தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.11

முஸ்லிம் இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம் - எஸ்.ஐ.டி


புதுடெல்லி,பிப்.5:கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு முதல்வரின் வீட்டில் வைத்து குஜராத் மூத்த அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ((SIT Report)) உறுதிச் செய்துள்ளது.

இந்த ரகசியக் கூட்டத்தில் வைத்துதான் முஸ்லிம்களை அதிகமாக கொலைச் செய்வதற்கும், அதற்காக அரசு துறைகளை செயலிழக்க வைக்கவும் நரேந்திர மோடியும் அவரது கும்பலும் தீர்மானித்தது என குல்பர் சொசைட்டியில் கொடூரமாக் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான்
ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மோடி மறுத்துவந்தார்.

27.02.02 அன்று கோத்ராவுக்கு சென்று அஹ்மதாபாத் திரும்பிய பிறகு ரகசியக் கூட்டத்தை கூட்டினார் என ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மோடி, முதன்மைச் செயலாளரின் பொறுப்புவகித்த ஸ்வர்ணகாந்த்வர்மா, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்றிருந்த கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக் நாராயணன், டி.ஜி.பி.கே.சதுர்வேதி, அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனர்
பி.சி.பாண்டே, உள்துறைச் செயலாளர் கெ.நித்யானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மோடியின் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஸ்வர்ணகாந்த் வர்மா, அசோக் நாராயணன் ஆகியோரை விசாரித்த பொழுது கேட்கப்பட்ட, ஹிந்துக்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டுமென முதல்வர் கட்டளையிட்டாரா? என்ற கேள்வியை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இருவரும் தயாராக இல்லை என எஸ்.ஐ.டியின்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிஷ்ராவை குஜராத் மின்சாரா வாரிய ஒழுங்குமுறை கமிஷனின் செயலாளராகவும், பி.சி.பாண்டேயை போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் குஜராத் மோடி அரசு நியமித்தது.

தற்போதைய குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்படுகிறார் நித்யானந்தம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு அசோக் நாராயணன் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மோடி மற்றும் குஜராத் அரசுக்கெதிராக எதுவும் பேசாமலிருக்கத்தான் பாண்டே, மிஷ்ரா, அசோக் நாராயணன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து குஜராத் ரெவனியூ அமைச்சராக இருந்த ஹரண் பாண்டியா, நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், நீதிபதி பி.பி.சாவந்த் ஆகியோர் சுதந்திர தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தையும் எஸ்.ஐ.டியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பாண்டே கொல்லப்பட்டிருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கண் அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த வாசன் மருத்துவமனை


ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு யாரும் செய்திராத ஒரு அறுவை சிகிச்சையை செய்து சாதனை படத்திருக்கிறது சென்னை, வாசன் கண் சிகிச்சை மையம்.

வெளியேற மறுக்கிறார் அதிபர் முபாரக்: தொடர்கிறது போராட்டம்

கெய்ரோ :எகிப்து அதிபர் முபாரக்கை உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மீண்டும் லட்சக்கணக்கானோர் தாரிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தற்போதைய துணை அதிபர் ஒமர் சுலைமானை அதிபராக்குவது குறித்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க தலைப்பை கிலிக் செய்யவும்.

முபாரக் பதவி விலக ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை

கெய்ரோ, பிப். 4-
எகிப்து நாட்டில் உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என, ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியுள்ளன.
இது குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒன்றாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. எகிப்து நாட்டு மக்கள் அமைதியான முறையில் பார்லிமென்டை நடத்தும் சூழல் ஏற்பட வேண்டும். பாதுகாப்பு படையினரின் முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை. எகிப்தில் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. எனவே, அங்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை. இதன் மூலம் தான் தற்போது அங்கு நிலவும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எகிப்தில் வன்முறையை தூண்டுவோரின் செயலும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களுக்கும், அதிபர் முபாரக் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில், 10 பேர் கொல்லப்பட்டனர்.
தரிர் சதுக்கத்தில் கொட்டும் பனியிலும் மக்கள், அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தியபடி உள்ளனர். இவர்களுக்கு எதிராக முபாரக்கின் ஆதரவாளர்கள் கல்லெறிந்தும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்தும் துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் பறந்தன. இந்த வன்முறையில் 10 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. தரிர் சதுக்கத்தில் கிடந்த மூன்று சடலங்களை ஆம்புலம்ஸ் வாகனங்கள் சுமந்து சென்றன. தரிர் சதுக்கத்தைச் சுற்றிலும் ராணுவ கவச வாகனங்கள் முகாமிட்டுள்ளன. ஆனால், இந்த வன்முறையை அடக்க அவை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு சில சமயங்களில் மட்டும் வானத்தை நோக்கி பீரங்கிகள் சுடும் ஓசை கேட்கிறது.

ஜெர்மன் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியல் வெளியீடு


புதுடெல்லி, பிப்.5                                    -கருப்பு பணத்தை வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டும் அதனை வெளியிட முடியாது என்றும் பட்டியலை வெளியிடுவதில் சட்டசிக்கல் உள்ளதாகவும் பிரணாப்முகர்ஜி கூறியிருந்தார்.
 
இந்நிலையில்  ஜெர்மன் நாட்டில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் 18 பேரின் பெயர்கள் அடங்கிய ரகசிய பட்டியலை ஜெர்மன் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டது.
 
இந்த விவரம் சீலிடப்பட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெர்மன் வங்கியில் கறுப்பு பணம் போட்டிருக்கும் 18 பேரில் 15 பேரின் பெயர் பட்டியலை தெகல்கா என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் வருமாறு:-
 
1.மனோஜ் துபுலியா 2.ருபால் துபுலியா, 3.மோகன் துபுலியா, 4.ஹஸ்முக்காந்தி, 5.சிந்தன்காந்தி, 6.திலீப் மேத்தா, 7.அருண் மேத்தா, 8.அருண் கோசார், 9.குன்வாந்தி மேத்தா, 10.ரஜினிகாந்த் மேத்தா, 11.பிரபோத் மேத்தா, 12.அசோக் ஜெபுரியா, 13.ராஜ் பவுண்டேசன், 14.ஊர்வசி பவுண்டேசன், 15.அம்பூர்வனா அறக்கட்டளை ஆகியோர் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் - `கடவுள் கொடுத்தது' : தந்தை


சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. இது கடவுள் கொடுத்தது என்று இக்குழந்தைகளின் தந்தை கூறியுள்ளார்.

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். 3-ஆவது மாதத்தில் பரிசோதனைக்காக சாந்தியின் கணவர் ஆனந்த் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது, ஸ்கேன் செய்து பார்த்தபோது, சாந்தியின் வயிற்றில் 3 கருக்கள் வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில், ஜனவரி 27ஆம் தேதி சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம்  ஆவடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.

3 குழந்தைகள் வயிற்றில் இருப்பதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பத்திரமாக எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 28ஆம் தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் எடுக்கப்பட்டன.

பரிசோதனையின்போது, 3 குழந்தைகளாக தெரிந்தது, பிரசவத்தின்போது 4 குழந்தைகளாக பிறந்ததை கண்டு டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதில், தலா 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்கும்.

தற்போது, தாயும், குழந்தைகளும் நன்றாக உள்ளனர். 4 குழந்தைகள் பிறந்தது குறித்து ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``முதலில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர். பின்னர், பிரசவத்தின்போதுதான், 4 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தனர். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது ஒரு குழந்தை மறைந்த நிலையிலேயே இருந்துள்ளது. அதனால்தான், 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். எத்தனை குழந்தை என்றாலும், எல்லாம் கடவுள் கொடுத்தது'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்
.

மாயாவதி செருப்பை துடைத்த பாடிகார்ட்: மீண்டும் சர்ச்சையில் உ.பி முதல்வர்

அவுரியா,பிப்.8:உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி அணிந்திருந்த செருப்பை பணியில் இருந்த மெய்க்காப்பாளர் தனது கைக்குட்டையால் துடைத்துள்ளார்.

அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது மாயாவதிக்கு வழக்கமாகிவிட்டது. முன்பு பொதுக் கூட்டத்தில் ஆள் உயர பணமாலை, நொய்டாவில் அரசு செலவில் தனக்கு சிலை என ஒரு பெரிய சர்ச்சை பட்டியலே உள்ளது.

இந்நிலையில் தற்போது தனது மெய்க்காப்பாளரை தனது காலணியைத் துடைக்க சொல்லி தரைக்குறைவாக நடத்தியுள்ளார்.

மாயாவதி இவ்வாறு சொல்வார் என்று சற்றும் எதிர்பாராத அந்த அதிகாரி மறுமொழி பேசாமல் தனது கைக்குட்டையால் காலணியைத் துடைத்துள்ளார். அவர் காலணியில் உள்ள தூசியைத் துடைக்க மாயாவதியோ தனக்கெனவென்று அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
செய்தி:தட்ஸ் தமி