தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.2.11

40 கோடி ரூபாய் செலவில் கேரளாவில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட மஸ்ஜித்

கோழிக்கோடு,பிப்.10:கேரளாவில் காந்தபுரத்தைச் சார்ந்த இஸ்லாமிய அறிஞர் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலைமையிலான ஆன்மீக மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் அமைப்பு மர்கஸ்.

இவ்வமைப்பு சார்பாக கோழிக்கோடு மாவட்டத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள காரந்தூரில் 40 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மஸ்ஜித் கட்டப்படவுள்ளது. இம்மஸ்ஜிதில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்கலாம் என மர்கஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மஸ்ஜித் கட்டுவது தொடர்பாக பேட்டியளித்துள்ள திருச்சூரைச் சார்ந்த ஆர்க்கிடெக்ட் ரியாஸ் முஹம்மது தெரிவிக்கையில், மஸ்ஜித் கட்டுவதற்கான வரைப்படம் மற்றும் தயாராக உள்ளதாக தெரிவித்தார். 8 ஏக்கரில் கட்டப்படும் இம்மஸ்ஜிதை சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். இம்மஸ்ஜித் நல்லிணக்கமும் பசுமைத் தன்மையும் எடுத்தியம்பும் வகையில் கட்டப்படும் என ரியாஸ் தெரிவிக்கிறார்.

இம்மஸ்ஜிதில் மிகப்பெரிய நூலகம், கருத்தரங்க அரங்கம் ஆகியனவும் கட்டப்படுகின்றன. இம்மஸ்ஜித் இந்தியாவின் முக்கிய கலாச்சார மையமாக திகழும் என மர்கஸ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
news source:outlookindia


0 கருத்துகள்: