தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.2.11

எகிப்து:இஸ்ரேலுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாயில் குண்டுவெடிப்பு

கெய்ரோ,பிப்.6:எகிப்து நாட்டின் அல் அர்ஸ் பகுதியில் இஸ்ரேலுக்கு கொண்டுச் செல்லப்படும் இயற்கை எரிவாயு குழாயின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.

நிலைமை மோசமடைவதாகவும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் இயற்கை எரிவாயுக் குழாய் முழுவதுமாக வெடித்துச் சிதறுவது அதிகரித்து வருவதாகவும் அரசுத் தொலைக்காட்சி கூறுகிறது. இதனை தீவிரவாத தாக்குதல் என அரசுத் தொலைக்காட்சி கூறுகிறது.

இத்தாக்குதலின் பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தீயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

வானத்தை நோக்கி 20 மீட்டர் உயரத்தில் அக்னி பிழம்புகள் எழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

1979-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் படி இஸ்ரேலுக்கு தேவையான 40 சதவீத இயற்கை எரிவாயுவை அளித்துவருவது எகிப்தாகும். இச்சம்பவத்தைக் குறித்து பரிசோதனைச் செய்வதாக இஸ்ரேல் தேசிய அடிப்படை வசதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் எகிப்து இஸ்ரேலுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயுவை அளிப்பதற்கான 1000 கோடி டாலர் தொகை மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

மேற்காசியாவின் சூழ்நிலை பாதுகாப்பாக இல்லை எனவும், பிறரை எதிர்பார்க்காமல் தங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிச்செய்வோம் எனவும் கடந்த புதன்கிழமை இஸ்ரேலின் தேசிய அடிப்படை வசதித்துறை அமைச்சர் உஸி லான்றோவோ தெரிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 கருத்துகள்: