தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.2.11

இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது - பொருளாதார வல்லுநர்

ஹைதராபாத்,பிப்.10:சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் வல்லநர் தெரிவித்துள்ளார்.

இதர பாரம்பரிய வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய வங்கிகள் 15-20 சதவீதம் அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய வங்கியல் என்பது வட்டி இல்லாமல் லாபத்தை பங்கீடுச் செய்வதாகும். இஸ்லாமிய வங்கிகளின் தற்போதைய முதலீடு 1.2 லட்சம் கோடி அமெரிக்க டாலராகும். பாரம்பரிய வங்கிகளின் மொத்த முதலீடு 243 லட்சம் கோடி அமெரிக்க டாலராகும். பாரம்பரிய வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய வங்கிகளின் முதலீடு சதவீதம் 1 சதவீதத்திற்கு குறைவாகும். ஆனால், 1.2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை திரட்டியது கடந்த 40 ஆண்டுகளிலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதர வங்கிகளை விட 15-20 சதவீதம் அதிகமான வளர்ச்சியாகும் எனக்கூறுகிறார் இஸ்லாமிய வங்கியியல் வல்லுநரான மத்ஸ்லான் ஹுஸைன்.

ஹைதராபாத்தில் நடைபெறும் 17-வது காமன்வெல்த் சட்ட மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்தார் அவர்.

இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து 75 நாடுகள் இதனை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளன. இஸ்லாமிய வங்கியியலின் மையமாக விளங்கும் மலேசியா இஸ்லாமிய வங்கிகளில் செய்துள்ள முதலீடு மொத்தத் தொகையில் 22 சதவீதமாகும். சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளின் முதலீடு 20 சதவீதமாகும். சீனா, கொரியா ஆகிய நாடுகள் இஸ்லாமிய வங்கியியலை நடைமுறைப்படுத்த துவங்கிவிட்டன. கேரளாவில் இஸ்லாமிய வங்கியியல் நடைமுறப்படுத்த தீர்மானித்ததையும் ஹுஸைன் சுட்டிக்காட்டினார்.

இஸ்லாமிய வங்கி தொடங்குவதற்கான கேரள அரசின் தீர்மானத்தை சமீபத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதிச் செய்திருந்தது. இஸ்லாமிய வங்கியியலுக்கு அனுமதியளிக்காததால் வெளிநாட்டிலிருந்து வரும் அதிகளவிலான முதலீடுகளை நாம் இழப்பது சரியா? எனக் கேட்கிறார் கேரள அரசுக்காக வாதாடும் வழக்கறிஞர் எல்.நாகேஷ்வரராவ்.

இஸ்லாமிய வங்கியியலைக் குறித்து ஆய்வுச்செய்ய வல்லுநர் குழுவை மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப் போவதாக பிரதமர் மன்மோகன்சிங் மலேசியா சுற்றுப்பயணத்தின் போது தெரிவித்ததை சுட்டிக்காட்டுகிறார் ராவ்.

சர்வதேச பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பாரம்பரிய வங்கியான பிரபல ஸ்காட்லாந்து வங்கிப் போன்றவை இழுத்து மூடியபொழுது ஒரு இஸ்லாமிய வங்கிக்கும் நெருக்கடியை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படவில்லை என தென்னாப்பிரிக்காவை மையமாக வைத்து செயல்படும் எ.எஸ்.பி.ஐ வங்கியின் டைரக்டரான எம்.ஜே.ஹுசைன் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: