தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.10.11

பிபிசியில் மேலும் 2000 பேர் வேலை இழக்கின்றனர்


பிபிசி நிறுவனத்தில் பெரிய அளவில் சேமிப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், வேலையிழப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை குறைக்கும் நடவடிக்கை குறித்த செயல் திட்டத்தினை, அதன் தலைமை இயக்குநர் மார்க் தாம்ஸன் இன்று வியாழக்கிழமை கோடிட்டு காட்டியுள்ளார்.

இதன் மூலம் சுமார் 2000 பேர் வேலை இழக்க நேரிடும். அது பிபிசியின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் பத்து சதவீதத்துக்கும் கூடுதலான தொகை.

பிபிசி நிறுவனம் கூடுதல் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய சிறிய நிறுவனமாக மாறும் எனவும் மார்க் தாம்ஸன் கூறியுள்ளார்.


எனினும் இந்த சேமிப்புகள் மூலம் பெறப்படும் தொகையில் சிறிதளவை பிபிசியின் உலக சேவைக்கு அளிக்க தான் எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா குறித்த செய்திகளை மேலதிகமாக ஒலிபரப்ப பிபிசி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு மக்களால் செலுத்தப்படும் லைஸன்ஸ் ஃபீ -கட்டணத்தை உயர்த்துவதை அரசு நிறுத்தி வைத்துள்ள காரணத்தால் தனது வரவு செலவுத் திட்டத்தில் பிபிசி இந்த வெட்டுகளை செய்துள்ளது.

தொலைக்காட்சி பார்ப்பதற்கு பொதுமக்கள் செலுத்தும் கட்டணமே பிபிசியின் முக்கிய வருவாயாக இருந்து வருகிறது.

0 கருத்துகள்: