இஸ்லாமாபாத், பிப். 5-
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாகிஸ்தானில் மந்திரிசபை கலைக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி மந்திரிசபை ஆட்சியில் உள்ளது. அதிபராக பெனசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி உள்ளார். யூசுப் ரசா கிலானி பிரதமராக பதவி வகிக்கிறார். தற்போது, இவரது அமைச்சரவையில் 50-க்கும் மேற்பட்டோர் மந்திரிகளாக உள்ளனர். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. எனவே, தற்போதுள்ள பெரிய அளவிலான மந்திரிசபையை கலைத்து விட்டு சிறிய மந்திரி சபையை அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் செரீப்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் பிரதமர் கிலானி அவர்களின் கோரிக்கைக்கு பணிந்தார். எனவே தனது மந்திரிசபையை கலைக்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து மந்திரிகளையும் ராஜினாமா செய்யும்படி பிரதமர் கிலானி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அனைத்து மந்திரிகளும் தங்களது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்க உள்ளனர். அனேகமாக 10 முதல் 15 பேர் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த தகவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜஹாங்கீர்பாதர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக