தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.11

முபாரக் பதவி விலக ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை

கெய்ரோ, பிப். 4-
எகிப்து நாட்டில் உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை என, ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியுள்ளன.
இது குறித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒன்றாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. எகிப்து நாட்டு மக்கள் அமைதியான முறையில் பார்லிமென்டை நடத்தும் சூழல் ஏற்பட வேண்டும். பாதுகாப்பு படையினரின் முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை. எகிப்தில் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. எனவே, அங்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை. இதன் மூலம் தான் தற்போது அங்கு நிலவும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எகிப்தில் வன்முறையை தூண்டுவோரின் செயலும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களுக்கும், அதிபர் முபாரக் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில், 10 பேர் கொல்லப்பட்டனர்.
தரிர் சதுக்கத்தில் கொட்டும் பனியிலும் மக்கள், அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தியபடி உள்ளனர். இவர்களுக்கு எதிராக முபாரக்கின் ஆதரவாளர்கள் கல்லெறிந்தும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்தும் துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் பறந்தன. இந்த வன்முறையில் 10 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. தரிர் சதுக்கத்தில் கிடந்த மூன்று சடலங்களை ஆம்புலம்ஸ் வாகனங்கள் சுமந்து சென்றன. தரிர் சதுக்கத்தைச் சுற்றிலும் ராணுவ கவச வாகனங்கள் முகாமிட்டுள்ளன. ஆனால், இந்த வன்முறையை அடக்க அவை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு சில சமயங்களில் மட்டும் வானத்தை நோக்கி பீரங்கிகள் சுடும் ஓசை கேட்கிறது.

0 கருத்துகள்: