தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.2.11

ஜூலியன் அசேஞ்சை கைது செய்யும் முயற்சியில் அமெரிக்கா தோல்வி


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்சை எவ்விதத்திலாவது கைது செய்துவிட வேண்டும் என, அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு, ஜூலியன் அசேஞ் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இந்த ஆவணங்களை அமெரிக்க அரசிடம் திருடி அசேஞ்சிடம் கொடுத்ததாக அமெரிக்க ராணுவ வீரர், ப்ரேட்லி மேனிங் (22) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவருக்கும், அசேஞ்சுக்கும் தொடர்பு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அசேஞ்ச் சொல்லி தான் மேனிங், ஆவணங்களை திருடியதாக இவ்வழக்கை அமெரிக்க தரப்பு ஜோடிக்க முயல்கிறது. அதன் மூலம் தான் சட்டரீதியாக, விசாரணை என்ற பெயரில், அசேஞ்சை கைது செய்து, அமெரிக்கா கொண்டு வர முடியும். ஆனால், இருவருக்கிடையிலான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் கிடைக்காததால் அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது

0 கருத்துகள்: