தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.2.11

பாகிஸ்தான் ராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி


இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் இன்று அதிகாலை நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் மர்தான் நகரப்பகுதியில் உள்ளது பாகிஸ்தான் ராணுவ ஆட்கள் தேர்வு செய்யும் மையம். இங்கு வழக்கம்போல் அதிகாலையில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் அங்கு பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சற்றும் எதிர்பாராத வீரர்கள் பலர் சிக்கினர். சம்பவ இடத்திலேயே ராணுவ வீரர்கள் 10 பேர் பலியாயினர். 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது 27 பேர் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. குண்டு வெடிப்பை மனித வெடிகுண்டு நடத்தியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தலிபான் இயக்கத்தினர் தான் இது போன்ற செயலில் ஈடுபடுவார்கள் என்று போலீசார் கூறினாலும் எந்தவொரு பயங்கரவாத அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இங்கு தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் பள்ளிச்சீருடையில் வந்துள்ளான். இளம் வயதான இந்த மனிதகுண்டு மாணவன் போல ராணுவ முகாம் அருகே நெருங்கியுள்ளான் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் உசாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசா கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், இது போன்ற கோழைத்தனமான தாக்குதல் எங்களின் பாதுகாப்பு படையினரின் மன உறுதியை தகர்க்க முடியாது. தொடர்ந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சி மேற்கொளப்படும் என்றார்.

0 கருத்துகள்: