தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.2.11

செவி சாய்ப்போம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய குட்டிக்கதை. மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார்.

அப்பொழுதுதான் ஒரு டயரின் நான்கு போல்ட்களும் பழுதடைந்திருப்பதை கண்டார். அருகிலோ வாகனத்தை பழுது பார்க்கும் கடைகள் எதுவும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு மனநிலை

மலேகான்:பிரக்யாசிங், புரோகித்திடம் சி.பி.ஐ விசாரணை

மலேகான்/மும்பை,பிப்.7:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரக்யாசிங் தாக்கூர், லெஃப்டினண்ட் கர்னல் புரோகித், பிரவீண் முத்தலிக் ஆகியோரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த உள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள்தான் இவர்கள். 2006 மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் என அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இவர்களுடன் ராகேஷ் டாவ்தே, அஜய் ரஹிர்கர், ஸ்ரீநாராயணன் கல்சங்கரா, சியாம்ஸாஹு, முன்னாள் ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய, சமீர் குல்கர்னி, ஜகதீஷ் மாந்த்ரா, தயானந்த் பாண்டே, சுதாகர் சதுர்வேதி ஆகியோரையும் சி.பி.ஐ விசாரிக்க உள்ளது. இவர்கள் 2008 மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளாவர்.

சி.பி.ஐ இயக்குநர் கந்தசாமியின் தலைமையிலான சி.பி.ஐ குழு தற்பொழுது மலேகானில் முகாமிட்டுள்ளது. ஏ.டி.எஸ் சேகரித்த ஃபாரன்சிக் ஆதாரங்களை சி.பி.ஐ பரிசோதிக்கும். முதலில் இவ்வழக்கை விசாரித்த விசாரணைக் குழுவின் போலீஸ் அதிகாரிகளையும் சி.பி.ஐ விசாரிக்கும் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹராஷ்ட்ரா ஒருங்கமைவு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் படி 2008 ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஒன்பது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஜாமீன் மனுமீதான விசாரணை இன்று MCOCA நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

எகிப்திய அரசியலில் திருப்பம்: பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஒப்புதல்

கெய்ரோ,பிப்:எகிப்து நாட்டின் செல்வாக்கு மிகுந்த இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், அந்நாட்டு சர்வாதிகார அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இந்நடவடிக்கை எகிப்திய அரசுக்கும், தடைச் செய்யப்பட்ட இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்குமிடையேயான உறவில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எகிப்தில் நெடுங்காலமாக தடைச் செய்யப்பட்ட இயக்கமாகும். ஆனால், வலுவான கட்டமைப்பைக் கொண்டது. தற்பொழுது நடந்துவரும் மக்கள் திரள் போராட்டம் ஏற்படுத்திய நெருக்கடியினால் முபாரக்கின் அரசு தனது கசப்பான எதிரியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நடவடிக்கை அவ்வமைப்பிற்கு அதிகரித்துவரும் செல்வாக்கை காட்டுகிறது. "நாங்கள் இன்று பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளப் போகிறோம்" என AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் எல் எரியான் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து சர்வாதிகாரி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட துணை அதிபர் உமர் சுலைமான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் உள்பட எதிர்கட்சியினரை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

முபாரக்கை மாற்றிவிட்டு புதிதாக தேர்தலை நடத்துவதற்குரிய ஜனநாயகரீதியிலான சீர்திருத்தங்களைக் குறித்து விவாதிக்க இந்த சந்திப்புக்கு உமர் சுலைமான் ஏற்பாடுச் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

"நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்கிறோம். ஆனால், அது இளைஞர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடியதாகும்.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் தஹ்ரீர் சதுக்கத்தில் முபாரக்கின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்திவரும் இளைஞர்களின் பிரதிநிதியையும் பங்கேற்கச் செய்யவேண்டும். இளைஞர்களை சந்திக்க மறுத்தால் நாங்கள் எங்கள் முடிவை மறுபரிசீலனைச் செய்ய நேரிடும்." இவ்வாறு எரியான் கூறியுள்ளார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் இன்னொரு தலைவர் தெரிவிக்கையில், "நாங்கள் பேச்சுவார்த்தையை துவக்குவது என முடிவுச் செய்துள்ளோம். மக்களின் கோரிக்கையில் எதனை அவர்கள் ஏற்க தயாராகயிருக்கிறார்கள் என்பதை கண்காணிப்போம். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதித்தன் நோக்கம், உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளின் தலையீட்டை தவிர்ப்பதற்காகும்." என்றார் அவர்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஹம்மது முர்ஸி கூறுகையில், எங்களது அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின், முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளது என்றார்.

அல்ஜஸீராவின் கெய்ரோ செய்தியாளர் கூறுகையில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பங்கேற்கும் இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார். அவர்கள் முபாரக்கின் ராஜினாமாவைக் கோருவார்கள்.

பாராளுமன்றத்தை முடக்குதல், கடந்த சில நாட்களாக மக்கள் திரள் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்துதல், மேலும் அமைதியாக நடைபெறும் போராட்டத்தை அனுமதித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்ஜஸீராவின் அலெக்சாண்ட்ரியா (இது முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் வலுவாக காலூன்றியுள்ள பகுதியாகும்) செய்தியாளர் தெரிவிக்கையில், பெரும்பாலான மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதுக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர் என்கிறார்.

செய்தி:AFP, ALJAZEERA


நான் பதவி விலகினால் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை

கெய்ரோ,பிப்.6:எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து அகற்ற நடந்துவரும் மக்கள் திரள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகுவதற்கு மறுத்து வருகிறார்.

இந்நிலையில் ABC தொலைக்காட்சியின் எகிப்திய செய்தியாளர் கிறிஸ்டியன் அமன்பூருக்கு 30 நிமிடங்கள் அளித்த பேட்டியில் முபாரக், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கைக் குறித்து பேசுகையில், "ஒபாமா சிறந்த மனிதர். ஆனால் அவருக்கு எகிப்திய கலாச்சாரத்தைக் குறித்து தெரியாது. நான் பதவி விலகினால் இஸ்லாமிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை கைப்பற்றிவிடும்.

எகிப்தில் நான் 62 காலமாக எகிப்தில் சேவையாற்றி வருகிறேன். எகிப்தியர்கள் தங்களுக்குள் மோதுவதுக் குறித்து கவலையாக உள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுக் குறித்து கவலையில்லை. எகிப்தைக் குறித்து கவனம் செலுத்துகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார் முபாரக்.

ABC NEWS
http://www.youtube.com/watch?v=JryLoAiicEg


எகிப்து:இஸ்ரேலுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாயில் குண்டுவெடிப்பு

கெய்ரோ,பிப்.6:எகிப்து நாட்டின் அல் அர்ஸ் பகுதியில் இஸ்ரேலுக்கு கொண்டுச் செல்லப்படும் இயற்கை எரிவாயு குழாயின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.

நிலைமை மோசமடைவதாகவும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் இயற்கை எரிவாயுக் குழாய் முழுவதுமாக வெடித்துச் சிதறுவது அதிகரித்து வருவதாகவும் அரசுத் தொலைக்காட்சி கூறுகிறது. இதனை தீவிரவாத தாக்குதல் என அரசுத் தொலைக்காட்சி கூறுகிறது.

இத்தாக்குதலின் பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தீயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

வானத்தை நோக்கி 20 மீட்டர் உயரத்தில் அக்னி பிழம்புகள் எழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

1979-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் படி இஸ்ரேலுக்கு தேவையான 40 சதவீத இயற்கை எரிவாயுவை அளித்துவருவது எகிப்தாகும். இச்சம்பவத்தைக் குறித்து பரிசோதனைச் செய்வதாக இஸ்ரேல் தேசிய அடிப்படை வசதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் எகிப்து இஸ்ரேலுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயுவை அளிப்பதற்கான 1000 கோடி டாலர் தொகை மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

மேற்காசியாவின் சூழ்நிலை பாதுகாப்பாக இல்லை எனவும், பிறரை எதிர்பார்க்காமல் தங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிச்செய்வோம் எனவும் கடந்த புதன்கிழமை இஸ்ரேலின் தேசிய அடிப்படை வசதித்துறை அமைச்சர் உஸி லான்றோவோ தெரிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்,பிப்.6:குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினை வெளிக்கொணர்வதற்கான துணிச்சல் இந்தியாவிடம் இல்லை என்பதை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணை நிரூபிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

பூடான் தலைநகர் திம்புவில் இன்று இந்தியா-பாகிஸ்தான் வெளிநாட்டு செயலாளர் மட்ட பேச்சுவார்த்தை நடக்கவிருக்கையில் பாகிஸ்தான் இவ்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கும், அவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சிலருடனான தொடர்பும் வெளிக்கொணர்வதில் இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

2007-ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையில் எங்களுக்கு பெரிய அளவிலான எதிர்ப்பார்ப்பு ஒன்றும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல்பாஸித் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு நடந்த மும்பைத்தாக்குதலைத் தொடர்ந்து ஸ்தம்பித்த பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்கான முயற்சியாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஸல்மான் பஷீரும் பூட்டான் தலைநகரான திம்புவில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்கள்.

மும்பைத் தாக்குதலைக் குறித்த புலனாய்வு மற்றும் விசாரணையின் புதிய விபரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் கேட்கும்.

கடந்த ஆண்டும் இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாகிஸ்தானில் வைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு முதன்முதலாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையாகும் இது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுக்கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நடந்த குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த முக்கிய தீவிரவாதியான அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பிறகு பாகிஸ்தான், இந்தியாவிடம் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவும், விசாரணை விபரங்களை ஒப்படைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது.

பாகிஸ்தானுக்கெதிராக தீவிரவாதக் குற்றச்சாட்டை பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தும் இந்தியாவுக்கு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் விசாரணையை பூர்த்திச் செய்யக்கூட இயலாதது வருத்தத்திற்குரியது என அப்துல் பாஸித் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும் விசாரணை பூர்த்தியாகவில்லை என இந்தியா கூறுகிறது. இனியும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தாக்குதலில் பலியான 68 பேர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க? - கேள்வி எழுப்புகிறார் அப்துல் பாஸித்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

எகிப்து, யெமன் அரசுக்கெதிராக ஹேக்கர்கள் நடத்தும் போராட்டம்

கெய்ரோ,பிப்:இணையதளத்தில் கூடுதல் சுதந்திரம் வேண்டுமென வாதாடும் அனானிமஸ் (அநாமதேயர் குழுமம்) குரூப்பைச் சார்ந்த ஹாக்டிவிஸ்டுகள் (சமூக மாற்றத்திற்காக ஹேக்கிங் செய்பவர்கள்) எகிப்து, யெமன் அரசுக்கெதிராக திரும்பியுள்ளனர்.

இவர்களின் தாக்குதலில் யெமன் நாட்டு சர்வாதிகார அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் இணையதளம் செயலிழந்துள்ளது.

எகிப்து நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணையதளம் ஆகியன ஏற்கனவே ஹாக்டிவிஸ்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.

கடந்த மாதம் துனீசிய அரசின் இணையதளத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் நோபல் பரிசுக்கு பரிந்துரை



நார்வே உலக நாடுகள் பலவற்றின் ரகசியங்களை அம்பலபடுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நார்வேயை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷ்னார் வேலன் என்பவர் தான் அசேஞ்சேயின் பெயரை சிபாரிசு செய்துள்ளார். அசேஞ்சேயின் இந்த செயல் கருத்து சுதந்திரம், தகவலறியும் உரிமை, ஜனநாயக உரிமைகளை நிலை நாட்ட பயன்பட்டதாக ஷ்னார் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனின்யா நாட்டின் 24 ஆண்டு கால சர்வாதிகார அரசை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பெரும் பங்கு விக்கிலீக்சுக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், நோபல் பரிசு குழு இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பாமல் இருந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் பாலியல் புகாருக்கு ஆளாகி, பிரிட்டனில் கைது செய்யப்பட்டவர் என்பதனாலும் அமெரிக்க இராணுவ ரகசியங்களை திருடியவர் என்ற குற்றச்சாற்றுக்கும் ஆளானவர் என்பதாலும் பரிசு குழு இது விசயத்தில் அமைதிகாத்து வருகிறது

பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் மந்திரிசபை கலைப்பு

இஸ்லாமாபாத், பிப். 5-
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாகிஸ்தானில் மந்திரிசபை கலைக்கப்படுகிறது.  
பாகிஸ்தானில் பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி மந்திரிசபை ஆட்சியில் உள்ளது. அதிபராக பெனசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி உள்ளார். யூசுப் ரசா கிலானி பிரதமராக பதவி வகிக்கிறார். தற்போது, இவரது அமைச்சரவையில் 50-க்கும் மேற்பட்டோர் மந்திரிகளாக உள்ளனர். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. எனவே, தற்போதுள்ள பெரிய அளவிலான மந்திரிசபையை கலைத்து விட்டு சிறிய மந்திரி சபையை அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் செரீப்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் பிரதமர் கிலானி அவர்களின் கோரிக்கைக்கு பணிந்தார். எனவே தனது மந்திரிசபையை கலைக்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து மந்திரிகளையும் ராஜினாமா செய்யும்படி பிரதமர் கிலானி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அனைத்து மந்திரிகளும் தங்களது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்க உள்ளனர். அனேகமாக 10 முதல் 15 பேர் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த தகவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜஹாங்கீர்பாதர் தெரிவித்துள்ளார்

காஷ்மீரில் இராணுவம் சுட்டு இளைஞர் பலி


குப்வாரா காஷ்மீரின் வட பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டம் சோகல் என்ற இடத்தில், நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடந்த வந்த 22 வயது இளைஞரை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
தனது இல்லத்தில் இருந்து வெளியே நடந்த வந்த மன்சூர் அகமது மாக்ரே, இராணுவம் விடுத்த எச்சரிக்கைக்கு செவி மடுக்காமல் தொடர்ந்து நடந்து சென்றதையடுத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய இராணுவத்தின் 4வது பாரா படைப்பிரிவு கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாக்ரே சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குப்வார மாவட்டத்தின் ஹண்டுவாரா நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி, இளைஞர் ஒருவர் இராணுவத்தால் சுடப்பட்டு இறந்தார். அதுவும் குப்வாரா மாவட்டத்தில்தான் நடந்தது. இது தொடர்பாக 4வது பாரா பிரிவு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவம் துப்பாக்கியால் சுட்டு மேலும் ஒரு இளைஞர் பலியாகியிருப்பதை கண்டித்துள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த கட்டளைத் தலைமையிடம் தான் கூறிய ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன ஆலோசனை வழங்கினார் என்பதை தெரிவிக்கவில்லை