தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.2.11

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்,பிப்.6:குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினை வெளிக்கொணர்வதற்கான துணிச்சல் இந்தியாவிடம் இல்லை என்பதை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணை நிரூபிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

பூடான் தலைநகர் திம்புவில் இன்று இந்தியா-பாகிஸ்தான் வெளிநாட்டு செயலாளர் மட்ட பேச்சுவார்த்தை நடக்கவிருக்கையில் பாகிஸ்தான் இவ்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கும், அவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சிலருடனான தொடர்பும் வெளிக்கொணர்வதில் இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

2007-ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையில் எங்களுக்கு பெரிய அளவிலான எதிர்ப்பார்ப்பு ஒன்றும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல்பாஸித் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு நடந்த மும்பைத்தாக்குதலைத் தொடர்ந்து ஸ்தம்பித்த பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்கான முயற்சியாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஸல்மான் பஷீரும் பூட்டான் தலைநகரான திம்புவில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்கள்.

மும்பைத் தாக்குதலைக் குறித்த புலனாய்வு மற்றும் விசாரணையின் புதிய விபரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் கேட்கும்.

கடந்த ஆண்டும் இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாகிஸ்தானில் வைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு முதன்முதலாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையாகும் இது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுக்கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நடந்த குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த முக்கிய தீவிரவாதியான அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பிறகு பாகிஸ்தான், இந்தியாவிடம் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவும், விசாரணை விபரங்களை ஒப்படைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது.

பாகிஸ்தானுக்கெதிராக தீவிரவாதக் குற்றச்சாட்டை பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தும் இந்தியாவுக்கு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் விசாரணையை பூர்த்திச் செய்யக்கூட இயலாதது வருத்தத்திற்குரியது என அப்துல் பாஸித் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும் விசாரணை பூர்த்தியாகவில்லை என இந்தியா கூறுகிறது. இனியும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தாக்குதலில் பலியான 68 பேர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க? - கேள்வி எழுப்புகிறார் அப்துல் பாஸித்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: