தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.8.11

நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து திருவாரூரில் போராட்டம்

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூரில் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத தமிழக அரசை கண்டித்து 
கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 17-8-2011 அன்று  மாலை 4.00 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி முன்நிலை வகித்தார் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை

ஹிஜாபுக்காக போராடும் மேங்களூர் கல்லூரி மாணவி-ஹதியா


மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.

"இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை" என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் நார்வே மாதிரி தாக்குதல்களாகும்-ஒபாமா

வாஷிங்டன்:செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற தாக்குதல்களை விட தற்பொழுது அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நார்வேயில் நடந்தது போன்ற தனி நபரின் தாக்குதலாகும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அதேவேளையில் அல்காயிதாவிடமிருந்து வரும் தாக்குதல் மிரட்டலை புறந்தள்ளிவிடமுடியாது எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு தினமான செப்டம்பர் 11-ஆம் தேதி உஸாமாவை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தக்கூடும் என ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.

சஞ்சீவ் பட் கைது வாரன்ட், மனிதகுல விரோத அரசு அரசு !!


ஜாம்நகர் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1990-ஆம் ஆண்டு பதிவுச்செய்த வழக்கில் கம்தாலியா தாலுக்கின் செசன்ஸ் நீதிமன்றம் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளது. போலீஸ் தாக்கிய வழக்கில் ஒருவர் இறந்தது தொடர்பாக சஞ்சீவ் பட் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உத்தரவு பிறப்பித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாதை தொடர்ந்து சஞ்சீவ் பட்டிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராம் லீலா மைதானத்தில் நாளை முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

புதுடெல்லி, ஆக. 19-  சிறையிலிருந்து ஹசாரே நாளை தான் வெளியே வருவார் என்பதால், டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாளை முதல்தான் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அன்னா ஹசாரேவை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். எனினும் 15 நாட்கள் உண்ணாவிரதம்