸ் முஹம்மது தெரிவிக்கையில், மஸ்ஜித் கட்டுவதற்கான வரைப்படம் மற்றும் தயாராக உள்ளதாக தெரிவித்தார். 8 ஏக்கரில் கட்டப்படும் இம்மஸ்ஜிதை சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். இம்மஸ்ஜித் நல்லிணக்கமும் பசுமைத் தன்மையும் எடுத்தியம்பும் வகையில் கட்டப்படும் என ரியாஸ் தெரிவிக்கிறார்.

இம்மஸ்ஜிதில் மிகப்பெரிய நூலகம், கருத்தரங்க அரங்கம் ஆகியனவும் கட்டப்படுகின்றன. இம்மஸ்ஜித் இந்தியாவின் முக்கிய கலாச்சார மையமாக திகழும் என மர்கஸ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
news source:outlookindia


அயோத்தி வழக்கின் தீர்ப்பு மே 31 வரை நீடிக்கும் - அலகாபாத் உயர்நீதிமன்றம்


அலகாபாத்,பிப்.11:அலகாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தி வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு மே 31 வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

அயோத்தியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 30-ல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நிலை மே 31 வரை நீடிக்கும் என இப்போது தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு உள்ளூர் வழக்கறிஞர் எம்.இஸ்மாயில் பரூக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 3 மறு ஆய்வு மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், வி.கே.தீட்சித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பிப்ரவரி 15-ம் தேதி வரை நீடிக்கும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது மேல் முறையீடு செய்ய 3 மாத கால அவகாசம் அளித்தது. அதுவரையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக்கூடாது என தெரிவித்திருந்தது.

ராஜேந்திர சிங், நிர்மோகி அகரா, பகவான் ராம் லாலா விராஜ்மான் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்யவேண்டும் என்று பரூக்கி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பை மூன்று சம பகுதிகளாகப் பிரித்து ஹிந்துக்கள், முஸ்லிம்கள், அங்குள்ள சாதுக்களுக்கு பிரித்து அளிக்க உத்தரவிட்டது.

இப்போது ராமர் ஆலயம் உள்ள பகுதியை ஹிந்துக்களிடம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்டப்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக முழு பெஞ்ச் ஏப்ரல் 28-ல் கூடும்.

இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது - பொருளாதார வல்லுநர்

ஹைதராபாத்,பிப்.10:சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் வல்லநர் தெரிவித்துள்ளார்.

இதர பாரம்பரிய வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய வங்கிகள் 15-20 சதவீதம் அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய வங்கியல் என்பது வட்டி இல்லாமல் லாபத்தை பங்கீடுச் செய்வதாகும். இஸ்லாமிய வங்கிகளின் தற்போதைய முதலீடு 1.2 லட்சம் கோடி அமெரிக்க டாலராகும். பாரம்பரிய வங்கிகளின் மொத்த முதலீடு 243 லட்சம் கோடி அமெரிக்க டாலராகும். பாரம்பரிய வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய வங்கிகளின் முதலீடு சதவீதம் 1 சதவீதத்திற்கு குறைவாகும். ஆனால், 1.2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை திரட்டியது கடந்த 40 ஆண்டுகளிலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதர வங்கிகளை விட 15-20 சதவீதம் அதிகமான வளர்ச்சியாகும் எனக்கூறுகிறார் இஸ்லாமிய வங்கியியல் வல்லுநரான மத்ஸ்லான் ஹுஸைன்.

ஹைதராபாத்தில் நடைபெறும் 17-வது காமன்வெல்த் சட்ட மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்தார் அவர்.

இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து 75 நாடுகள் இதனை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளன. இஸ்லாமிய வங்கியியலின் மையமாக விளங்கும் மலேசியா இஸ்லாமிய வங்கிகளில் செய்துள்ள முதலீடு மொத்தத் தொகையில் 22 சதவீதமாகும். சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளின் முதலீடு 20 சதவீதமாகும். சீனா, கொரியா ஆகிய நாடுகள் இஸ்லாமிய வங்கியியலை நடைமுறைப்படுத்த துவங்கிவிட்டன. கேரளாவில் இஸ்லாமிய வங்கியியல் நடைமுறப்படுத்த தீர்மானித்ததையும் ஹுஸைன் சுட்டிக்காட்டினார்.

இஸ்லாமிய வங்கி தொடங்குவதற்கான கேரள அரசின் தீர்மானத்தை சமீபத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதிச் செய்திருந்தது. இஸ்லாமிய வங்கியியலுக்கு அனுமதியளிக்காததால் வெளிநாட்டிலிருந்து வரும் அதிகளவிலான முதலீடுகளை நாம் இழப்பது சரியா? எனக் கேட்கிறார் கேரள அரசுக்காக வாதாடும் வழக்கறிஞர் எல்.நாகேஷ்வரராவ்.

இஸ்லாமிய வங்கியியலைக் குறித்து ஆய்வுச்செய்ய வல்லுநர் குழுவை மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் மலேசியா சுற்றுப்பயணத்தின் போது தெரிவித்ததை சுட்டிக்காட்டுகிறார் ராவ்.

சர்வதேச பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பாரம்பரிய வங்கியான பிரபல ஸ்காட்லாந்து வங்கிப் போன்றவை இழுத்து மூடியபொழுது ஒரு இஸ்லாமிய வங்கிக்கும் நெருக்கடியை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படவில்லை என தென்னாப்பிரிக்காவை மையமாக வைத்து செயல்படும் எ.எஸ்.பி.ஐ வங்கியின் டைரக்டரான எம்.ஜே.ஹுசைன் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

உமர் சுலைமானுக்கு இஸ்ரேலுடன் ரகசிய உறவு - டெலிகிராஃப்

லண்டன்,பிப்.10:மக்கள் எழுச்சியை எதிர்கொள்ள எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கினால் நியமிக்கப்பட்டவர் துணை அதிபர் உமர் சுலைமான். இவர் தினமும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை ரகசிய தொலைபேசி ஹாட்லைன் மூலமாக தொடர்புக்கொண்டு எகிப்தின் நிலைமைகள் குறித்து விவாதிப்பதாக லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் டெலிகிராஃபிற்கு அளித்த தகவல்களின்படி 2008 ஆம் ஆண்டே உமர்சுலைமான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நம்பிக்கைக்குரியவராக மாறிவிட்டார் எனத் தெரியவந்தது.

முபாரக் நோயின் காரணமாக பதவி விலக நிர்பந்தம் ஏற்படும்பொழுது உமர்சுலைமான் எகிப்தின் அதிபராக வருவதுதான் நல்லது என 2008 ஆம் ஆண்டே இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் ஆலோசகர் டேவிட் ஹாக்கம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

ஹமாஸ் காஸ்ஸாவிற்குள் ஆயுதங்களை கடத்துவதை தடுப்பதற்கு எகிப்தின் மீது நிர்பந்தம் ஏற்பட்டபொழுது உமர் சுலைமானும், தரைப்படை ராணுவத்தளபதி தன்தாவியும் 'இஸ்ரேலின் தாக்குதலை' வரவேற்ற செய்தியையும். டெலிகிராஃப் வெளியிட்டுள்ளது.

'ஹமாஸ் தனிமைப்படுத்தப்பட வேண்டும். காஸ்ஸாவில் வாழும் மக்கள் பசியுடன் வாழவேண்டும் ஆனால் பட்டினி கிடக்கூடாது’ ("go hungry but not starve".) என உமர் சுலைமான் ஒரு முறை கூறியுள்ளதாக டெலிகிராஃப் கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


ஜூலியன் அசேஞ்சை கைது செய்யும் முயற்சியில் அமெரிக்கா தோல்வி


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்சை எவ்விதத்திலாவது கைது செய்துவிட வேண்டும் என, அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு, ஜூலியன் அசேஞ் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இந்த ஆவணங்களை அமெரிக்க அரசிடம் திருடி அசேஞ்சிடம் கொடுத்ததாக அமெரிக்க ராணுவ வீரர், ப்ரேட்லி மேனிங் (22) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவருக்கும், அசேஞ்சுக்கும் தொடர்பு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அசேஞ்ச் சொல்லி தான் மேனிங், ஆவணங்களை திருடியதாக இவ்வழக்கை அமெரிக்க தரப்பு ஜோடிக்க முயல்கிறது. அதன் மூலம் தான் சட்டரீதியாக, விசாரணை என்ற பெயரில், அசேஞ்சை கைது செய்து, அமெரிக்கா கொண்டு வர முடியும். ஆனால், இருவருக்கிடையிலான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் கிடைக்காததால் அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது

தமிழ் – முஸ்லீம் கலாச்சாரங்களுக்கு இடமில்லாத சிறீலங்காவின் புதிய நாணயங்கள் ( புகைப்படங்கள் )


தமிழ் – முஸ்லீம் கலாச்சாரங்களுக்கு இடமில்லாத சிறீலங்காவின் புதிய நாணயங்கள் ( புகைப்படங்கள் )
சிறீலங்காவிற்கு வெளிநாடுகளில் இருந்து போவோர்அங்கு தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய நாணயங்களை அறிவது அவசியமாகும். சிறீலங்கா பொருளாதாரம் 5000 ரூபா நோட்டுக் கலாச்சாரத்திற்குள் போகிறது. விரைவில் அது 10.000 ரூபா நோட்டு கலாச்சாரத்திற்கு போனாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. மேலும் இந்த நாணயங்களை புரட்டிப் புரட்டிப் பார்த்தால் தமிழில் இவற்றின் பெறுமதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு புத்த சமயத்தையும், சிங்கள கலாச்சாரத்தையும் விட வேறு ஏதாவது கலாச்சாரங்கள் இருக்கிறதா என்பதை அறிய நாணயத்தில் யாதொரு இடமும் காணப்படவில்லை. சாதாரண குருவிகளுக்கும், வண்ணத்து பூச்சிகளுக்கும் உள்ள இடம் கூட தமிழ் கலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் ஒதுக்கப்படவில்லை. இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்றனவும் இடம்பெற வேண்டுமென யாரும் எண்ணியதாக தெரியவில்லை. மத சமரசம், இன சமராசம், கலாச்சார சமரசம் போன்றவற்றை நாணயத்தில் ஏற்படுத்தாமல் உள்ளத்தில் இருப்பதாக மேடைக்கு மேடை முழங்கி என்ன பயன் ? மேலும் கண்டி நடனம் மட்டுமா இலங்கையின் நடனம் என்பதைக்கூட கேட்கப்பார்க்க ஆளில்லாத அவலமே நிலவுவதையும் இந்த நாணயங்கள் உணர்த்துகின்றன.. இதோ நாணயங்கள் :

பாகிஸ்தான் ராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி


இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் இன்று அதிகாலை நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் மர்தான் நகரப்பகுதியில் உள்ளது பாகிஸ்தான் ராணுவ ஆட்கள் தேர்வு செய்யும் மையம். இங்கு வழக்கம்போல் அதிகாலையில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் அங்கு பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சற்றும் எதிர்பாராத வீரர்கள் பலர் சிக்கினர். சம்பவ இடத்திலேயே ராணுவ வீரர்கள் 10 பேர் பலியாயினர். 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது 27 பேர் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. குண்டு வெடிப்பை மனித வெடிகுண்டு நடத்தியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தலிபான் இயக்கத்தினர் தான் இது போன்ற செயலில் ஈடுபடுவார்கள் என்று போலீசார் கூறினாலும் எந்தவொரு பயங்கரவாத அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இங்கு தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் பள்ளிச்சீருடையில் வந்துள்ளான். இளம் வயதான இந்த மனிதகுண்டு மாணவன் போல ராணுவ முகாம் அருகே நெருங்கியுள்ளான் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் உசாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசா கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், இது போன்ற கோழைத்தனமான தாக்குதல் எங்களின் பாதுகாப்பு படையினரின் மன உறுதியை தகர்க்க முடியாது. தொடர்ந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சி மேற்கொளப்படும் என்றார்.

இந்திய மாணவர்கள் காலில் கட்டப்பட்ட கண்காணிப்பு கருவி அகற்றம்


அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் காலில் கட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டது.
அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் உள்ள திரிவேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் வந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவியை போலீசார் கட்டி இருந்தனர்.  இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கையால் 2 மாணவர்கள் காலில் கட்டப்பட்ட கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டது

பினாயக் சென்னுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு


ராய்ப்பூர் நக்சலைட்டுகளுக்கு உதவியதாகக் கூறி குற்றம்சாற்றப்பட்டு, தேசத் துரோகப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு பிணையில் விடுதலை அளிக்க சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
பினாயக் சென், நாராயன் சன்யால், பியூஸ் குஹா ஆகியோர் மீதான வழக்கில் அவர்கள் நாட்டிற்கு எதிராக சதி செய்து, போரில் ஈடுபட முயன்றார்கள் என்று கூறி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ, 120பி ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகளாக அறிவித்த ராய்ப்பூர் நீதிமன்ற நீதிபதி வர்மா, கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததார்.
இதனையடுத்து பினாயக் சென்னை பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்று சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் டி.பி.சர்மா, ஆர்.எல்.ஜன்வர் ஆகியோர் பிணை மனுவை நிராகரிப்பதாகத் தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து பினாயக் சென் தாயார் அனுசுயா சென் கூறுகையில், "பிணை மனு நிராகரிக்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான், இதனால் நான் ஏமாற்றமடையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் அங்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்